திருப்புகழ் 435 புலையனான  (திருவருணை)
Thiruppugazh 435 pulaiyanAna  (thiruvaruNai)
Thiruppugazh - 435 pulaiyanAna - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
     பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியி லாத வேமாளி ...... குலபாதன்

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ...... யொருசீதை

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
     திறமி யான மாமாயன் ...... மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமர தாடி யேதோகை ...... மயிலேறி

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புலையனான மாவீனன் ... கீழ்மகனாக மிகவும் இழிந்தவன்,

வினையிலேகு மாபாதன் ... தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற
மகா பாதகன்,

பொறையிலாத கோபீகன் ... பொறுமை என்பதே சிறிதும் இல்லாத
கோப குணத்தினன்

முழுமூடன் புகழி லாத தாமீகன் ... முழு முட்டாள், புகழில்லாத
வெறும் டாம்பீகன்,

அறிவிலாத காபோதி ... அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக்
கபோதி,

பொறிகளோடி போய்வீழும் அதிசூதன் ... ஐம்பொறிகள் இழுக்கும்
வழியிலே வீழும் பெரிய சூதுடையவன்,

நிலையிலாத கோமாளி ... ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,

கொடையி லாத ஊதாரி ... ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,

நெறியிலாத ஏமாளி ... நல்லொழுக்கம் இல்லாத பேதை,

குலபாதன் ... நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன்,
இத்தகைய நான்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் ... உன்
திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல்

நினையுமாறு நீமேவி யருள்வாயே ... நினைக்கும்வண்ணம் நீ என்
உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக.

சிலையில் வாளி தானேவி ... வில்லினின்றும் அம்பைச் செலுத்தி

எதிரி ராவணார்தோள்கள் சிதையு மாறு போராடி ... பகைவன்
ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு,

ஒருசீதை சிறையிலாமலேகூடி ... ஒப்பற்ற சீதையைச்
சிறையிலிருந்து விடுவித்து

புவனி மீதிலேவீறு திறமியான ... இவ்வுலகிலேயே மிக்க
சாமர்த்தியசாலியாக விளங்கிய

மாமாயன் மருகோனே ... ராமனாக வந்த மகா மாயன் திருமாலின்
மருமகனே,

அலைய மேரு மாசூரர் பொடிய தாக ... மேரு மலை
அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும்

வேலேவி அமரது ஆடியே தோகைமயிலேறி ... வேலினைச்
செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில்

அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும் ... நிரம்ப தேவர்கள் புடை
சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும்

அருணை மீதிலேமேவு பெருமாளே. ... திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.321  pg 2.322  pg 2.323  pg 2.324 
 WIKI_urai Song number: 576 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 435 - pulaiyanAna (thiruvaNNAmalai)

pulaiyanAna mAveenan vinaiyi lEgu mApAthan
     poRaiyilAdha kOpeegan ...... muzhu mUdan

pugazhilAdha thAmeegan aRivilAdha kAbOdhi
     poRigaL Odi pOy veezhum ...... athi sUdhan

nilai ilAdha kOmALi kodai ilAdha UdhAri
     neRi ilAdha vEmALi ...... kula pAthan

ninadhu thALai nAL thORu manadhil Asai veedAmal
     ninaiyu mARu nee mEvi ...... aruLvAyE

silaiyil vALi thAnEvi edhiri rAvaNAr thOLgaL
     chidhaiyu mARu pOrAdi ...... oru seethai

siRai ilAmalE kUdi buvani meedhilE veeRu
     thiRami Ana mAmAyan ...... marugOnE

alaiya mEru mAsUrar podiya dhAga vElEvi
     amara dhAdiyE thOgai ...... mayilERi

adhika dhEvarE sUzha ulaga meedhilE kURum
     aruNai meedhilE mEvu ...... perumALE.

......... Meaning .........

pulaiyanAna mAveenan: I have a lineage which is baser than the basest;

vinaiyi lEgu mApAthan: I am the worst sinner bent upon doing bad deeds;

poRaiyilAdha kOpeegan: I have a foul temper with no patience whatsoever;

muzhu mUdan: I am a total fool;

pugazhilAdha thAmeegan: I am the most infamous and vain person;

aRivilAdha kAbOdhi: As far as intelligence is concerned, I am a totally blind person;

poRigaL Odi pOy veezhum athi sUdhan: I am very devious, being led by all my sensory organs;

nilai ilAdha kOmALi: I am an unsteady clown;

kodai ilAdha UdhAri: I never give alms but am a spendthrift;

neRi ilAdha vEmALi: I am a miserable person lacking character;

kula pAthan: I am the destroyer of my family's prestige; (and despite all my shortcomings),

ninadhu thALai nAL thORu: will You let me pray to to Your feet everyday

manadhil Asai veedAmal: with an ardent desire in my heart

ninaiyu mARu nee mEvi aruLvAyE: and will You kindly prevail so that I think of You always?

silaiyil vALi thAnEvi edhiri rAvaNAr thOLgaL: He shot the arrows from His bow targetting RavNA's shoulders

chidhaiyu mARu pOrAdi: severing them in the war and

oru seethai siRai ilAmalE kUdi: successfully liberated His spouse SitA from the prison;

buvani meedhilE veeRu thiRami Ana: and His bravery was well known throughout this world.

mAmAyan marugOnE: You are the nephew of that great wonderful Vishnu (who came as Rama)!

alaiya mEru mAsUrar podiya dhAga vElEvi: When You shot Your spear, Mount MEru trembled and all the mighty demons (asuras) crumbled into dust!

amara dhAdiyE: Such was Your valour in the battlefield!

thOgai mayilERi adhika dhEvarE sUzha: You mounted the beautiful peacock, surrounded by a host of DEvAs!

ulaga meedhilE kURum: There is a famous place in this world, praised by all, which is

aruNai meedhilE mEvu perumALE.: ThiruvaNNAmalai, Your favourite abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 435 pulaiyanAna - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]