திருப்புகழ் 417 கேதகையபூ முடித்த  (திருவருணை)
Thiruppugazh 417 kEdhagaiyapUmudiththa  (thiruvaruNai)
Thiruppugazh - 417 kEdhagaiyapUmudiththa - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான

......... பாடல் .........

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
     கேவலம தானஅற்ப ...... நினைவாலே

கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை

வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற

நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே

சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று ...
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு,

கேவலம் அதான அற்ப நினைவாலே கேள்வி அது
இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால்
... தாழ்மையான அற்ப
நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ்
வினையாலும்,

மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே ... மிக்க
அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும்,

வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி
எ(ல்)லாம் உழற்றும் அடியேனை
... வேதனையில் பட்டு, மிக்க
பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல்
உற்றுத் திரியும் அடியேனுக்கு

வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில்
மீதில் உற்று வருவாயே
... வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி,
என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே
எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக.

நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து ... நீதி
நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து,

நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற ... பெரும் புகழைக் கொண்ட
தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக,

நீடு அருளினால் விடுத்த பால குமரா ... பெருங் கருணையால்
உதவிய இளங் குமரனே,

செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே ... செழிப்புள்ள
நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே,

சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
சோபை வட கோபுரத்தில் உறைவோனே
... ஜோதி நெருப்பாகத்
தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக்
கோபுரத்தில் வீற்றிருப்பவனே,

சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே.
... விடாது பெய்யும்
பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி,
வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.279  pg 2.280  pg 2.281  pg 2.282 
 WIKI_urai Song number: 559 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 417 - kEdhagaiyapU mudiththa (thiruvaNNAmalai)

kEthakaiya pUmudiththa mAtharthama yAlilutRu
     kEvalama thAnARpa ...... ninaivAlE

kELviyathi lAthirukku mUzhvinaiyi nAlmikuththa
     kEduRuka vEninaikkum ...... vinaiyAlE

vEthanaiyi lEmikuththa pAthakanu mAyavaththil
     mEthiniye lAmuzhatRu ...... madiyEnai

veeduthavi yALavetRi vElkarama thEyeduththu
     veeRumayil meethilutRu ...... varuvAyE

neethineRi yEyazhiththa thArukanai vEraRuththu
     needupukazh thEvariRkaL ...... kudiyERa

needaruLi nAlviduththa bAlakuma rAsezhiththa
     neelaniRa mAlthanakku ...... marukOnE

sOthiyana lAvuthiththa sONakiri mAmalaikkuL
     sOpaivada kOpuraththi ...... luRaivOnE

sOnaimazhai pOlethirththa thAnavarkaL mALavetRi
     thOLinmisai vALeduththa ...... perumALE.

......... Meaning .........

kEthakaiya pU mudiththa mAthar tham maya(a)lil utRu kEvalam athAna aRpa ninaivAlE: Because of the lowly thoughts after falling passionately for the whores who wear the fragrant thAzham flower on their hair,

kELvi athu ilAthirukku(m) Uzh vinaiyinAl: because of fate which cannot be rationalised through any research,

mikuththa kEdu uRukavE ninaikkum vinaiyAlE: and because of the actions contemplated by me that are disaster-prone,

vEthanaiyilE mikuththa pAthakanumAy avaththil mEthini e(l)lAm uzhatRum adiyEnai: I am feeling miserable and have become the perpetrator of the worst sin, roaming around in this world aimlessly;

veedu uthavi ALa vetRi vEl karam athE eduththu veeRu mayil meethil utRu varuvAyE: kindly grant me liberation and come to take charge of me with Your victorious spear in Your lovely hand mounting the elegant peacock!

neethi neRiyE azhiththa thArukanai vEr aRuththu: To uproot and destroy the evil demon Tharakan who flouted all codes of conduct

needu pukazh thEvar ilkaL kudi ERa: and to resettle the famous celestials back in their homes,

needu aruLinAl viduththa bAla kumarA: You helped with tremendous compassion, Oh Young KumarA!

sezhiththa neela niRa mAl thanakku marukOnE: You are the nephew of Lord Vishnu of the hue of rich blue!

sOthi analA(y) uthiththa sONakiri mA malaikkuL sOpai vada kOpuraththil uRaivOnE: You reside in the beautiful northern temple-tower in the town aruNAchalam (thiruvaNNAmalai), whose mountain leapt up as a huge effulgence of fire!

sOnai mazhai pOl ethirththa thAnavarkaL mALa vetRi thOLin misai vAL eduththa perumALE.: When the demons attacked, coming like incessant downpour of rain, You killed them by wielding Your sword, drawing it from Your triumphant shoulders, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 417 kEdhagaiyapU mudiththa - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]