திருப்புகழ் 476 அத்தன் அன்னை  (சிதம்பரம்)
Thiruppugazh 476 aththanannai  (chidhambaram)
Thiruppugazh - 476 aththanannai - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான

......... பாடல் .........

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி

அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல ...... படிபாடி

முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள ...... முணராதே

முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும்

பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வர் உடனாகி
... தந்தை, தாய், வீடு,
வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய
பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய்,

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை
வல்லபடி பாடி
... செய்தொழிலால் (போதாத) வருமானம், கற்று
(முடிவுறாத) கல்வி, (அல்லல் தரும்) உறவினர் என்று சொல்லப்படும்
துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி,

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன்
என்ன உள்ளம் உணராதே
... முக்தி தர வல்லவன் (நீ ஒருவனே)
என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின்
காதலன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல்,

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும்
முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ
... முழுமையான அறியாமை
நிறைந்த புலவனும் எளிமை கொண்ட மூடனுமாகிய நான் இப்படி வருந்தி
இரங்குவது நீங்காதோ?

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணின் உள் உதித்து
மன்னு பிள்ளை முருகோனே
... தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும்
தில்லையில் நடனமாடும் நடராஜரின் கண்களினின்றும் தோன்றி நிலை
பெற்றுள்ள மகனாகிய முருகனே,

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய ... பல சித்திகளுக்கு
இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தோனே,

சித்ர வண்ணவல்லி அலர் சூடும் பத்தர் உண்மை சொல் உள்
உற்ற செம்மல்
... அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூட்டிப்
பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும்,
செம்மலே,

வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா ... வெள்ளை
யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் பெண் (தேவயானை)
தழுவும் அழகிய மார்பனே,

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை
மஞ்ஞை வல்ல பெருமாளே.
... பச்சை நிறமான வன்னி, அல்லி,
வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய
மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.435  pg 2.436  pg 2.437  pg 2.438 
 WIKI_urai Song number: 617 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 476 - aththan annai (chidhambaram)

aththa nannai yillam vaiththa sonnam veLLi
     aththai naNNu selva ...... rudanAki

aththu paNNu kalvi sutRa mennu malla
     laRtRu ninnai valla ...... padipAdi

muththa nenna vallai yaththa nenna vaLLi
     muththa nenna vuLLa ...... muNarAthE

mutta veNmai yuLLa patta neNmai koLLu
     mutta ningnga naiva ...... thozhiyAthO

thiththi mannu thillai nirththar kaNNi nuLLu
     thiththu mannu piLLai ...... murukOnE

siththi mannu seyya saththi thunnu kaiya
     cithra vaNNa valli ...... yalarcUdum

paththa ruNmai sollu LutRa semmal veLLi
     paththar kanni pullu ...... maNimArpA

pacchai vanni yalli cecchai cenni yuLLa
     pacchai manjnjai valla ...... perumALE.

......... Meaning .........

aththan annai illam vaiththa sonnam veLLi aththai naNNu selvar udanAki: Being in the company of father, mother, house, accumulated gold and silver, aunt, and close children, and

aththu paNNu kalvi sutRam ennum allal atRu ninnai vallapadi pAdi: facing impediments like (inadequate) income from the job, (incomplete) education and (troublesome) relatives, I have been singing Your praise to the best of my ability;

muththan enna vallai aththan enna vaLLi muththan enna uLLam uNarAthE: but, in my heart, I failed to realise that You are the only one that can liberate me, that You are the Lord seated at Thiruvallam and that You are the consort of VaLLi!

mutta veNmai uLLa pattan eNmai koLLum muttan ingngan naivathu ozhiyAthO: Although I am a poet, I am filled with total ignorance, being such a foolish simpleton; will this miserable feeling and self-pity never end?

thiththi mannum thillai nirththar kaNNin uL uthiththu mannu piLLai murukOnE: You materialised from the eyes of Lord SivA, who dances in Chidhambaram to the meter of "thiththi", and steadily grew up as His son, Oh Lord MurugA!

siththi mannu seyya saththi thunnum kaiya: You hold in Your hand the spear that has been the source of many miracles!

cithra vaNNavalli alar cUdum paththar uNmai sol uL utRa semmal: You are the great Lord who is worshipped by the beautiful VaLLi by offering flowers and who resides in the truthful speech of Your devotees!

veL ipaththar kanni pullum maNi mArpA: Your chest is hugged by DEvayAnai, the daughter of IndrA who owns the white elephant, AirAvadham!

pacchai vanni alli secchai cenni uLLa pacchai manjnjai valla perumALE.: You adorn Your head with the green flowers of vanni, alli and vetchai, and You are the Lord capable of mounting and driving the green peacock, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 476 aththan annai - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]