திருப்புகழ் 448 பங்கயனார்  (திருக்காளத்தி)
Thiruppugazh 448 pangkayanAr  (thirukkALaththi)
Thiruppugazh - 448 pangkayanAr - thirukkALaththiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான

......... பாடல் .........

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
     அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
          பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே

பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
     இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே

சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கி டாமதி
          தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே

சங்கரர் வாமத் திருந்த நூபுர
     சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
          தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே

திங்களு லாவப் பணிந்த வேணியர்
     பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார்

சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
     டங்கள மீதிற் சிறந்த சோதியர்
          திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா

சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
     வம்பொடி யாகப் பறந்து சீறிய
          சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன்

செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
          தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்) ... தாமரை மலரில் உள்ள
பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள

அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை ... அண்டமாகிப் பொருந்தி
இருக்கும் இந்தப் பூமி மேல்

பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர உருவாயே ... ஐம்பூதங்களும்
கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து,

பந்தமது ஆகப் பிணிந்த ஆசையில் இங்கிதமாகத் திரிந்து ...
பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து,

மாதர்கள் பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல் படிறு
ஆயே
... விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக்
கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய்

சங்கடன் ஆகித் தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூட ...
வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும்
வந்து உடலை மூடி,

கலங்கிடா மதி தந்து அடியேனைப் புரந்திடாய் உனது
அருளாலே
... அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து
அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக.

சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா ...
சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி
ஆதி தேவி பெற்ற குழந்தையே,

பத தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே ...
தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக்
கொடியைக் கொண்ட முருகனே,

திங்கள் உலாவப் பணிந்த வேணியர் ... நிலவு (சடையில்)
உலாவும்படியாக அருளிய சடையை உடையவர்,

பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர் ... மேலெழுந்து
பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர்,

திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் ... வலிமை வாய்ந்த
(பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள
திருக்கையை உடையவர்,

நெடிது ஆழ்வார் சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் ...
நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய
கரிய ஆலகால விஷத்தை

கள(ம்) மீதில் சிறந்த சோதியர் ... தனது கண்டத்தில்
விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்),

திண் புய(ம்) மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா ... (அத்தகைய
சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே,

சிங்கமதாகத் திரிந்த மால் கெருவம் பொடியாக ... நரசிங்கமாக
திரிந்த திருமாலின் அகந்தை* பொடிபட்டு அழியும்படியாக,

பறந்து சீறிய சிம்புளதாகச் சிறந்து அகா என வரு கோ ...
பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று
சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர்

முன் செம் கதிரோனைக் கடிந்த தீ வினைதுஞ்சிடவே ...
முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம்
நீங்க**,

நல் தவம் செய்து ஏறிய ... நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த

தென்கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே. ... தக்ஷிண
கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும்
பெருமாளே.


* இரணியன் இரத்தத்தை உறிஞ்சிய பின் வெறி ஏறி திருமால் உக்கிரம் கொண்டார்.
சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப் பட்சி உருவம் எடுத்து அந்த
நரசிங்கத்தை அடக்கினார்.


** வீரபத்திரர் தக்ஷயாகத்தின்போது சிவனின் அம்சமாகக் கருதப்படும் சூரியனைத்
தண்டித்த தீவினை நீங்க திருக்காளத்தியில் தவம் செய்தார் - திருக்காளத்திப் புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.355  pg 2.356  pg 2.357  pg 2.358 
 WIKI_urai Song number: 589 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 448 - pangkayanAr (thirukkALaththi)

pangaya nArpet Ridunca rAcara
     aNdama thAyut Riruntha pArmisai
          panjavar kUdith thiraNda thOrnara ...... uruvAyE

panthama thAkap piNintha Asaiyil
     ingitha mAkath thirinthu mAtharkaL
          paNpozhi cUthaik kadanthi dAthuzhal ...... padiRAyE

sankada nAkith thaLArnthu nOyvinai
     vanthudal mUdak kalangi dAmathi
          thanthadi yEnaip puranthi dAyuna ...... tharuLAlE

sankarar vAmath thiruntha nUpura
     sunthari yAthith tharuncu thApatha
          thaNdaiya nEkuk kudampa thAkaiyin ...... murukOnE

thingaLu lAvap paNintha vENiyar
     pongara vAdap punaintha mArpinar
          thiNsilai cUlath thazhunthu pANiyar ...... nedithAzhvAr

sinthuvi lEyut Rezhuntha kALavi
     dankaLa meethiR ciRantha sOthiyar
          thiNpuya meethiR Ravazhnthu veeRiya ...... gurunAthA

singama thAkath thirintha mAlkeru
     vampodi yAkap paRanthu seeRiya
          simpuLa thAkac ciRantha kAvena ...... varukOmun

senkathi rOnaik kadintha theevinai
     thunjida vEnat Ravancey thERiya
          thenkayi lAyath thamarnthu vAzhvaruL ...... perumALE.

......... Meaning .........

pangaya nArpet Ridunca rAcara: BrahmA, seated on the lotus, has created all moving and stationary things

aNdama thAyut Riruntha pArmisai: on this planet called the earth; thereon,

panjavar kUdith thiraNda thOrnara uruvAyE: the five elements gathered together to create this human body;

panthama thAkap piNintha Asaiyil ingitha mAkath thirinthu: driven by attachment leading to desire, this body roamed about merrily;

mAtharkaL paNpozhi cUthaik kadanthi dAthuzhal padiRAyE: being unable to cross over the deceitful and immoral trickeries of the whores, I became a lying vagrant;

sankada nAkith thaLArnthu nOyvinai vanthudal mUda: I was distressed and weakened; many diseases and my bad deeds swathed my body.

kalangi dAmathi thanthadi yEnaip puranthi dAyuna tharuLAlE: Kindly, therefore, grant me an unwavering mind and protect me by bestowing Your blessings.

sankarar vAmath thiruntha nUpura sunthari yAthith tharum cuthA: You are the beloved son delivered by the Primordial and beautiful Goddess PArvathi, wearing the pretty anklets, and who occupies the left side of Lord Sankara!

patha thaNdaiya nEkuk kudampa thAkaiyin murukOnE: You adorn Your feet with anklets and hold the staff with the emblem of a Rooster!

thingaLu lAvap paNintha vENiyar: He allowed the crescent moon to stroll about on His tresses;

pongara vAdap punaintha mArpinar: He wore on His chest the serpent with a raised hood;

thiNsilai cUlath thazhunthu pANiyar: He holds in His hand the powerful bow (pinAkam) and in another hand, the trident;

nedithAzhvAr sinthuvi lEyut Rezhuntha kALavidan kaLa meethiR ciRantha sOthiyar: from the very deep and wide milky ocean, emerged the dark and evil poison, AlakAlam, which was swallowed and held on the neck by Him, of great Effulgence (known as Neelakantar);

thiNpuya meethiR Ravazhnthu veeRiya gurunAthA: on the strong shoulders of that great Lord SivA, You crawled as a baby gorgeously, Oh Master!

singama thAkath thirintha mAlkeruvampodi yAka: When Lord Vishnu roamed about uncontrollably as a wild lion (Narasimham), His arrogance was shattered*

paRanthu seeRiya simpuLa thAkac ciRantha kAvena varukO: by Veerabhadrar (an incarnation of Lord SivA) who, as a saraba bird, flew angrily and with a loud noise;

mun senkathi rOnaik kadintha theevinai thunjidavE: (that Lord Veerabhadrar) had earlier offended the Sun (during Dhakshayagnam); for the atonement of that offence,**

nat Ravancey thERiya: He performed a holy penance in

thenkayi lAyath thamarnthu vAzhvaruL perumALE.: the Southern KailAsh (known as KAlahasthi), which is Your abode from where You bless all Your devotees, Oh Great One!


* After drinking HiraNyan's blood, Narasimhar (an incarnation of Lord Vishnu) became intoxicated and uncontrollable. Lord SivA sent one of His alter-egos, Veerabhadrar, to control Narasimhar. Veerabhadrar took the form of a saraba bird and tamed Narasimhar.


** Earlier to destroy the penance of Dhaksha, Lord SivA sent Veerabhadrar who inadvertently punished the Sun, considered to be another aspect of SivA. For atonement of that sin, Veerabhadrar undertook a holy penance at KALahasthi where He was ultimately pardoned - ThirukkALaththip PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 448 pangkayanAr - thirukkALaththi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]