திருப்புகழ் 427 தமிழோதிய குயிலோ  (திருவருணை)
Thiruppugazh 427 thamizhOdhiyakuyilO  (thiruvaruNai)
Thiruppugazh - 427 thamizhOdhiyakuyilO - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
     தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
          தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான

......... பாடல் .........

தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
     கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
          தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந்

தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
     திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
          சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக்

குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
     சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
          கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர்

குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
     சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்
          கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
          திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி

திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
     கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
          சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா

கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
     தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே

கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
     சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
          கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தமிழ் ஓதிய குயிலோ மதில் ஆண்டலை ஆம் புறவம் கிளி
காடை இன் அணில் ஏர் அளி ஆம்
... தமிழின் இனிமைக் குரலைக்
காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ,
காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ
என்னும்படி

குரல் வாய்ந்த அதி செம் தகு மா மிடறு ஒலியார் இதழ் ஆம்
சுளை தேன் கனியின் சுவை சேரும்
... குரலை உடைய, மிக்க
செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய
விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை
சேர்ந்ததாகும்.

தன பாரமும் மலையாம் என ஓங்கிட மாம் பொறி சிந்திட
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் சரீ(ர)
ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
...
மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல்
அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த
பிறையோ, சரீரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள்
விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ?
முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ?

சரி தோடு இணை செவி ஆடு உ(ஊ)சலாம் கள(ம்) பூ
கமுகம் கொடி நூல் இடை உடையார் அ(ன்)னமாம் ப்ரியர்
மாண் புரி மின் கொடி மாதர்
... பொருத்தமாக உள்ள தோடு
விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான
கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள்
அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல்
கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர்.

குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூங்கமலம்
சரண் நூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின்
கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும்
மன் தகையேனே
... அவர்களது குணத்திலும் ஈடுபட்டு
படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை
போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின் ஒலியும், உன் கையில்
ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த
அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும்
தடை செய்யேன்.

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி
டிமிடோடிமி டாங்குட டீந்தக என்று இயல் பேரி திசை மூடுக
கடல் ஏழ் பொடியாம்படி
... திமிதோதிமி திமிதோதிமி தாங்கண
தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி
முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும்
பொடியாகும்படியும்,

ஓங்கிய வெம் கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட
அரவின் சிர(ம்) மீள் படக் குவடு ஓதுகள் வான் பெற
வாங்கிய வண் கதிர் வேலா
... பேரொலியுடன் வந்த கொடிய
யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய
ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற,
மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும்
ஒளியும் வாய்ந்த வேலாயுதனே,

கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண்
தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண்
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் அருள் ஈன்ற
மென் குரவோனே
... மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய
சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க
வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய
திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை
ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர்
பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள்
பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே,

கடையேன் இரு வினை நோய் மல(ம்) மாண்டிட தீண்டிய
ஒண் சுக மோகினி வ(ள்)ளி நாயகி பாங்கன் எனாம் பகர்மின்
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண்
பெருமாளே.
... கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை
ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற)
மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீக்ஷை செய்தவனும்,
ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று
சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான
முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில்
வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.305  pg 2.306  pg 2.307  pg 2.308 
 WIKI_urai Song number: 568 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 427 - thamizhOdhiya kuyilO (thiruvaNNAmalai)

thamizhOthiya kuyilOmayi lANdalai yAmpuRavang
     kiLikAdaiyi naNilEraLi yAngural vAynthathisen
          thakumAmida RoliyAritha zhAmchuLai thEnkaniyin ...... suvaisErun

thanapAramu malaiyAmena vOngida mAmpoRisin
     thidavElvizhi nuthalOsilai vAnpiRai mAnthuLirin
          sarirArkuzha liruLAnakai yOngiya vAnkathirin ...... sudarpAyak

kumizhnAsiyin mukamOmathi yAnguLir sEngamalam
     sarithOdiNai seviyAdusa lAngaLa pUngamukang
          kodinUlidai yudaiyArana mAmpriyar mANpurimin ...... kodimAthar

kuNamOdama LiyinAdinu mOngiya pUngamalanj
     saraNUpura kuralOsaiyu mEnthidu mANdalaiyin
          kodiyOdezhu tharithAmvadi vOngiya pAngaiyuman ...... thakaiyEnE

thimithOthimi thimithOthimi thAngaNa theengaNathon
     thakuthOthaku thakuthOthaku dAnguda theengadathon
          thikudOdimi dimidOdimi dAnguda deenthakamen ...... RiyalpEri

thisaimUduka kadalEzhpodi yAmpadi yOngiyaveng
     karithErpari yasurArkaLa mANdida neeNdaravin
          sirameeLpada kuvadOthukaL vAnpeRa vAngiyavaN ...... kathirvElA

kamazhmAvithazh sadaiyAradi yEnthuyar theernthidaveN
     thazhalmApodi yaruLvOradal mAnthudi thAngiyavaN
          kararmAdaru LumaiyALemai yeenRava LeenRaruLmen ...... kuravOnE

kadaiyEniru vinainOymala mANdida theeNdiyavoN
     sukamOkini vaLinAyaki pAngane nAmpakarmin
          kalainUludai murukAvazha lOngiya vOngalinvaN ...... perumALE.

......... Meaning .........

thamizh Othiya kuyilO mathil ANdalai Am puRavam kiLi kAdai in aNil Er aLi Am: Shall I compare their voice to that of the cuckoo revealing the sweetness of Tamil language? or to that of the peacock, rooster, pigeon, parrot, crane, the sweet-sounding krouncha or the beautiful beetle?

kural vAyntha athi sem thaku mA midaRu oliyAr ithazh Am chuLai thEn kaniyin suvai sErum: These whores are endowed with a sweet voice (of many birds) emanating from their reddish, shapely and great throat; and their lips have a taste of a combination of the jack fruit, honey and the plantain.

thana pAramum malaiyAm ena Ongida mAm poRi sinthida vEl vizhi nuthalO silai vAL piRai mAnthuLirin saree(ra) Ar kuzhal iruLO nakai Ongiya vAn kathirin sudar pAya kumizh nAsiyin mukamO mathiyAm kuLir sEm kamalam: Their huge breasts looking like the mountain are prominent; the beautiful decolorisation of the skin is spread out on their chest here and there; their eyes look like the spear; their forehead is like the bow and the crescent moon; their skin is soft like the tender mango leaf; their hair is black like the darkness itself; their teeth reflect the bright sun's rays; their nose is like the flower of kumizham; and their face is like the moon and is also like the cool lotus.

sari thOdu iNai sevi Adu u(U)salAm kaLa(m) pU kamukam kodi nUl idai udaiyAr a(n)namAm priyar mAN puri min kodi mAthar: Their ears fitted with matching studs look like the swing; their neck is soft like the betelnut tree's branch; their slender waist is like the creeper and thread. These women with all these characteristics are like the swan. They shower love. These whores are like the famous creeper of the lightning.

kuNamOdu amaLiyil Adinum Ongiya pUngamalam saraN nUpura kural Osaiyum Enthidu mA aNdalaiyin kodiyOdu ezhutha arithAm vadivu Ongiya pAngaiyum man thakaiyEnE: Being attracted by their attributes, I am indulging in coital pleasure with them on the bed; nonetheless, I will not in the least impede the surging thoughts of the lilting sound of the anklets arising from Your hallowed feet that are like a beautiful lotus, of the elegant staff of Rooster held in Your hand and of the indescribable and bright beauty of Yours, Oh Lord!

thimithOthimi thimithOthimi thAngaNa theengaNathon thakuthOthaku thakuthOthaku dAnguda theengadathon thikudOdimi dimidOdimi dAnguda deenthaka enRu iyal pEri thisai mUduka kadal Ezh podiyAmpadi: All the cardinal directions were covered with the thundering sound from big drums beaten to the meter "thimithOthimi thimithOthimi thAngaNa theengaNathon thakuthOthaku thakuthOthaku dAnguda theengadathon thikudOdimi dimidOdimi dAnguda deenthaka"; the seven seas were devastated;

Ongiya vem kari thEr pari asurArkaL mANdida neeNda aravin sira(m) meeL padak kuvadu OthukaL vAn peRa vAngiya vaN kathir vElA: the elephants confronting with a furious noise, the chariots, the horses and the demons belonging to their armies were all destroyed; the huge serpent AdhisEshan was relieved of the weighty burden of the earth from upon its hood; and the dust particles arising from the mountains soared right up to the sky when You wielded Your strong and dazzling spear, Oh Lord!

kamazh mA ithazh sadaiyAr adiyEn thuyar theernthida veN thazhal mA podi aruLvOr adal mAn thudi thAngiya vaN karar mAdu aruL umaiyAL emai eenRavaL aruL eenRa men kuravOnE: He wears on His matted hair the fragrant flower kondRai (Indian laburnum); He is the One who graciously handed to me the holy white ash that came from the fire to remove all my grief; He holds in His hallowed hands the strong deer and the hand-drum; He is Lord SivA; She, who delivered us, remains concorporate on His side blessing us; and You are the child born to that Goddess UmA, Oh Serene Master!

kadaiyEn iru vinai nOy mala(m) mANdida theeNdiya oN suka mOkini va(L)Li nAyaki pAngan enAm pakarmin kalai nUl udai murukA azhal Ongiya Ongalin vaN perumALE.: You initiated me with the healing touch upon me to destroy my two deeds (both good and bad), the diseases and the three slags (namely, arrogance, karma and delusion) suffered by this wretched person, namely myself! You are the Consort of Goddess VaLLi, who is the bright bliss personified, and You are highly proficient in great arts, Oh MurugA! You reside with grandeur in the huge fire-mountain that is known as ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 427 thamizhOdhiya kuyilO - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]