திருப்புகழ் 522 முகத்தைப் பிலுக்கி  (கயிலைமலை)
Thiruppugazh 522 mugaththaippilukki  (kayilaimalai)
Thiruppugazh - 522 mugaththaippilukki - kayilaimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
     தனத்தத் தனத்த தத்த ...... தனதான

......... பாடல் .........

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
     முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே

முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
     மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
     நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால்

நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
     நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
     திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும்

செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
     ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே

மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
     மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய

மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
     மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக் கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே
... முகத்தை
நன்றாக ஒழுங்கு செய்து மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்தின
மயமான மார்க் கச்சை அவிழ்த்து சற்றேனும் பின் வாங்காமல் அசைத்து,

முழுக்கக் கழப்பி எத்தி மழுப்பிப் பொருள் பறித்து
மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே
... முழுமையாகக்
காலம் போக்கியும், வஞ்சித்தும், தாமதப் படுத்தியும், (வந்தவர்களிடம்)
பொருளைப் பறித்தும், தங்களுடைய பேச்சில் மயங்கி உட்படச் செய்தும்,
அவர்களைஅழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல்,

நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்துக் களித்து மெத்த
நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார் பால்
... சிரித்து அணைத்து
முத்தம் கொடுத்து, மகிழ்ந்து, மிகுந்த பக்குவத்துடன் கழுத்தை அழுந்த
அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு

நடுக்கு உற்று அவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
நயத்துத் தியக்கி நித்தம் அழிவேனோ
... அஞ்சி நடுங்கியும்,
மிகவும் மனதை அவர்கள் பால் (ஓடை போலப்) பெருகிப் பாய வைத்தும்,
(அவர்களை) நயந்து வேண்டியும், கலக்கம் உற்று தினந்தோறும் அழிந்து
போவேனோ?

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித்
திமித்தி தித்தி என ஆடும் செகத்துக்கு ஒருத்தர் புத்ர
...
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி
என்ற தாள ஒத்துக்களுடன் கூத்தாடுகின்ற, உலகுக்கு ஒப்பற்றவராய்
நிற்கும் சிவபெருமானுடைய குமரனே,

நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி
அருள்வோனே
... (உன்னைத்) தியானித்து வணங்கும் அடியார்
கூட்டத்துக்கு இனிமையான பேற்றை அருள்பவனே,

மிகைத்துத் திடத்தொடு உற்று அசைத்துப் பொறுத்த
அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மிசைக்கு
உற்று
... மேல்சென்று திடத்துடன் பொருந்தி (மலையின் பாரத்தைப்)
பொறுத்து, ராவணன் ஆணவம் மிகுத்து பெயர்த்து எடுத்த
கயிலாய மலையில் வீற்றிருந்து,

அடுத்து மற்ற பொருப்பைப் பொடித்து இடித்து மிதித்துத்
துகைத்து விட்ட பெருமாளே.
... அந்தக் கயிலை மலைக்கு
அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரவுஞ்சத்தைப் பொடியாகும்படி
தூள் செய்து அடக்கித் தொகைத்து விட்ட பெருமாளே.


* ராவணன் திக்கு விசயம் செய்த போது அவனுடைய புஷ்பக விமானம் கயிலை
மலையைக் கடக்க முடியாமல் நிற்க, அந்த மலையை வேரோடு பறித்து எறிய
முயன்றான். மலை அசைந்தவுடன், சிவபெருமான் தமது கால் விரலால்
அம்மலையை அழுத்தினார். இராவணன் நசுக்குண்டு இன்னிசை பாடி
இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.579  pg 1.580  pg 1.581  pg 1.582 
 WIKI_urai Song number: 243 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 522 - mugaththaip pilukki (mt. kailAsh)

mukaththaip pilukki meththa minukkith thodaiththu rathna
     mulaikkac chavizhththa saiththu ...... musiyAthE

muzhukkak kazhappi yeththi mazhuppip porutpa Riththu
     mozhikkut paduththa zhaiththa ...... maLimeethE

nakaiththit tazhuththi muththa maLiththuk kaLiththu meththa
     nayaththiR kazhuththi Rukki ...... yaNaivArpAl

nadukkut Ravarkku meththa manaththaip perukka vaiththu
     nayaththuth thiyakki niththa ...... mazhivEnO

sekakkac chekakka chekka tharikkath tharikka thakka
     thimiththith thimiththi thiththi ...... yenaAdum

sekaththuk koruththar puthra ninaiththuth thuthiththa paththa
     jenaththuk kiniththa siththi ...... yaruLvOnE

misaiththuth thidaththo dutRu asaiththup poRuththa rakkan
     mikuththup peyarththe duththa ...... kayilAya

misaikkut Raduththu matRa poruppaip podiththi diththu
     mithiththuth thukaiththu vitta ...... perumALE.

......... Meaning .........

mukaththaip pilukki meththa minukkith thodaiththu rathna mulaik kacchu avizhththu asaiththu musiyAthE: After tidying up their face well, wiping it neatly and applying flashy make-up, they loosen their blouse baring the breasts adorned with chains of gems and begin to shake them nonchalantly;

muzhukkak kazhappi eththi mazhuppip poruL paRiththu mozhikkuL paduththi azhaiththu amaLi meethE: they simply while away their time, treacherously dilly-dallying, grabbing the money (from their suitors), captivating them with their speech and then leading them to the bed;

nakaiththittu azhuththi muththam aLiththuk kaLiththu meththa nayaththil kazhuththu iRukki aNaivAr pAl: they giggle and hug, showering kisses ecstatically and, with a finesse, bend their suitors' neck towards them and embrace with full pressure; of these whores,

nadukku utRu avarkku meththa manaththaip perukka vaiththu nayaththuth thiyakki niththam azhivEnO: I have been so scared that I am obsessed with them by letting my mind run like a stream towards them and beseeching them fervently; why am I destroying myself everyday utterly befuddled like this?

sekakkac chekakka chekka tharikkath tharikka thakka thimiththith thimiththi thiththi ena Adum sekaththukku oruththar puthra: To the meter of "sekakkac chekakka chekka tharikkath tharikka thakka thimiththith thimiththi thiththi" He dances; He is nonpareil in this world; You are the Son of that Lord SivA!

ninaiththuth thuthiththa paththa jenaththukku iniththa siththi aruLvOnE: To those multitude of devotees who meditate on You and worship, You gracefully offer blissful boon, Oh Lord!

mikaiththuth thidaththodu utRu asaiththup poRuththa arakkan mikuththu peyarththu eduththa kayilAya misaikku utRu: Being seated on the Mount KailAsh over which mountain the demon RAvaNan flew and steadfastly, with arrogance, attempted to uplift it bearing its entire weight on his shoulders*,

aduththu matRa poruppaip podiththu idiththu mithiththuth thukaiththu vitta perumALE.: You shattered the mount Krouncha, located near that Mount KailAsh, and crushed it to pieces, Oh Great One!


* When the demon RAvaNan flew around the world in his plane Pushpak, he was confronted by Mount KailAsh. Intending to uproot the blocking mountain, he exerted all his might when Lord SivA pressed His toe to crush him under the mountain. Later RAvaNan sang sAmagAnam to please Lord SivA and escaped.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 522 mugaththaip pilukki - kayilaimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]