திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 461 தனத்தில் குங்குமத்தை (சிதம்பரம்) Thiruppugazh 461 thanaththilkungkumaththai (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான ......... பாடல் ......... தனத்திற்குங் குமத்தைச்சந் தனத்தைக்கொண் டணைத்துச்சங் கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன் தனிற்கொத்துந் தரித்துச்சுந் தரத்திற்பண் பழித்துக்கண் சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் தரத்தைக்கொண் டசைத்துப்பொன் தகைப்பட்டுந் தரித்துப்பின் சிரித்துக்கொண் டழைத்துக்கொந் தளத்தைத்தண் குலுக்கிச்சங் கலப்புத்தன் கரத்துக்கொண் டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் புனித்தப்பஞ் சணைக்கட்டிண் படுத்துச்சந் தனப்பொட்டுங் குலைத்துப்பின் புயத்தைக்கொண் டணைத்துப்பின் சுகித்திட்டின் புகட்டிப்பொன் சரக்கொத்துஞ் சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் புணர்ப்பித்தும் பிடித்துப்பொன் கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன் திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண் சிறுப்பப்புண் பிடித்தப்புண் புடைத்துக்கண் பழுத்துக்கண் டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ சினத்துக்கண் சிவப்பச்சங் கொலிப்பத்திண் கவட்டுச்செங் குவட்டைச்சென் றிடித்துச்செண் டரைத்துக்கம் பிடிக்கப்பண் சிரத்தைப்பந் தடித்துக்கொண் டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங் களித்துக்கொண் டளிப்புட்பஞ் சிறக்கப்பண் சிரத்திற்கொண் டிறைத்துச்செம் பதத்திற்கண் திளைப்பத்தந் தலைத்தழ்த்தம் புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே பனித்துட்கங் கசற்குக்கண் பரப்பித்தன் சினத்திற்றிண் புரத்தைக்கண் டெரித்துப்பண் கயத்தைப்பண் டுரித்துப்பன் பகைத்தக்கன் தவத்தைச்சென் றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே படைத்துப்பொன் றுடைத்திட்பன் தனைக்குட்டும் படுத்திப்பண் கடிப்புட்பங் கலைச்சுற்றும் பதத்தப்பண் புறச்சிற்றம் பலத்திற்கண் களித்தப்பைம் புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தனத்தில் குங்குமத்தைச் சந்தனத்தைக் கொண்டு அணைத்துச் சங்கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன் தனில் கொத்தும் தரித்துச் சுந்தரத்தில் பண்பு அழித்து ... மார்பகத்தில் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் கொண்டு அப்பி, சங்கிலிக் கொத்தும், மினுக்கும் பொன்னாலாகிய கூட்டமான நகைகளையும் அணிந்து, தமது அழகில் ஈடுபட்டவரின் நற்குணங்களை அழித்து, கண் சுழற்றிச் சண்பகப் புட்பம் குழல் மேவித் தரத்தைக் கொண்டு அசைத்துப் பொன் தகைப் பட்டும் தரித்துப் பின் சிரித்துக் கொண்டு அழைத்துக் கொந்தளத்தைத் தண் குலுக்கி ... கண்களைச் சுழற்றி, சண்பக மலர்களை கூந்தலில் வைத்து அலங்கரித்து, தமது உடலைக் கொண்டு மேன்மை விளங்க அசைத்து, பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்து, பின்பு சிரித்து, கொண்டு வந்து அழைத்துச் சென்று கூந்தலை அன்பாக அசைத்து, சங்கு அலப்புத் தன் கரத்துக் கொண்டு அணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டு உறவாடிப் புனித்தப் பஞ்சு அணைக் கண் திண் படுத்துச் சந்தனப் பொட்டும் குலைத்துப் பின் புயத்தைக் கொண்டு அணைத்து ... வளையல்கள் சப்திக்கும் தமது கைகளால் கொண்டு போய் அணைத்து, பெருங் களிப்புடன் உறவு பூண்டு, உயர்ந்த பஞ்சணை மெத்தையில் நன்றாகப் படுத்து, (வந்தவருடைய) சந்தனப் பொட்டைக் கலைத்து, பின்பு தனது கைகளால் அவர்களது தோளைத் தழுவி, பின் சுகித்திட்டு இன்பு கட்டிப் பொன் சரக் கொத்தும் சிதைப்பப் பொன் தரப்பற்றும் பொது மாதர் புணர்ப் பித்தும் பிடித்துப் பொன் கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன் ... பின்னர் இன்ப சுகத்தை அனுபவித்து, பொன் கட்டிகளால் ஆன மணி வடத் திரள்களும் செலவழித்துத் தொலையும்படி பொன்னைத் தருமாறு பற்றுகின்ற விலைமாதர்களுடன் சேரும் பைத்தியமும், (அந்த மாதர்களுக்குப்) பொன்னைக் கொடுத்த பிறகு கலக்கம் அடையும் மனமுடைய நான், திணிக் கட்டும் சிதைத்துக் கண் சிறுப்பப் புண் பிடித்த அப்புண் புடைத்துக் கண் பழுத்துக் கண்டவர்க்குக் கண் புதைப்பச் சென்று உழல்வேனோ ... உடல் வலிமை சிதைத்துத் தளர்ந்து, கண்கள் சிறுத்துப் போய், உடம்பெல்லாம் புண்ணாகி, அந்தப் புண் வீங்கிச் சீழ் பிடித்து, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செல்லும்படியாக நான் திரிவேனோ? சினத்துக் கண் சிவப்பச் சங்கு ஒலிப்பத் திண் கவட்டுச் செம் குவட்டைச் சென்று இடித்துச் செண் தரைத் துக்கம் பிடிக்கப் பண் சிரத்தைப் பந்தடித்துக் கொண்டு இறைத்துத் தெண் கடல் திட்டும் கொ(ள்)ளை போக ... கோபித்துக் கண் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய கிரெளஞ்ச மலையைப் பொடிபடுத்தி, விண்ணோரையும் மண்ணுலகில் உள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்திய அசுரர்களுடைய தலைகளை பந்தடிப்பது போல் அடித்து, அத் தலைகளைப் போர்க் களத்தில் எங்கும் சிதற வைத்து, தெள்ளிய கடலினை மேடாக மாறச் செய்து, செழித்துப் பொன் சுரர் சுற்றம் களித்துக் கொண்டு அளிப் புட்பம் சிறக்கப் பண் சிரத்தில் கொண்டு இறைத்துச் செம் பதத்தில் கண் திளைப்பத் தந்து தலைத் தழ்த்து அம் புகழ்ச் செப்பும் சயத்துத் திண் புய வேளே ... செழிப்புற்று பொன்னுலகத்தில் வாழும் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, வண்டு மொய்க்கும் மலர்களை விளக்கமுற அலங்காரமாகத் தலையில் சுமந்து சென்று, உனது செவ்விய திருவடியில் இட்டுப் பூஜித்துத் தமது கண்கள் மகிழ, தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் வெற்றி விளங்கும் வலிய திருப்புயங்களை உடைய தலைவனே, பனித்து உட்க அங்கசற்குக் கண் பரப்பித் தன் சினத்தில் திண் புரத்தைக் கண்டு எரித்துப் பண் கயத்தைப் பண்டு உரித்துப்பன் பகைத் தக்கன் தவத்தைச் சென்று அழித்துக் கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே ... நடுங்கி அச்சம் கொள்ளுமாறு மன்மதன் மேல் நெற்றிக் கண்ணைச் செலுத்தி, தான் கொண்ட கோபத்தால் வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, முன்பு சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்த திறம் கொண்டவரும், பகைமை பூண்டிருந்த தக்ஷனுடைய யாகத்தைப் போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தருமான* சிவபெருமான் ஈன்ற செல்வமே, படைத் துப்பு ஒன்றுடைத் திட்பன் தனைக் குட்டும் படுத்திப் பண் கடிப் புட்பம் கலைச் சுற்றும் பதத்த பண்புறச் சிற்றம்பலத்தின் கண் களித்தப் பைம் புனத்தில் செம் குறத்திப் பெண் பெருமாளே. ... படைக்கின்ற ஆற்றல் ஒன்றை உடைய திறமை கொண்டவனாகிய பிரமனை தலையில் குட்டித் தண்டித்தவனே, தகுதியான வாசனை மிக்க மலர்களைக் கொண்ட திருவடிகளை உடையவனே, பரத சாஸ்திர முறைப்படி சுழன்று நடனம் செய்யும் பாதங்களை உடையவனே, அலங்காரத்துடன் திருச் சிற்றம்பலத்தில் குளிர்ச்சி உற மகிழ்பவனே, பசுமையான தினைப் புனத்தில் வாழும் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே. |
* சுந்தரமூர்த்தி நாயனார் ஒருமுறை சிவபெருமானை பித்தா என்று அழைத்தார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.391 pg 2.392 pg 2.393 pg 2.394 pg 2.395 pg 2.396 WIKI_urai Song number: 602 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 461 - thanaththil kungkumaththai (chidhambaram) thanaththiRkung kumaththaicchan thanaththaikkoN daNaiththucchang kilikkoththum pilukkuppon thaniRkoththun thAiththucchun tharaththiRpaN pazhiththukkaN chuzhatRicchaN pakapputpang ...... kuzhalmEvith tharaththaikkoN dasaiththuppon thakaippattun thariththuppin siriththukkoN dazhaiththukkon thaLaththaiththaN kulukkicchang kalappuththan karaththukkoN daNaiththuccham pramiththukkoN ...... duRavAdip puniththappan jaNaikkattiN paduththucchan thanappottung kulaiththuppin puyaththaikkoN daNaiththuppin sukiththittin pukattippon sarakkoththunj chithaippappon tharappatRum ...... pothumAthar puNarppiththum pidiththuppon koduththuppin pithircchiththan thiNikkattunj chithaiththukkaN chiRuppappuN pidiththappuN pudaiththukkaN pazhuththukkaN davarkkukkaN puthaippacchen ...... RuzhalvEnO sinaththukkaN sivappacchan golippaththiN kavattuccheng kuvattaicchen RidiththuccheN daraiththukkam pidikkappaN siraththaippan thadiththukkoN diRaiththuththeN kadatRittung ...... koLaipOkac chezhiththuppon surarcchutRang kaLiththukkoN daLipputpanj chiRakkappaN siraththiRkoN diRaiththucchem pathaththiRkaN thiLaippaththan thalaiththazhththam pukazhccheppunj chayaththuththiN ...... puyavELE paniththutkang kasaRkukkaN parappiththan sinaththitRiN puraththaikkaN deriththuppaN kayaththaippaN duriththuppan pakaiththakkan thavaththaicchen Razhiththukkon RadaRpiththan ...... tharuvAzhvE padaiththuppon Rudaiththitpan thanaikkuttum paduththippaN kadipputpang kalaicchutRum pathaththappaN puRacchitRam palaththiRkaN kaLiththappaim punaththiRcheng kuRaththippeN ...... perumALE. ......... Meaning ......... thanaththil kungumaththaic chanthanaththaik koNdu aNaiththuc changilik koththum pilukkup pon thanil koththum thariththuc chuntharaththil paNpu azhiththu: They smear a mixture of vermillion and sandalwood powder richly on their bosom. They wear a bunch of chains around their neck and many a jewellery made of glittering gold. They demolish all the virtues of those men who fall for their beauty. kaN chuzhatRic chaNpakap putpam kuzhal mEvith tharaththaik koNdu asaiththup pon thakaip pattum thariththup pin siriththuk koNdu azhaiththuk konthaLaththaith thaN kulukki: They roll their eyes and decorate their hair with shanbaga (champak) flowers. They move their body parts majestically. Wearing gilded silk saree, they giggle and bring their suitors home, shaking their coiffured hair stylishly. sangu alapputh than karaththuk koNdu aNaiththuc champramiththuk koNdu uRavAdip puniththap panju aNaik kaN thiN paduththuc chanthanap pottum kulaiththup pin puyaththaik koNdu aNaiththu: They hug their suitors bringing their arms around their neck while jingling the bangles. They flirt with them with immense joy, laying their suitors on the luxurious mattress, made of cotton, on their bed. They erase the sandalwood mark on the forehead of their suitors and then clutch their shoulders in a tight embrace with their arms. pin sukiththittu inpu kattip pon sarak koththum chithaippap pon tharappatRum pothu mAthar puNarp piththum pidiththup pon koduththup pin pithirc chiththan: Enjoying the ensuing love-making, I have been squandering away thick strings of chains, studded with gems and made of solid gold. I have been obsessed with the madness of union with these gold-gobbling whores and, at the same time, I was troubled in my mind after frittering away the gold to those women. thiNik kattum chithaiththuk kaN chiRuppap puN pidiththa appuN pudaiththuk kaN pazhuththuk kaNdavarkkuk kaN puthaippac chenRu uzhalvEnO: The firm and solid form of my body was shattered and sagging, my eyes shrank, the body becoming afflicted with sores; and with puss forming all over the bulging sores, am I to roam about as the laughing stock of all those passing by, with their eyes shut in revulsion? sinaththuk kaN sivappac changu olippath thiN kavattuc chem kuvattaic chenRu idiththuc cheN tharaith thukkam pidikkap paN siraththaip panthadiththuk koNdu iRaiththuth theN kadal thittum ko(L)Lai pOka: With Your eyes reddening due to anger, You shattered the reddish mount Krouncha against the background noise of conch blowing; the heads of the demons, who caused insurmountable hardship to the celestials and terrestrials, were tossed off and strewn about like balls on the battlefield and the clear sea dried up exposing the sandy basin; chezhiththup pon surar chutRam kaLiththuk koNdu aLip putpam siRakkap paN siraththil koNdu iRaiththuc chem pathaththil kaN thiLaippath thanthu thalaith thazhththu am pukazhc cheppum sayaththuth thiN puya vELE: the celestials and their kin who live in the rich, fertile and golden land prominently carry on their heads bunches of flowers around which the beetles hum about; they offer those flowers at Your hallowed feet in worship, with their heads bowed down and eyes ecstatic with pleasure, singing the beautiful songs of Your glory, Oh Leader with strong shoulders radiating victory! paniththu utka angasaRkuk kaN parappith than sinaththil thiN puraththaik kaNdu eriththup paN kayaththaip paNdu uriththuppan pakaith thakkan thavaththaic chenRu azhiththuk konRa adal piththan tharu vAzhvE: Scaring away Manmathan (God of Love), He wielded a fiery look from His third eye on the forehead; with immense rage of anger He burnt down the mighty Thiripuram with His scorching eye; when once an elephant charged Him with frenzied anger, He peeled of its hide with His might; He entered the site of sacrifices performed by Dhakshan who nurtured enmity and destroyed all his sacrifices including him; that mighty and crazy* Lord SivA delivered You as His Son, Oh Treasure! padaith thuppu onRudaith thitpan thanaik kuttum paduththip paN kadip putpam kalaic chutRum pathaththa paNpuRac chitRampalaththin kaN kaLiththap paim punaththil chem kuRaththip peN perumALE.: You hit by way of punishment with Your knuckles on the head of BrahmA who is an expert in His role of creation; Your hallowed feet are adorned with flowers of apt fragrance offered by way of worship; You possess dexterous feet that dance with a measured rotation as defined in the texts of Bharatha NAtya texts; You rest with relish in this cool place Thiruc chitRambalam (Chidhambaram), adorning Yourself with nice ornaments; You are the Lord of VaLLi, the reddish damsel of the KuRavAs, who lives in the fertile millet-field, Oh Great One! |
* Sundaramurthy NAyanAr once called Lord SivA a crazy one. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |