திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 474 கரிய மேகமெனும் (சிதம்பரம்) Thiruppugazh 474 kariyamEgamenum (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன ...... தந்ததான ......... பாடல் ......... கரிய மேக மெனுங்குழ லார்பிறை சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் கமுக க்ரீவர் புயங்கழை யார்தன மலைக ளாஇ ணையுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை வரிய பாளி தமுந்துடை யாரிடை துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல் மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் மயில்கள் போல நடம்புரி வாரியல் குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் சரியி லாத சயம்பவி யார்முகி லளக பார பொனின்சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே சதப ணாம குடம்பொடி யாய்விட அவுணர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா அரிய மேனி யிலங்கையி ராவணன் முடிகள் வீழ சரந்தொடு மாயவன் அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் அழகு சோபி தஅங்கொளு மானன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எ(ன்)னும் புருவார் விழி கயல்கள் வாளி எ(ன்)னும் செயலார் மதி துண்ட மாதர் ... கரு நிறம் வாய்ந்த மேகம் என்று சொல்லும்படியான கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனை ஒத்த கண்கள் அம்பு போன்று செயலை ஆற்றும் தொழிலினர். சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர கமல வாழை ம(ன்)னும் தொடையார் சர சுங்க மாடை வரிய பாளிதம் உந்து உடையார் ... கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழை போன்ற தொடைகளை உடையவர். கள்ளத்தனமான நடையால் கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டுப் புடவைகளால் முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர். இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் மயில்கள் போல நடம் புரிவார் ... இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். அழகு நிறைந்த பெண்குறி நறு மணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுதலை உடைய பொது மாதர் மயிலைப் போன்று நடனம் செய்பவர். இயல் குணம் இ(ல்)லாத வியன் செயலார் வலை மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் ... நல்ல தன்மையான குணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் அழிவுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருள்வாய். சரி இ(ல்)லாத சயம்பவியார் முகில் அளக பார பொ(ன்)னின் சடையாள் சிவை சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே ... தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே. சத பணா மகுடம் பொடியாய் விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா ... நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக, அசுரர்களின் சேனை இறக்க, ஒப்பற்ற நெருப்பைக் கொண்டதுமான வேலைச் செலுத்திய வல்லவனே, செம் பொன் நிற அழகனே, அரிய மேனி இலங்கை இராவணண் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் அகிலம் ஈரெழும் உண்டவன் மா மருக ... அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய ராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த மருகனே, அண்டர் ஓதும் அழகு சோபித அம் கொ(ள்)ளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வ(ள்)ளி அருள் கொடு ஆடி சிதம்பர(ம்) மேவிய தம்பிரானே. ... தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே, எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானை, உன் ஆசைக்கு உகந்தவளாகிய மலை நில ஊரில் (வள்ளிமலையில்) வாழ்கின்ற வள்ளி நாயகி ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.429 pg 2.430 pg 2.431 pg 2.432 WIKI_urai Song number: 615 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 474 - kariya mEgamenum (chidhambaram) kariya mEka menungkuzha lArpiRai silaikoL vAku venumpuru vArvizhi kayalkaL vALi yenumcheya lArmathi ...... thuNdamAthar kamuka kreevar puyangkazhai yArthana malaika LAi Naiyungkuva dArkara kamala vAzhai manunthodai yArsara ...... sungamAdai variya pALi thamunthudai yAridai thudikaL nUli yalungkavi nAralkul maNamu lAvi yarampaiyi nArporuL ...... sangamAthar mayilkaL pOla nadampuri vAriyal kuNami lAtha viyanseya lArvalai masaki nAye nazhinthida vOvuna ...... thanputhArAy sariyi lAtha sayampavi yArmuki laLaka pAra poninchadai yALsivai saruva lOka savunthari yALaruL ...... kanthavELE sathapa NAma kudampodi yAyvida avuNar sEnai madinthida vEyoru thazhalkoL vElai yeRinthidu sEvaka ...... semponvAkA ariya mEni yilangaiyi rAvaNan mudikaL veezha saranthodu mAyavan akila meere zhumuNdavan mAmaru ...... kaNdarOthum azhaku sOpi thaangoLu mAnana viputhai mOki kuRinjiyin vAzhvaLi aruLko dAdi chithampara mEviya ...... thambirAnE. ......... Meaning ......... kariya mEkam enum kuzhalAr piRai silai koL vAku e(n)num puruvAr vizhi kayalkaL vALi e(n)num seyalAr mathi thuNda mAthar: They have dark hair that looks like the black cloud. Their beautiful eyebrows are of the shape of the crescent moon and the bow. Their kayal-fish-like eyes are capable of performing the deed of the arrow. These whores have moon-like face. kamuka kreevar puyam kazhaiyAr thana malaikaLA iNaiyum kuvadAr kara kamala vAzhai ma(n)num thodaiyAr sara sunga mAdai variya pALitham unthu udaiyAr: Their neck is like the betelnut tree. Their shoulders are soft like the bamboo. Their breasts are solid like the mountains. Their hands are like the lotus and their thighs like the plantain. They adorn themselves with prominent silk sarees acquired with gold earned by them through surreptitious methods. idai thudikaL nUliyalum kavin Ar alkul maNam ulAviya rampaiyinAr poruL sanga mAthar mayilkaL pOla nadam purivAr: The waist of these beautiful women is of the shape of the hand-drum and slender like the thread. They are like the pretty celestial maids with fragrant genitals. These whores, who dance like the peacock, offer sexual favours for the sake of money. iyal kuNam i(l)lAtha viyan seyalAr valai masaki nAyen azhinthidavO unathu anpu thArAy: These women do not have any virtue whtsoever but are capable of performing strange tasks. Why is my mind mired in these whores, destroying me thoroughly? Kindly grant me Your love and blessing, Oh Lord! sari i(l)lAtha sayampaviyAr mukil aLaka pAra po(n)nin sadaiyAL sivai saruva lOka savunthariyAL aruL kantha vELE: She is a matchless Deity who is self-existent; She has thick hair like the cloud; She is Goddess Sivai having matted hair of gold; Her beauty surpasses in all the worlds; and She is UmA DEvi who delivered You, Oh Lord KandhA! satha paNA makudam podiyAy vida avuNar sEnai madinthidavE oru thazhal koL vElai eRinthidu sEvaka sempon vAkA: Hundreds of hefty crowns of the demons were shattered to pieces and the entire armies of the demons were destroyed as You wielded the spear spewing matchless fire, Oh Mighty One! You have a golden complexion, Oh Handsome One! ariya mEni ilangai iravaNaN mudikaL veezha saram thodu mAyavan akilam eerezhum uNdavan mA maruka: He is the mystic who wielded a unique arrow that severed the heads of RAvaNan, the king of LankA, who possessed an extra-ordinary body; He is the One who devoured the fourteen worlds; and You are the great nephew of that Lord VishNu! aNdar Othum azhaku sOpitha am ko(L)Lum Anana viputhai mOki kuRinjiyin vAzh va(L)Li aruL kodu Adi chithampara(m) mEviya thambirAnE.: You have a beautiful glow extolled by all the celestials, Oh Lord! DEvayAnai, the celestial maid with a pretty face, and Your favourite consort, VaLLi, who lives in the hilly town (VaLLimalai) are both in Your close company being subjected to Your playful pranks, and You are seated here in Chidhambaram along with them, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |