பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 353 கடலிலே இருந்து சூழ்ந்த கரிய விஷத்தைத் (தனது) கண்டத்திலே விளங்கும்படி வைத்த பேரொளியினர், அத்தகைய பெருமானது வலிய புயங்களின்மீது தவழ்ந்து பொலிந்த குருநாதனே! நரசிங்கமாகத் திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டழியப் பறந்து கோபித்த சரபப் பகூதியாய் (உரு எடுத்து) விளங்கி (அகா) ஹஹா என்று சப்தித்து வந்த (கோ) பெருமானாகிய வீரபத்திரர் முன்பு. (தக்ஷயாகத்தில்) (செங்கதிரோனை) சூரியனைத் தண்டித்த (தீவினை) தோஷம் நீங்க நல்ல தவஞ்செய்து சிறப்படைந்த " ors கயிலாயமாம்" (காளத்தியில்) வீற்றிருந்து (அடியார்களுக்கு) வாழ்வு அருளும் பெருமாளே! (அடியேனைப் புரந்திடாய் உணதருளாலே) சிதம்பரம். 590. கனகசபையில் நடனம் செய்யும் எனது குருநாதராகிய கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான். பொன்னிறம் வாய்ந்த பிரமன் - கிருபைதா என்று ஓலமிட (அவன் தலையிற்) குட்டிய கரமாகிய தாமரையை (தாமரை யன்ன கையைக்) கொண்ட ஜோதிப் பெருமான் நீதான்; (பக்கம் - 352 கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி.) "சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவாறுந்திபற" "உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவாறுந்திபற" - திருவாசகம் "பகன் தாமரைக் கண்கெடக் கடந்தோன்" திருக்கோவையார் - 124 பகன் என்பவன் ஒரு சூரியன். * வீரபத்திரர் சூரியரைக் கடிந்த தீவினை திரத் தவஞ் செய்தது. இறைவன் ஆணைப்படி வீரபத்திரர் சூரியர்களுக்குத் தண்டனை புரிந்தது தோஷம் ஆமோ எனின் - ஆம் போலும்; ஏனெனில் அருக்கன் (சூரியன்) அரன் உருவத்தவன். "அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரனுரு வல்லனோ - அப்பர் 5-100-8,