திருப்புகழ் 428 தலையை மழித்து  (திருவருணை)
Thiruppugazh 428 thalaiyaimazhiththu  (thiruvaruNai)
Thiruppugazh - 428 thalaiyaimazhiththu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
     தனன தனத்தத் தனந்த ...... தனதான

......... பாடல் .........

தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
     சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை

சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
     தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு

கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
     கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே

கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
     கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே

அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
     மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை

அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
     மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
     வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம்

மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து
     மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து ...
தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும்,

சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை ... சடையை வளர்த்துக்
கொண்டும், புலியின் தோல் ஆடையை

சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து ...
பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது
கலைகளைக் கற்கத் தொடங்கியும்,

தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு
அணிந்து
... தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும்
(சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப்
பூசியும்,

கரண வலைக்குள் புகுந்து ... இந்திரியங்கள் விரித்த வலைக்குள்
வேண்டுமென்றே அகப்பட்டும்,

கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே ... கதறி
வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே

கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து ...
(பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து
சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து,

கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே ... என் கவலையை
ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக.

அலை கடலில் கொக்கு அரிந்தும் ... அலை வீசும் கடலில்
மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும்,

அரு வரையைப் பொட்டு எறிந்தும் ... அரிய கிரெளஞ்ச மலையைத்
தூளாக்கியும்,

அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை ... தேவர்கள் உலகத்தில்
புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை

அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் ...
அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில்
புகுந்து வீற்றிருந்தும்,

அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே ... ஞானம்
உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே,

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து ...
(மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த
திரிபுரங்களின் மீது கோபித்து,

வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை ... சற்றே
சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய
குழந்தையே,

புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து ... தினைப் புனத்தில்
புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து

மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே. ... வேடர்கள் வளர்த்த மயில்
போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.309  pg 2.310 
 WIKI_urai Song number: 569 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 428 - thalaiyai mazhiththu (thiruvaNNAmalai)

thalaiyai mazhiththuc civantha thuNiyai yaraikkup punainthu
     cadaiyai vaLarththup purinthu ...... puliyAdai

sathirodu vappap punainthu virakodu kaRkap pukunthu
     thavamoru saththath thaRinthu ...... thiruneeRu

kalaiyai mikuththit taNinthu karaNa valaikkut pukunthu
     kathaRu nilaikkaik kamarntha ...... ezhilOdE

kanaka miyatRith thirinthu thuvaLu menaicchat RaRinthu
     kavalai yozhiththaR kirangki ...... yaruLvAyE

alaikada liRkok karinthu maruvarai yaippot teRinthum
     amaru lakaththiR pukunthu ...... muyarAnai

aruLodu kaippatRi vanthu maruNa girippuk kirunthu
     maRivu Lapaththark kirangku ...... miLaiyOnE

malaiyai vaLaiththup paRanthu maruvu puraththaic civanthu
     vaRithu nakaiththit tiruntha ...... sivanArtham

mathalai punaththiR pukunthu naravadi vutRuth thirinthu
     maRama yilaiccut Rivantha ...... perumALE.

......... Meaning .........

thalaiyai mazhiththuc civantha thuNiyai araikkup punainthu: I shaved off all the hair on my head; I wrapped around my waist a saffron loin cloth;

cadaiyai vaLarththup purinthu puli Adai sathirodu uvappap punainthu: I tried to grow my hair into a tress; I happily clothed my body in a showy manner with tiger's skin;

virakodu kaRkap pukunthu: I started to learn new arts in a hurry;

thavam oru saththaththu aRinthu: not knowing the meaning of meditation,

thiruneeRu kalaiyai mikuththittu aNinthu: I splashed the holy ash generously all over my body;

karaNa valaikkuL pukunthu: I willingly entered the nasty web laid out by the sensory organs;

kathaRu(m) nilaikkaikku amarntha ezhilOdE: I reached a point of total breakdown where I was ready to cry;

kanaka(m) iyatRith thirinthu: I sought to create gold through mystic alchemy and in that process roamed about aimlessly;

thuvaLum enaic catRu aRinthu kavalai ozhiththaRku irangi aruLvAyE: please understand my misery a little and show the compassion and grace to remove my wretchedness.

alai kadalil kokku arinthum: The demon SUran, who hid in the wavy sea disguised as a mango tree, was split apart;

aru varaiyaip pottu eRinthum: the rare mount, Krouncha, was shattered to pieces;

amar ulakaththil pukunthum: then You entered the celestial land

uyar Anai aruLodu kaippatRi vanthum: to hold the hands of the great damsel, DEvayAnai, in holy matrimony;

aruNa giri pukkirunthum: You chose ThiruvaNNAmalai as Your favourite abode;

aRivu uLa paththarkku irangum iLaiyOnE: and You are merciful to all Your devotees who have attained True Knowledge, Oh Young Lord!

malaiyai vaLaiththup paRanthu maruvu puraththaic civanthu: He arched the mount Meru as a bow; He became enraged with the three demonical kingdoms (Thiripuram) capable of flying in the sky;

vaRithu nakaiththittu iruntha sivanAr tham mathalai: with a mere smile, He burnt them down; You are the child of that Lord SivA!

punaththil pukunthu nara vadivu utRuth thirinthu: You entered the millet-field and wandered there taking a human form;

maRamayilaic cutRivantha perumALE.: You encircled VaLLi, the peacock-like beautiful damsel of the hunters, and abducted her, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 428 thalaiyai mazhiththu - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]