திருப்புகழ் 436 போக கற்ப  (திருவருணை)
Thiruppugazh 436 pOgakaRpa  (thiruvaruNai)
Thiruppugazh - 436 pOgakaRpa - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான

......... பாடல் .........

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
     பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும்

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
     தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத்

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
     தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித்

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
     சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
     றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
     காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
     தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச்

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

போக கற்பக் கடவுள் பூருகத்தைப் புயலைப் பாரியைப்
பொன் குவை உச்சிப் பொழுதில் ஈயும் போது உடைப்
புத்திரரைப் போல ஒப்பிட்டு
... விருப்பமான போகத்தை அளிக்கும்
கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும்,
பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை
வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை
கூறி ஒப்பிட்டு,

உலகத்தோரை மெச்சிப் பிரியப் பட்டு மிடி போகத் த்யாக
மெத்தத் தருதற்கு
... உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக்
காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள்
தருவதற்காக,

ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டுக் கவிகள்
பாடித் தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு
... ஆசு
கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள்* ஆகிய திருட்டுக்
கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான
அழகிய மாதர்களுக்குத் தந்து,

அவர்கண் சேல் வலைப் பட்டு அடிமைப்பட்டு விடலாமோ ...
அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான்
அடிமைப்பட்டு விடலாமோ?

ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும் உற்று
ஆதரிக்கைக்கு
... ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப்
பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய,

அருணைத் துப்பு மதில் சூழும் ஆடகச் சித்ர மணிக்
கோபுரத்து உத்தர திக்காக வெற்றிக் கலபக் கற்கி
அமர்வோனே
... திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள்
சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப்
பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது
வீற்றிருப்பவனே,

தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித் தூணி
முட்டச் சுவற
... மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில்
கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு
அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு
வற்றும்படியும்,

திக்கில் எழு பாரச் சோதி வெற்பு எட்டும் உதிர்த்(து)
தூளிதப் பட்டு அமிழச் சூரனைப் பட்டு உருவத் தொட்ட
பெருமாளே.
... திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும்
எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது
பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.323  pg 2.324  pg 2.325  pg 2.326 
 WIKI_urai Song number: 577 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 436 - pOga kaRpa (thiruvaNNAmalai)

bOkakaR pakkadavut pUrukath thaippuyalaip
     pAriyaip poRkuvaiyuc ...... chippo zhuthileeyum

pOthudaip puththiraraip pOlavop pittulakath
     thOraimec chippiriyap ...... pattu midipOkath

thyAkameth thaththaruthaR kAsunaR chiththiravith
     thAramut pattathirut ...... tukka vikaLpAdith

thEdiyit tappadupoR pAvaiyark kittavarkat
     chElvalaip pattadimaip ...... pattu vidalAmO

Akamap paththarumat RAraNac chuththarumut
     RAtharik kaikkaruNaith ...... thuppu mathilcUzhum

Adakac chithramaNik kOpurath thuththarathik
     kAkavet Rikkalapak ...... kaRki yamarvOnE

thOkaiyaip petRaidap pAkarot Raippakazhith
     thUNimut tacchuvaRath ...... thikki lezhupArac

chOthiveR pettumuthirth thULithap pattamizhac
     cUranaip patturuvath ...... thotta perumALE.

......... Meaning .........

bOka kaRpak kadavuL pUrukaththaip puyalaip pAriyaip pon kuvai ucchip pozhuthil eeyum pOthu udaip puththiraraip pOla oppittu: Saying that you are like the Divine KaRpaga tree that yields the pleasure one seeks, like the cloud, like the King PAri (the great benefactor) and like (KarNan) the giver of alms who possessed the Divine lotus that showers in heaps of gold at noon-time,

ulakaththOrai mecchip piriyap pattu midi pOkath thyAka meththath tharuthaRku: I used to flatter people of the world showing my affection to them; to get rid of my poverty and in order that they should give me substantial alms,

Asu nal siththira viththAram uLpatta thiruttuk kavikaL pAdith thEdi ittappadu pon pAvaiyarkku ittu avarkaN sEl valaip pattu adimaippattu vidalAmO: I used to steal poems of many great varieties* (namely, Asu, chiththiram and viththAram) and compose songs praising them; I used to give away the money earned this way to my favourite women of beauty and fall a victim to the net of their eyes that look like sEl fish; can I thus become a slave to these women?

Akamap paththarum matRu AraNac chuththarum utRu Atharikkaikku: In this place, the devotees who are well-versed in scriptures and the purists who have mastered the vEdAs join together in service;

aruNaith thuppu mathil cUzhum Adakac chithra maNik kOpuraththu uththara thikkAka vetRik kalapak kaRki amarvOnE: this is ThiruvaNNAmalai, surrounded by beautiful golden fortress walls; on its wonderful and gorgeous temple tower, in the northern side, You are seated, mounting the victorious horse-like peacock with pretty plumes, Oh Lord!

thOkaiyaip petRa idap pAkar otRaip pakazhith thUNi muttac chuvaRa: PArvathi DEvi, the peacock-like consort of SivA, is concorporate on the left side of the Lord; when He invaded Thiripuram, Lord VishNu served as the arrow and the sea served as the arrow-socket; that sea became completely dried up;

thikkil ezhu pArac chOthi veRpu ettum uthirth(thu) thULithap pattu amizhas cUranaip pattu uruvath thotta perumALE.: the seven huge and bright mountains in all the directions were shattered to pieces and drowned in the sea; and the body of the demon SUran was pierced when You wielded the spear, Oh Lord!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 436 pOga kaRpa - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]