பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 355 உன்னை ஆய்ந்து ஒதும் அடியார்களிடம் பொருந்தி அவர்களிடம் விளையாடுகின்ற உற்சாகமும், இன்பமும், ஆசையும் உடைய பெருமாள் நீதான்; பிரமன், முநிவர்கள், தேவர்கள், அருணாசலேசுரர், பரிசுத்தமாய் (எனது) மூச்சுள் (உயிர்ப்புள்) விளங்கும் ஜோதிப் பெருமாள் - (எல்லாம்) நீதான் - (ஜானகி) சீதையின் கணவன் (ரு ராமருடைய) மருமகன் என்று வேதசதம் (நூற்றுக் கணக்கான வேதங்களும் - சகல வேதங்களும்) கூறி மகிழ்கின்ற குமாரப் பெருமாள் நீதான் - அடைக்கலம் பாலிக்கும் சிவகாமி, போர் செய்யும் (அவுனர்) குலத்தை (ஹரித்தவள்) - அழித்தவள் ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமத்தை உடைய, பெருமாள் நிதான் . சுகமான (வள்ளிமலைக் காட்டில் தினைப்புனத்தில் இருந்த இனிய குறமாது (வள்ளியுடன்) உழுவலன்பு விரிந்த காதல்பூண்ட பெருமாள் நீதான் - ஒப்பற்ற TLJ/Toef)NoLIT (வளர்த்த) மயில்போன்ற தேவசேனையாம் அறிவு நிறைந்த நங்கையுடன் (அல்லது தேவசேனையுடனும் வள்ளியுடனும்) தகுதி கொண்ட் புலியூரில் வாழ்கின்ற அழகிய பெருமாளே! (354 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) 20. மதியின் மகள் - மதி என்பதற்கு யானை என்றும் பொருள் உளது. கோண்மதித் திடர் கிடந்தன - கம்ப ராமா - நாக பாசம் 136 இடதோகை, யானை மகள் இரண்டும் - ஒரே பொருளின. இனி, வள்ளி' என்னும் சொல்லுக்கு (மதி) சந்திரன் என்னும் பொருள் உண்டு. வள்ளி - தண்கதிர் மண்டிலம் - தொல்கா. பொருள் 88 உரை - எனவே மதியின் மகள் என்பது வள்ளியைக் குறிக்கும். 00 புலிக்கால் முதிவர் - வியாக்ரபாதர் - தொழுது நின்ற தலமாதலின் சிதம்பரம் புலியூர் எனப்படும்.