திருப்புகழ் 492 நகையா லெத்திகள்  (சிதம்பரம்)
Thiruppugazh 492 nagaiyAleththigaL  (chidhambaram)
Thiruppugazh - 492 nagaiyAleththigaL - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தத்தன தானத்தம்
     தனனா தத்தன தானத்தம்
          தனனா தத்தன தானத்தம் ...... தனதான

......... பாடல் .........

நகையா லெத்திகள் வாயிற்றம்
     பலமோ டெத்திகள் நாணற்றின்
          நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர்

நடையா லெத்திக ளாரக்கொங்
     கையினா லெத்திகள் மோகத்தின்
          நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச்

சிகையா லெத்திக ளாசைச்சங்
     கடியா லெத்திகள் பாடிப்பண்
          திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே

சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
     டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
          செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய்

பகையா ருட்கிட வேலைக்கொண்
     டுவரா ழிக்கிரி நாகத்தின்
          படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா

பணநா கத்திடை சேர்முத்தின்
     சிவகா மிககொரு பாகத்தன்
          பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே

சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
     தடியே னுக்கருள் பாலிக்குஞ்
          சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா

சுகரே சத்தன பாரச்செங்
     குறமா தைக்கள வால்நித்தஞ்
          சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் ... சிரிப்பால்
ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன்
ஏமாற்றுபவர்கள்.

நாண் அற்று இன்நயனால் எத்திகள் நாறல் புண் தொடை
மாதர் நடையால் எத்திகள்
... வெட்கம் இல்லாமல் இனிமையான
கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை
உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு
ஏமாற்றுபவர்கள்.

ஆரக் கொங்கையினால் எத்திகள் மோகத்தின் நவிலால்
எத்திகள்
... நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம
மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள்.

தோகைப் பைம் குழல் மேகச் சிகையால் எத்திகள் ...
மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற
மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள்.

ஆசைச் சங்கடியால் எத்திகள் பாடிப் பண் திறனால்
எத்திகள்
... ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால்
ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால்
ஏமாற்றுபவர்கள்.

பாரத் திண் தெரு ஊடே சிலர் கூடிக் கொ(ண்)டு ஆடிக்
கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் செயலால்
அற்புத ஞானத் திண் கழல் தாராய்
... பெரிய நெருக்கமான
தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும்
திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு,
உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத்
தந்து காப்பாயாக.

பகையார் உட்கிட வேலைக் கொண்டு உவர் ஆழிக் கிரி
நாகத்தின் படமோடு இற்றிட சூரைச் சங்கரி சூரா
... பகைத்து
நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை
நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதிசேஷனுடைய
படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே,

பண நாகத்து இடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு
பாகத்தன் பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே
...
பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த
அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு
பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப்
பொருளை உபதேசம் செய்த சற்குருவே,

சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து அடியேனுக்கு அருள்
பாலிக்கும் சுடர் பாதக் குகனே முத்தின் கழல் வீரா
... சுக
ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத்
திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே,
முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே,

சுக ரேசத் தன பாரச் செம் குற மாதைக் களவால் நித்தம்
சுகம் மூழ்கிப் புலியூர் நத்தும் பெருமாளே.
... இன்பச் சுவை
கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன்
களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும்
சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.479  pg 2.480  pg 2.481  pg 2.482 
 WIKI_urai Song number: 633 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 492 - nagaiyAl eththigaL (Chidhambaram)

nakaiyA leththikaL vAyitRam
     palamO deththikaL nANatRin
          nayanA leththikaL nARaRpuN ...... thodaimAthar

nadaiyA leththika LArakkong
     kaiyinA leththikaL mOkaththin
          navilA leththikaL thOkaippaing ...... kuzhalmEkac

chikaiyA leththika LAsaicchang
     kadiyA leththikaL pAdippaN
          thiRanA leththikaL pAraththiN ...... theruvUdE

silarkU dikkodu AdikkoN
     duzhalvA rukkuzhal nAyeRkun
          seyalA laRputha njAnaththiN ...... kazhalthArAy

pakaiyA rutkida vElaikkoN
     duvarA zhikkiri nAkaththin
          padamO ditRida cUraicchang ...... karicUrA

paNanA kaththidai sErmuththin
     sivakA mikakoru pAkaththan
          parivAl saththupa thEsikkum ...... kuravOnE

sukanjA nakkadal mUzhkaththan
     thadiyE nukkaruL pAlikkum
          sudarpA thakkuka nEmuththin ...... kazhalveerA

sukarE saththana pAraccheng
     kuRamA thaikkaLa vAlniththam
          sukamUzh kippuli yUrnaththum ...... perumALE.

......... Meaning .........

nakaiyAl eththikaL vAyil thampalamOdu eththikaL: These women have deceptive smile. They use their saliva oozing out of chewed nut and betel leaves and cheat.

nAN atRu innayanAl eththikaL nARal puN thodai mAthar nadaiyAl eththikaL: They delude shamelessly with their sweet eyes. These whores with foul-smelling thighs mislead with their gait.

Arak kongaiyinAl eththikaL mOkaththin navilAl eththikaL: They cheat with their wholesome bosom. They dupe with their dizzying and romantic speech.

thOkaip paim kuzhal mEkac chikaiyAl eththikaL: With their youthful hair looking like feathers of the peacock and the dark cloud, they hoodwink.

Asaic changadiyAl eththikaL pAdip paN thiRanAl eththikaL: They trick using many provocative perfumes. Demonstrating their musical skill, they deceive with their songs and musical proficiency.

pArath thiN theru UdE silar kUdik ko(N)du Adik koNdu uzhalvArukku uzhal nAyeRku un seyalAl aRputha njAnath thiN kazhal thArAy: In large and densely crowded streets, some of them gather together and some roam about dancing; I wander after these whores completely captivated by them; kindly grant me Your wonderful and powerful hallowed feet by performing a miracle!

pakaiyAr utkida vElaik koNdu uvar Azhik kiri nAkaththin padamOdu itRida cUraic changkari cUrA: The hostile demons who stood in confrontation were all terrified when You wielded the Spear destroying the salty seas and the seven mountains, knocking down the hoods of the Serpent AdhisEshan and killing the demon SUran, Oh Mighty Warrior!

paNa nAkaththu idai sEr muththin sivakAmikku oru pAkaththan parivAl saththu upathEsikkum kuravOnE: She wears a waist-belt (mEkalai) embedded with a pendant shaped like a cobra's hood; She is the pearl-like Goddess, Mother SivagAmi (PArvathi); and She is concorporate on one side of the body of Lord SivA to whom You preached the True Principle with loving care, Oh Great Master!

suka njAnak kadal mUzhkath thanthu adiyEnukku aruL pAlikkum sudar pAthak gukanE muththin kazhal veerA: You graciously blessed me with the bliss of drowning in the sea of Knowledge of a heavenly pleasure by granting Your bright and hallowed feet, Oh GuhA! You are wearing victorious anklets made of pearls, Oh valorous One!

suka rEsath thana pArac chem kuRa mAthaik kaLavAl niththam sukam mUzhkip puliyUr naththum perumALE.: Her bosom is of pleasant taste; She is the damsel of the KuRavAs; with that VaLLi, You enjoyed blissful love everyday in a stealthy manner and took Your seat with relish in PuliyUr (Chidhambaram), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 492 nagaiyA leththigaL - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]