திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 521 புமி அதனில் (கயிலைமலை) Thiruppugazh 521 bumiadhanil (kayilaimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான ......... பாடல் ......... புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... புமியதனிற் ப்ரபுவான ... இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், புகலியில்* வித்தகர்போல ... சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல அமிர்தகவித் தொடைபாட ... இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு அடிமைதனக்கு அருள்வாயே ... இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே. |
* புகலி = சீர்காழி: உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால் புகலி என்ற பெயர் பெற்றது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.579 pg 1.580 WIKI_urai Song number: 242 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 521 - bumi adhanil (kayilaimalai) bumiyadhaniR prabuvAna pugaliyil vith ...... thagar pOla amirtha kavith thodaipAda adimai thanak ...... aruLvAyE samariledhirth thasurmALath thani ayil vit ...... aruLvOnE namasivayap poruLAnE rajatha girip ...... perumALE. ......... Meaning ......... bumiyadhaniR prabuvAna: One, who was the greatest (Saivite) leader in this world pugaliyil vith thagar pOla: and who was born in SirkAzhi (Pugali*) as the most scholarly person, namely ThirugnAna SambandhAr, amirtha kavith thodaipAda: composed several Divine Hymns (ThEvAram) which are capable of conquering death; such immortal songs must be composed also adimai thanak aruLvAyE: by me, Your humble servant, by Your Grace. samariledhirth thasurmALath: SUran, who opposed You in the battlefield, was destroyed thani ayil vit aruLvOnE: by the unique spear which You flung at him. namasivayap poruLAnE: You are the Essence of PanchAkshara, the five letters denoting SivA, namely "namasivAya"! rajatha girip perumALE.: Your abode is the Silvery Mount (KailAs), Oh Great One! |
* Pugali means Last Haven; when the entire world was about to be destroyed, SirkAzhi was the only resort for even the DEvAs to take refuge; hence this name. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |