திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 442 விடு மதவேள் (திருவருணை) Thiruppugazh 442 vidumadhavEL (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானாதன தனதன தானாதன தனதன தானாதன ...... தனதான ......... பாடல் ......... விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல விழிகொடு வாபோவென ...... வுரையாடும் விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள் ம்ருகமத கோலாகல ...... முலைதோய அடையவு மாசாபர வசமுறு கோமாளியை அவனியு மாகாசமும் ...... வசைபேசும் அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை அடியவ ரோடாள்வது ...... மொருநாளே வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம் வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம மரகத நாராயணன் மருமக சோணாசல மகிபச தாகாலமு ...... மிளையோனே உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற உலகுய வாரார்கலி ...... வறிதாக உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ ஒருதனி வேலேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொ(ண்)டு வா போ என உரை ஆடும் ... செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ... சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், ம்ருகமத கோலாகல முலை தோய அடையவும் ஆசா பரவசம் உறு கோமாளியை ... கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, அவனியும் ஆகாசமும் வசை பேசும் அசட அநாசாரனை அவலனை ஆபாசனை ... மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே ... உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம மரகத நாராயணன் மருமக ... வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, சோணாசல மகிப சதா காலமும் இளையோனே ... திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற ... நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக ... உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ ... சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே. ... ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.335 pg 2.336 pg 2.337 pg 2.338 WIKI_urai Song number: 583 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 442 - vidumatha vEL (thiruvaNNAmalai) vidumatha vELvALiyin visaipeRu mAlAkala vizhikodu vApOvena ...... vuraiyAdum virakuda nURAyira manamudai mApAvikaL mrukamatha kOlAkala ...... mulaithOya adaiyavu mAsApara vasamuRu kOmALiyai avaniyu mAkAsamum ...... vasaipEsum asadA nAsAranai avalanai ApAsanai adiyava rOdALvathu ...... morunALE vadakula kOpAlartha morupathi nARAyiram vanithaiyar thOLthOytharu ...... mapirAma marakatha nArAyaNan marumaka sONAsala makipasa thAkAlamu ...... miLaiyOnE udupathi sAyApathi surapathi mAyAthuRa ulakuya vArArkali ...... vaRithAka uyariya mAnAkamu nirutharu neeRAyvizha oruthani vElEviya ...... perumALE. ......... Meaning ......... vidu mathavEL vALiyin visai peRum AlAkala vizhi ko(N)du vA pO ena urai Adum: Their eyes are like the evil poison (AlakAlam), moving about speedily like the arrow wielded by the arrogant God of Love (Manmathan); they resort to intimate talk beckoning and dismissing men insolently; virakudan nURAyiram manam udai mA pAvikaL: they have a cunning mind which shifts in a hundred thousand ways; hankering after these very sinful whores, mrukamatha kOlAkala mulai thOya adaiyavum AsA paravasam uRu kOmALiyai: and yearning to hug their pompous bosom smeared with musk, I have been behaving like a clown dazed by passion; avaniyum AkAsamum vasai pEsum asada anAsAranai avalanai ApAsanai: I am a foolish and characterless chap reproached by all people in the heaven and the earth; I am a useless and filthy person; adiyavarOdu ALvathum oru nALE: (despite all my shortcomings), will there be a day when You will take charge and protect me along with Your devotees? vada kula kOpAlar tham oru pathi nURAyiram vanithaiyar thOL thOy tharum apirAma marakatha nArAyaNan marumaka: In the north, there were about ten thousand maids, in the lineage of cowherds, whose shoulders were hugged by KrishNA (Lord NArAyaNan), the handsome Lord of greenish hue; You are His nephew! sONAsala makipa sathA kAlamum iLaiyOnE: You are the king of ThiruvaNNAmalai! You are forever youthful! udupathi sAyApathi surapathi mAyAthu uRa: In order to save the moon, the master of all the stars, the sun, the consort of ChAyA DEvi, and IndrA, the Lord of the celestials, from extinction, ulaku uyya vAr Arkali vaRithu Aka: to protect this world, to dry out the long sea, uyariya mA nAkamum nirutharum neeRAy vizha: and to shatter the great and large mount Krouncha and the demons to pieces, oru thani vEl Eviya perumALE.: You wielded the unique spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |