பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 477 சுகளுானக் கடலில் முழுகிக் களிக்கும்படியாக (உபதேச மொழியைத் தந்து அடியேனுக்கு அருள்பாலித்த ஒளி வீசும் திருவடியை உடைய குகமூர்த்தியே! முத்தாலாய (வீரக்) கழல் அணிந்துள்ள வீரனே! சுகச்சுவை கொண்ட கொங்கைப் பாரங்களைக் கொண்ட செம்மை வாய்ந்த குறமாது வள்ளியுடன் - களவு வழியில் நாள் தோறும் சுகம் அனுபவித்து முழுகின பெருமாள்ே! புலியூரை விரும்பி நிற்கும் பெருமாளே! (அற்புத ஞானத் திண் கழல் தாராய்) 634. ஏழுகடல்களின் மணலை அளவிட்டுப் பார்த்தால் என்ன அளவோ அந்த அளவினும் அதிகமாக உள்ளன என்னுடைய துன்பந்தரும் பிறவிகள் என்னும் அவதாரங்கள் (பிறவித் தோற்றங்கள்) இனி, உனக்கே அடைக்கலமாம் என்னுடைய உயிரும் உடலும் இனியும் பிறப்பெடுத்து உடலைவிட, (என்னால்) முடியாது; கழுகும், நரியும், எரியும், மன்னும், யமனும், பிரமனும் (கழுகு நரி, எரி, மண் என் உடலைப் பலமுறை உண்டும், யமன் என் உயிரைப் பலமுறை பிரித்தும், பிரமன் என் உடலை பலமுறை படைத்தும்) மிகவும் அலுத்துப்போய் விட்டார்கள் (சோர்வு அடைந்து உள்ளார்கள்). (என்) கடன் உன்மாட்டு அடைக்கலம் புகுவதே நான் ஆடிழை பூண்பதும் உன்னிடம் அடிமை பூணுவதே நீ விரைவில் உனது திருவடிகளைத் தந்தருளுவாயாக் (விழு) சிறந்த அழகி, விளங்கும் அழகி, மரகத வடிவினள், (விமலி) பரிசுத்தமானவள் . ஆகிய பார்வதி முன்பு ஈன்றெடுத்த குழந்தையே!