பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 389 உயர்ந்த சுத்தமான பஞ்சணை மெத்தையிலே நன்றாகப் படுத்து வந்தவனுடைய சந்தனப் பொட்டைக் கலைத்துப் பின்பு தனது கைகளால் அணைத்துப் பின்பு (சுகத்திட்டு இன்பு) இன்பச் சுகத்தை அனுபவித்து (கட்டிப் பொன்) பொன் கட்டிகளால் ஆன மணிவடத்திரளும் (சிதைப்ப) செலவழிந்து தொலையும்படி, பொன்னைத் தரும்படி, பற்றுகின்ற பொதுமகளிரைப் (புணரும்) சேரும்) (பித்தும்) பைத்தியமும் பிடித்து (அவர்களுக்குப்) பொன்னைக் கொடுத்துப் பின்பு (பிதிர்) கலங்கும் மனமுடையவனாகிய நான், (என்னுடைய) வலிமை பொருந்திய (உடல்) கட்டும் சிதைவுண்டு தளர்ந்து, கண்ணும் சிறுத்துப்போய், புண் பிடித்து, அந்தப் புண் வீங்கிப் பருத்து, கண் பழுத்து - புண்ணின் இடமெல்லாம் பழுத்து (அழுகி) அதைப் பார்த்தவர்களெல்லாம் கண்ணை மூடிச் செல்லும்படியாக நான் திரிவேனோ! கோபித்து, (அதனால்) கண்கள் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய மலை - கிரவுஞ்சத்தைப் பொடிபடுத்தி விண்ணுலகத்தாரையும், மண்ணுலகத்தாரையும் துக்கம் பிடிக்கப் பண்ணின (அசுரர்களின்) சிரங்களைப் பந்தடிப்பதுபோல அடித்து அவைதமை (போர்க்களம்) எங்கும் சிதற வைத்துத் தெளிய கடல் (திட்டு) மேடாம் தன்மையைக் (கொளை) கொள்ளுதலை அடைந்து நிற்க, செழிப்புற்றுப் பொன்னுலகத்துத் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, அம் மகிழ்ச்சியுடன் வண்டுகள் மொய்க்கும் மலர்களை (மலர்க்கூடைகளை) விளக்கமுறத்தக்கபடி e அல்லது அலங்கார மாக தலையிற் சுமந்து சென்று இட்டுப் பூசித்து உனது செவ்விய திருவடிகளில், தமது கண்கள் மகிழத் தமது தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் ஜயம் விளங்கும் வலிய திருப்புயத்தை உடைய வேளே!