பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 429 616. கூந்தலானது தாழ விரிவுற்றுச் சரிந்துவிழ, பிரகாசிக்கின்ற மாலை குலைவுற்றுப் பளிங்குபோல விளங்க, கூரிய ஒளி பொருந்திய கண் கெண்டை மீன்போலக் கலக்கம் கொள்ள, கொங்கைகளும் குன்றுபோல எழுச்சி கொள்ள, செழிப்புள்ள காந்தள். பூ அனைய உடலில் இடை துவட்சிகொள்ள, சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப் புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக, (நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து, (முகம் கொடுத்து) முகத்தொடு முகம் வைத்து, பலாச்சுளையின் சுவை கண்டதுபோல வாயிதழை உண்டு காம ஆசையினால் - புறா, மயில் (ஆதிய புட்குரலுடன்) கொஞ்ச ஆசை வைத்த மாதர்களுடன், புளகாங்கிதத்துடன் இணங்கி அடியேன் (அல்லது நாய்போல) அழிந்து விழுந்து உடல் வாட்டமடைவேனோ! திந்த தோதக தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துமி, சங்கு இவைகளுடன் பூரிகை (ஊதுகுழல்), பம்பை (ஒருவிதபறை), தவண்டைகள் (பேருடுக்கைகள்) இவைதம் ஒலிமிக்கு எழ வந்த சூரனுடைய உயர்ந்து விளங்கும் மணிமுடி பொடிதான்பட, விளங்கும் அந்த ஏழு கடல்களும் வற்றிப்போக, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி நடனம் பயின்ற (துடிக்கூத்து ஆடின.) கந்தவேளே! மாந்தனாருவனம் (தண் ஆரும் மாவனம்) குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையிலே குயில் கொஞ்ச தேங்கு (நிறைந்த வாழைகளும் (அல்லது தெங்கும் (தென்னையும்) வாழையும்) கரும்புகளும் மேலிட்டெழுந்து ஆகாயத்தை அளாவும் சிதம்பரம் என்னும் தலத்தில் வந்து வீற்றிருக்கும் செங்கை வேலனே!