திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 520 பனியின் விந்துளி (கயிலைமலை) Thiruppugazh 520 paniyinvindhuLi (kayilaimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன ...... தனதான ......... பாடல் ......... பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப் பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி மனவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள் சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில் ... பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர் ... அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி ... பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி ... (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல் போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன ... ஒன்பது துவாரங்களைக்* கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே ... இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி ... தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் ... உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் ... நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என ... (இந்த தாளத்துக்கு ஏற்ப), முழவு வளை பேரி தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க ... முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, எழு வேலை போல் அதிர ... ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, பொரு சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் சினம் அழிந்திட ... சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே ... தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, அலகை நரி சிறை இனம் களி கூரவே நகை அருளி விடும் வேலா ... பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவன் மகிழ்ந்து அருள் ஆனை முகன் மருவி மனம் மகிழ்ந்து அருள் கூர ... சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஓர் கயிலை மகிழ் திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே. ... ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.575 pg 1.576 pg 1.577 pg 1.578 WIKI_urai Song number: 241 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 520 - paniyin vindhuLi (kayilaimalai) paniyin vinthuLi pOlavE karuvinuRu maLavi langoru cUsamAy miLakuthuvar panaithe nangani pOlavE palakaniyin ...... vayaRAkip paruva munthalai keezhathAy nazhuvinila maruvi yonpathu vAsalsE ruruvamuLa pathumai yinseyal pOlavE vaLikayiRi ...... nudanAdi manavi thantheri yAmalE malacalamo dudalna karnthazhu thARiyE anaimulaiyin mayama yinRoru pAlanA yikamudaiya ...... seyalmEvi vadiva munseytha theemaiyA leyumunaiyum aRama Ranthaka meethupOy thinathinamu manama zhinthudal nARinE niniyunathu ...... kazhalthArAy thanana thanthana thAnanA thanathanana thinana thinthana theethathO thikuthathiku thakutha kunthathi thAkuthO venamuzhavu ...... vaLaipEri thavilka NampaRai kALamO dimilaithoni yinamu zhangezhu vElaipO lathiraporu samarmu kangaLin mEviyE viruthusolu ...... mavuNOrkaL sinama zhinthida thErkaLthO lariparikaL kuruthi yeNdisai mUdavE alakainari siRaiyi nangaLi kUravE nakaiyaruLi ...... vidumvElA sivanma kizhntharu LAnaimA mukanmaruvi manama kizhntharuL kUravOr kayilaimakizh thikazhku Rinjiyin mAthumAl maruvupukazh ...... perumALE. ......... Meaning ......... paniyin vin(thu) thuLi pOlavE karuvin uRu aLavil: The sperm of the size of a drop of dew enters the womb; angoru cUsamAy miLakuthuvar: there it takes the shape of a symbolic speck; then it grows into a pepper size and to the size of a betel-nut; panai the(n)nang kani pOlavE pala kaniyin vayiRu Aki: then the womb develops into the magnitude of a palm fruit, ripe coconut and later, like a jack fruit swelling the stomach; paruvamum thalai keezhathAy nazhuvi nilam maruvi: at the due time (after the pregnancy), the child reverses its position with its head down and slips down to the earth; onpathu vAsal sEr uruvam uLa pathumaiyin seyal pOlavE vaLi kayiRin udan Adi ma(n)na: like a puppet with nine portals*, it moves about with the help of oxygen acting as the string; vitham theriyAmalE mala salamodu udal nakarnthu azhuthu ARiyE: it crawls, moving the body which involuntarily excretes faeces and urine; it cries aloud and, after some time, ceases to sob; a(n)nai mulaiyin mayam ayinRu oru pAlanAy ikam udaiya seyal mEvi: it heartily imbibes mother's breast-milk; it carries out actions predestined to be performed in this birth; vadivam mun seytha theemaiyAl eyum unaiyum aRa maRanthu akam meethu pOy: the shape it grows into is a function of its past bad deeds, and so it takes some odd form; totally forgetting You, it commits sins increasingly; thina(m) thinamum manam azhinthu udal nARinEn ini unathu kazhal thArAy: likewise, each and every day I become self-destructive, with a broken heart; going forward, kindly bless me with Your hallowed feet! thanana thanthana thAnanA thanathanana thinana thinthana theethathO thikuthathiku thakutha kunthathi thAkuthO ena: (To this meter), muzhavu vaLai pEri thavil kaNam paRai kALamOdu imilai thoni inam muzhanga ezhu vElai pOl athira: the drums, conch shells, trumpets, percussion instruments, inferior banging equipment like muzhavu and ekkALam, and others made so much noise that it sounded like the roaring seven seas; poru samar mukangaLin mEviyE viruthu solum avuNOrkaL sinam azhinthida: the anger of the demons, who bombastically boasted about their valour at the various corners of the battlefield, was destroyed; thErkaL thOl ari parikaL kuruthi eN thisai mUdavE: the chariots fell; the blood gushing from elephants and strong horses covered all the eight directions; alakai nari siRai inam kaLi kUravE nakai aruLi vidum vElA: and the devils, jackals and birds (like vultures) rejoiced when You wielded the spear with a gracious laugh, Oh Lord! sivan makizhnthu aruL Anai mukan maruvi manam makizhnthu aruL kUra: Lord GaNapathi, who was blessed happily by Lord SivA with the face of an elephant, was by Your side, full of joy and grace, Or kayilai makizh thikazh kuRinjiyin mAthu mAl maruvu pukazh perumALE.: when, along with Your loving Consort VaLLi from Mount VaLLimalai, You happily took Your seat in the matchless Mount KailAsh, Oh Famous and Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |