பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி திருப்புகழ் உரை 351 நினைப்பவர்களுடைய சித்தத்தில் வீற்றிருப்பவனே! திருத்தாளை முத்தர்க்கு முற்றத் துறந்தார்க்கு (ஜீவன் முத்தர்களுக்கு) அருள்பவனே! திருக்காளத்தியில் (வீற்றிருக்கும்) பெருமாளே! (எத்தனை ஆள்வாய்) 589. பிரமதேவன் படைத்துள்ள சரம் - அசரம் (அசைவன, அசையாதனவாயுள்ள) அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமிமேல், ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனுஷ உருவு அமைந்து பாசத்தாற் கட்டுண்ட ஆசையில் இன்பமுற்றுத் திரிந்து மாதர்களின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழலைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய், வேதனைப் படுபவனாய்ச் சோர்வடைந்து நோயும் வினையும் வந்து உடலை மூட, அதனால், கலக்கமடையாத அறிவைத் தந்து அடியேனைக் காப்பாற்றுவாயாக உன் திருவருளைப் பாலித்து: சிவபிரானுடைய இடது பாகத்திலிருந்த சிலம்பணிந்த அழகி, ஆதி பெற்ற குழந்தையே திருவடியில் தண்டையை அணிந்தவனே! கோழிக் கொடிகொண்ட முருகனே! நிலவு (சடையிலே) உலவும்படிப் (பணித்த) அருளிய சடையர், மேலெழுந்த பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், வலிமைவாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும் சூலாயுதமும் பொருந்தியுள்ள திருக் கையினர், நிரம்ப ஆழ்ந்தும் நீண்டும் உள்ள, (பக்கம் -350 கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) 4. ஐம்பூதத்தான் ஆகியதோர் ஆக்கை" - வேற்பத்து - தணிகைச் சந்நிதி முறை. x பணித்த பணிந்த என ஆயிற்று - சந்தம் நோக்கி இதன் வரலாறு . பாடல் 415 பக்கம் 548) உலாவ அப்பு அணிந்த எனவும் பிரிக்கலாம் அப்பு - கங்கை