பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப் புகழ் உரை 333 முட்டாளான துராசாரணை, வேதனைப் படுபவனை, அசுத்தனை, (உனது) அடியார்களோடு ஆண்டருளும் பாக்கியம் கிடைக்கும் ஒரு நாள் கிடைக்குமா! வடக்கே கோபாலர் குலத்தவரான (இடையர் குலத்தவரான) ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அ ழகிய பச்சைநிற நாராயணனுக்கு மருமகனே! சோணாசல (அண்ணாமலையனே) அரசே! சதாகாலமும் - என்றும் இளையோனே! (உடுபதி) ந்கூடித்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயாபதி - சாயாதேவிக்குக் கண்வனாகிய சூரியனும், (சுரபதி) தேவர் தலைவனாம் இந்திரனும், இறந்துபடாது வாழ, உலகம் பிழைக்க, நீண்ட (ஆர்கலி) கடல் வற்றிப்போக சிறந்த மகா (நாகமும்) கிரவுஞ்சகிரியும், அசுரர்களும் தூள் பட்டுவிழ ஒப்பற்ற வேலைச் செலுத்தின பெருமாளே! (அடியரொடாள்வதும் ஒரு நாளே 584. விதி கூட்டுவிப்பதால் யெளவனம் (இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச் செயல்களிலே மனம் தடுமாறுதல் அடைந்து தெளிவுள்ளதான ஒரு அறிவும் கெட்டுப்போய் வினை வசப்பட்டு அலைந்திடுகின் sI) மூடனாகிய (நான்) பழைய, சிறந்த தமிழ்ப்பாக்களை, இசையுடனே உரைத்து (பாடி) உன்னை நினைந்திடும்படியும். கிரமப்படி (முறைப்படி) உனது திருவடிகளை அடையுமாறும், என்மீதுள்ள கோபம் தீர்ந்து வந்து அருள்புரிவாயாக வஞ்சனை கூடின அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியின்மீது உகும் (உகும்படி - சிந்தும்படி) போர்செய்து. எல்லா உலகங்களையும் (மயில்மீது) GlNaՆ)LD/T:55 (அவ்வுலகங்கள்) குளிரும்படி - நலமுறும்படி - வந்த குமரேசனே!