திருப்புகழ் 475 கூந்தலாழ விரிந்து  (சிதம்பரம்)
Thiruppugazh 475 kUndhalAzhavirindhu  (chidhambaram)
Thiruppugazh - 475 kUndhalAzhavirindhu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்த தானன தந்த தனந்தன
     தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான

......... பாடல் .........

கூந்த லாழவி ரிந்து சரிந்திட
     காந்து மாலைகு லைந்து பளிங்கிட
          கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங்

கூண்க ளாமென பொங்கந லம்பெறு
     காந்தள் மேனிம ருங்குது வண்டிட
          கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்

சாந்து வேர்வின ழிந்து மணந்தப
     வோங்க வாகில்க லந்து முகங்கொடு
          தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்

தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
     வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
          சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ

தீந்த தோதக தந்தன திந்திமி
     ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
          சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்

சேண்சு லாமகு டம்பொடி தம்பட
     வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
          சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே

மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
     தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
          வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா

மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
     மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
          வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து
பளிங்கிட கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட
... கூந்தல்
தாழ்ந்து விரிவுற்றுச் சரிந்து விழ, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு
போல் விளங்க, கூரியவாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள
கண்கள் கலக்கம் கொள்ள,

கொங்கை தானும் கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட கூர்ந்த ஆடை குலைந்து
புரண்டு இரசங்கள் பாய
... மார்பகங்களும் குன்று போல எழுச்சி
கொள்ள, செழிப்புள்ள காந்தள் பூ போன்ற உடலில் இடை துவண்டு
போக, அவ்விடையைச் சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப்
புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக,

சாந்து வேர்வின்அழிந்து மணம் த(ப்)ப ஓங்கு அவாவில்
கலந்து முகம் கொடு தான் பலா சுளையின் சுவை கண்டு
இதழுண்டு
... (நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து
வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து முகத்தோடு முகம்
கொடுத்து, பலாச் சுளையின் சுவை கண்டது போல் வாயிதழை உண்டு,

மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை
மாதருடன் புளகம் கொடு சார்ந்து நாய் என அழிந்து விழுந்து
உடல் மங்குவேனோ
... காம ஆசையால் புறா, மயில் ஆகிய
புட்குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன்
புளகாங்கிதத்துடன் இணங்கி நாய் போல அழிந்து விழுந்து உடல்
வாட்டம் அடைவேனோ?

தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி
சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு
சூரைச் சேண் சுலா மகுடம் பொடிதம் பட
... தீந்த தோதக
தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு
இவைகளுடன் சேர்ந்த ஊதுகுழல், பம்பை என்னும் பறை,
பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரனுடைய
உயர்ந்து விளங்கும் கிரீடம் பொடிபட,

ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில் சேந்த வேலது
கொண்டு நடம் பயில் கந்த வேளே
... விளங்கும் அந்த ஏழு
கடல்களும் வற்றிட, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி,
(துடிக்) கூத்து ஆடுகின்ற கந்தப் பெருமானே,

மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை
கரும்புகள் விஞ்சிடு வான் குலாவு சிதம்பரம் வந்து அமர்
செங்கை வேலா
... குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில்
கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை மேலிட்டு எழுந்து
ஆகாயத்தை அளாவும் தில்லையில் வந்து வீற்றிருக்கும் செங்கை
வேலனே,

மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை
மருங்கு பொன் வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய
தம்பிரானே.
... பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை
உடைய, அழகு வாய்ந்த நாயகி (தேவயானையும்), மின்னல் போன்ற
இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும்
கொண்ட குறப்பெண்ணாகிய வள்ளியும் வணங்கிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.433  pg 2.434  pg 2.435  pg 2.436 
 WIKI_urai Song number: 616 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 475 - kUndhalAzha virindhu (chidhambaram)

thAntha thAnana thanthana thanthana
     thAntha thAnana thanthana thanthana
          thAntha thAnana thanthana thanthana ...... thanthathAna

......... Song.........

kUntha lAzhavi rinthusa rinthida
     kAnthu mAlaiku lainthupa Lingida
          kUrntha vALvizhi keNdaika langida ...... kongaithAnung

kUNka LAmena pongana lampeRu
     kAnthaL mEnima runguthu vaNdida
          kUrntha Adaiku lainthupu raNdira ...... sangaLpAyac

chAnthu vErvina zhinthuma Nanthapa
     vOnga vAkilka lanthumu kangodu
          thAnpa lAchuLai yinsuvai kaNditha ...... zhuNdumOkan

thAmpu RAmayi linkural konjida
     vAnjai mAtharu danpuLa kangodu
          sArnthu nAyena zhinthuvi zhunthudal ...... manguvEnO

theentha thOthaka thanthana thinthimi
     ANda pErikai thunthumi sangodu
          sErntha pUrikai pampaitha vaNdaikaL ...... pongucUraic

chENsu lAmaku dampodi thampada
     vOnga vEzhkada lunjuva Rangaiyil
          sEntha vElathu koNdu nadampayil ...... kanthavELE

mAntha NAruva nanguyil konjida
     thEngu vAzhaika rumpukaL vinjidu
          vAnku lAvuchi thamparam vanthamar ...... sengaivElA

mANpra kAsatha nangiri sunthara
     mEyntha nAyaki sampaima rungupon
          vArntha rUpiku RampeNva Nangiya ...... thambirAnE.

......... Meaning .........

kUnthal Azha virinthu sarinthida kAnthu mAlai kulainthu paLingida kUrntha vAL vizhi keNdai kalangida: Their hair became dishevelled and glided down; the bright strand (on the neck) lost its lusture and looked like a bunch of marbles; their eyes resembling sharp sword and keNdai fish were in a state of perturbance;

kongai thAnum kUNkaL Am ena ponga nalam peRu kAnthaL mEni marungu thuvaNdida kUrntha Adai kulainthu puraNdu irasangaL pAya: their bosom bulged like a mountain; their waist, located in the middle of their gorgeous daffodil-like body, caved in; the attire that draped that waist became ruffled and displaced, revealing excretion of soaking-wet juices;

chAnthu vErvinazhinthu maNam tha(p)pa Ongu avAvil kalanthu mukam kodu thAn palA chuLaiyin suvai kaNdu ithazhuNdu: the sandal-based decorative mark on their forehead was wiped away by the sweat spoiling the aroma; joining face to face in extreme passion, imbibing the saliva from their lips that are sweet like the pulp segment of the jack fruit,

mOkam thAm puRA mayilin kural konjida vAnjai mAtharudan puLakam kodu sArnthu nAy ena azhinthu vizhunthu udal manguvEnO: and listening to the passionate sounds of the cooing of pigeon and peacock emanating from the whores' throat, why am I being exhilarated in succumbing to these obsessive women and destroying myself like a dog, suffering the degeneration of my body?

theentha thOthaka thanthana thinthimi ANda pErikai thunthumi sangodu sErntha pUrikai pampai thavaNdaikaL pongu cUraic chEN sulA makudam poditham pada: The armies of the demon SUran marched at full volume with the noise of the drums pErikai and thunthupi, conch, trumpet, the drum called pampai and large hand-drums, all of them being beaten to the meter "theentha thOthaka thanthana thinthimi"; that SUran's lofty crown was smashed to pieces;

Ongu avvEzh kadalum chuvaRa am kaiyil sEntha vElathu koNdu nadam payil kantha vELE: and the seven prominent seas dried up when You danced the thudik kUththu (battlefield dance) holding the reddish spear in Your handsome hand, Oh Lord KandhA!

mAn thaN Aru(m) vanam kuyil konjida thEngu vAzhai karumpukaL vinjidu vAn kulAvu sithamparam vanthu amar sengai vElA: In the cool grove of mango trees, the cuckoo babbles with charm; the coconut trees, plantains and sugarcanes have grown so tall as to touch the sky in this place, Thillai (Chidhambaram), where You are seated, Oh Lord with the spear in Your reddish hand!

mAN prakAsa thanam kiri suntharam Eyntha nAyaki sampai marungu pon vArntha rUpi kuRa peN vaNangiya thambirAnE.: DEvayAnai, Your beautiful Consort with prominent and bright bosom like mountains, and VaLLi, the damsel of the KuRavAs, possessing lightning-like waist and a figure moulded from molten gold, offer You their worship, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 475 kUndhalAzha virindhu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]