பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 475 633. சிரித்து ஏமாற்றுபவர்கள், வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள், வெட்கமில்லாது இனிய நயனால் - நயனங்களால் - கண்களால் ஏமாற்றுபவர்கள்; (நாறல்) துர்க்கந்தம் கொண்ட தசைக்கு (அல்குலுக்கு) அடுத்துள்ள தொடைகளை உடைய மாதர்கள் தங்களுடைய நடைகொண்டு ஏமாற்றுபவர்கள், (மார்பிடமெல்லாம்) நிறைந்துள்ள கொங்கை கொண்டு ஏமாற்றுபவர்கள் - மோகம் தரக்கூடிய (நவிலால்) பேச்சினால் ஏமாற்றுபவர்கள், மயிலின் தோகைபோலப் பசிய கூந்தலாகிய மேகம் ஒத்த மயிர்முடியால் ஏமாற்றுபவர்கள், ஆசையை எழுப்பும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள், பாடல்களைப் பாடித் தமது இசைஞானத் திறத்தால் ஏமாற்றுபவர்கள். பெரிய தின்னிய தெருக்களிலே - சிலர் கூடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் திரிகின்றவர். களாகிய (பொதுமாதர்கள் வசமே) திரிகின்ற அடியேனுக்கு உனது திருவிளையாடற் செயலால் அற்புத ஞானமயமான வலிய உனது திருவடியைத் தந்தருளுக. பகைத் துநின்ற அசுரர்கள் அஞ்ச, வேலாயுதத்தைக் கொண்டு, உவர்ப்பு (உப்புத் தன்மை) நிறைந்த கடலும், எழுகிரியும் அல்லது கிரவுஞ்ச்கிரியும், ஆதிசேடனுடைய பட்ங்களும் குலைந்துவிழச் சூரனைச் சங்கரித்த சூரனே! படங்கொண்ட பாம்புபோன்ற அல்குல் விளங்கும் அரையைச் சார்ந்துள முத்தாபரணம் அணிந்த (அல்லது முத்துப்போன்ற சிவகாமித் தேவியை ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானாம் சிவபிராற்கு அன்புடனே சத்து மெய்ப்பொருளை உபதேசித்த சற்குருவே!