திருப்புகழ் 449 கனகசபை மேவும்  (சிதம்பரம்)
Thiruppugazh 449 kanagasabaimEvum  (chidhambaram)
Thiruppugazh - 449 kanagasabaimEvum - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

......... பாடல் .........

கனகசபை மேவு மெனதுகுரு நாத
     கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்

கனகநிற வேத னபயமிட மோது
     கரகமல சோதிப் ...... பெருமாள்காண்

வினவுமடி யாரை மருவிவிளை யாடு
     விரகுரச மோகப் ...... பெருமாள்காண்

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
     விமலசர சோதிப் ...... பெருமாள்காண்

சனகிமண வாளன் மருகனென வேத
     சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்

சரணசிவ காமி யிரணகுல காரி
     தருமுருக நாமப் ...... பெருமாள்காண்

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
     டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு
     மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனகசபை மேவும் ... பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம்
செய்யும்

எனதுகுரு நாத ... எனது குருநாதராகிய

கருணைமுருகேசப் பெருமாள்காண் ... கருணை நிறைந்த
முருகேசப் பெருமாள் நீதான்.

கனகநிற வேதன் ... பொன்னிறத்து பிரமன்

அபயமிட மோது ... அபயம் என்று உன்னைச் சரணடைய,
தலையில் குட்டிய

கரகமல சோதிப் பெருமாள்காண் ... தாமரை போன்ற
கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.

வினவுமடியாரை மருவிவிளையாடு ... உன்னை ஆய்ந்து துதிக்கும்
அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற

விரகு ரச மோகப் பெருமாள்காண் ... ஆர்வம், இன்பம், ஆசை
அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் ... பிரமன், முனிவர்கள்,
தேவர்கள், அருணாசல ஈஸ்வரர்,

விமல சர சோதிப் பெருமாள்காண் ... மற்றும் பரிசுத்தமான என்
மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.

சனகிமணவாளன் மருகனென ... ஜானகியின் மணவாளன்
ஸ்ரீராமனின் மருமகன் என்று

வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண் ... நூற்றுக்கணக்கான
வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.

சரணசிவ காமி ... அடைக்கலம் அளிக்கும் சிவகாமி,

இரணகுல காரி ... போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,

தருமுருக நாமப் பெருமாள்காண் ... ஈன்றருளிய முருகன்
என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.

இனிதுவன மேவும் ... இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த

அமிர்தகுற மாதொடு ... அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்

இயல்பரவு காதற் பெருமாள்காண் ... அன்பு விரிந்த காதல்
கொண்ட பெருமாள் நீதான்.

இணையில் இப தோகை ... ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற
(தேவயானையாம்)

மதியின்மகளோடு ... அறிவு நிறைந்த பெண்ணுடன்

இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. ... தகுதிபெற்ற புலியூரில்
(சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.357  pg 2.358  pg 2.359  pg 2.360 
 WIKI_urai Song number: 590 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 449 - kanagasabai mEvum (chidhambaram)

kanaka sabai mEvum enadhu gurunAtha
     karuNai murugEsap ...... perumAL kAN

kanaka niRa vEdhan abayam ida mOdhu
     kara kamala jOthi ...... perumAL kAN

vinavum adiyArai maruvi viLaiyAdu
     viragu rasa mOhap ...... perumAL kAN

vidhi munivar dhEvar aruNagiri nAthar
     vimala sara jOthip ...... perumAL kAN

janaki maNavALan marugan ena vEdha
     satha magizh kumArap ...... perumAL kAN

saraNa sivakAmi iraNa kula kAri
     tharu muruga nAmap ...... perumAL kAN

inidhu vana mEvum amirtha kuRa mAdhodu
     iyal paravu kAdhal ...... perumAL kAN

iNai ilipa thOgai madhiyin magaLOdum
     iyal puliyur vAzh poR ...... perumALE.

......... Meaning .........

kanaka sabai mEvum enadhu gurunAtha: You are my Master dancing at the Golden Shrine of Chidhambaram

karuNai murugEsap perumAL kAN: in the form of merciful Murugesa, the Great One!

kanaka niRa vEdhan abayam ida: When BrahmA, with a golden complexion, beseeched You for mercy,

mOdhu kara kamala jOthi perumAL kAN: You knocked his head with Your lotus-like hand; You are that bright flame of knowledge and the Great One!

vinavum adiyArai maruvi viLaiyAdu: You play joyfully with those devotees who seek You out to worship

viragu rasa mOhap perumAL kAN: and show zeal, pleasure and love for them, You Great One!

vidhi munivar dhEvar aruNagiri nAthar: You are BrahmA, You are all the sages, You are the DEvAs, You are SivA ruling AruNagiri and also

vimala sara jOthip perumAL kAN: You are the Light that emanates from my pure exhaled breath, You Great One!

janaki maNavALan marugan: You are the nephew of Sri Rama, the Consort of JAnaki;

ena vEdhasatha magizh kumArap perumAL kAN: so speak a hundred scriptures with pleasure - You are that Kumaraswamy, the Great One!

saraNa sivakAmi iraNa kula kAri: SivagAmi (PArvathi), who protects all those who surrender to her and destroys dynasties of all demons in the battlefield,

tharu muruga nAmap perumAL kAN: delivered You, with the name of MurugA, the Great One!

inidhu vana mEvum amirtha kuRa mAdhodu: Well settled in the millet-field at VaLLimalai, is the sweet damsel of KuRavas, VaLLi,

iyal paravu kAdhal perumAL kAN: and You are her affectionate lover and consort, Oh Great One!

iNai ilipa thOgai madhiyin magaLOdum: You are also the consort of DEvayAnai, the peacock-like maiden reared by the unique elephant (AirAvatham), and

iyal puliyur vAzh poR perumALE.: You reside with her at the befitting town of PuliyUr (Chidhambaram), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 449 kanagasabai mEvum - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]