திருப்புகழ் 407 கமலமுகப் பிறை  (திருவருணை)
Thiruppugazh 407 kamalamugappiRai  (thiruvaruNai)
Thiruppugazh - 407 kamalamugappiRai - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான

......... பாடல் .........

கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
     கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல்

கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
     கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங்

குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
     குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக்

கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
     குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ

திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம்

செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
     டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித்

துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
     தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா

துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
     சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கமல முகப் பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல்
கயல் என பொன் சுழலும் விழிக் குழல் கார் போல்
... தாமரை
போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற
நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப்
போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும்,

கதிர் தரள் ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர
கமலத்து உகிர் விரலின் கிளி சேரும்
... ஒளி பொருந்திய முத்தை
ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த
மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின்
(மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும்,

குமரி தனத் திதலை மலைக்கு இசலி இணைக் கலசம் எனக்
குவி முலை சற்று அசைய மணிக் கலன் ஆட
... பருவப்
பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு
குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும்,
ரத்தின ஆபரணங்கள் ஆடவும்,

கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம்
எனக் குனகி பொருள் பறி (ப்) பவருக்கு உறவாமோ
... கொடி
போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில்
செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும்
பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ?

திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதித் திமிதிம் எனட்
டிமி டிமி டிட் டிகுர் திமிதித் ஒலி தாளம்
... திமிலை, உடுக்கை
முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர்
திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும்,

செககண செக் கண கதறத் திடுதிடு எனக் கொடு முடி எண்
திகை சிலை பட்டு உவரி பட
... செககண செக்கண என்ற பெரும்
ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள்
எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும்,

சிலை கோடித் துமிலம் உடற்று அசுரர் முடி பொடி பட ரத்தம்
உள் பெருக
... வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த
அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள
இடம் எல்லாம் பெருக,

தொகு தசை தொட்டு அலகை உ(ண்)ணத் தொடும் வேலா ...
விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி
வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே,

துவனி தினைப் புனம் மருவி குற மகளைக் களவு மயல்
சுகமொடு அணைத்த அருண கிரிப் பெருமாளே.
... (பட்சி
வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள்
வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே,
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.253  pg 2.254  pg 2.255  pg 2.256 
 WIKI_urai Song number: 549 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 407 - kamalamuga (thiruvaNNAmalai)

kamalamukap piRainuthalpoR chilaiyenavac chirakaNainaR
     kayalenapoR chuzhalumvizhik ...... kuzhalkArpOl

kathirtharaLop piyathasanak kamukukaLap puyakazhaipoR
     karakamalath thukirviraliR ...... kiLisErum

kumarithanath thithalaimalaik kisaliyiNaik kalasamenak
     kuvimulaisat RasaiyamaNik ...... kalanAdak

kodiyidaipat tudainadaipoR charaNamayiR kemanamenak
     kunakiporut paRipavaruk ...... kuRavAmO

thimilaiyuduk kudanmurasup paRaithimithith thimithimena
     dimidimidid dikurthimithith ...... tholithALam

sekakaNasek kaNakathaRath thiduthidenak kodumudiyet
     tikaisilaipat tuvaripadac ...... chilaikOdith

thumilavudat Rasurarmudip podipadarath thamuLperukath
     thokuthasaithot talakaiyuNath ...... thodumvElA

thuvanithinaip punamaruvik kuRamakaLaik kaLavumayaR
     sukamodaNaith tharuNakirip ...... perumALE.

......... Meaning .........

kamala mukap piRai nuthal pon silai ena vacchira kaNai nal kayal ena pon suzhalum vizhik kuzhal kAr pOl: Their face is like the lotus; their forehead is like the crescent moon; their eye-brows are like the bow; their beautiful rolling eyes are like sturdy arrows and fish of a great breed; their hair is like the dark cloud;

kathir tharaL oppiya thasanam kamuku kaLam puya kazhai pon kara kamalaththu ukir viralin kiLi sErum: their teeth are like bright pearls; their neck is like the betel-nut tree's branch; their shoulders are smooth like the bamboo; their reddish fingernails on their lotus-like hands are like the beaks of parrots;

kumari thanath thithalai malaikku isali iNaik kalasam enak kuvi mulai satRu asaiya maNik kalan Ada: these youthful women's bosom, stained with acne spots, compete in size with the mountain, jutting out like twin pots, and when the curved-in bosom heaves slightly, the ornaments made of precious gems swing a little;

kodi idai pattu udai nadai pon saraNa mayil kamanam enak kunaki poruL paRi (p)pavarukku uRavAmO: their slender creeper-like waist is wrapped around by cloth made of silk; their petite feet display a gait that looks like that of the peacock; and these whores flirtingly indulge in sweet talk and grab their suitors' belongings; is it proper for me to have liaison with such whores?

thimilai udukku udan murasu paRai thimithith thimithim ena dtimi dimi dit tikur thimithith oli thALam: Against the background beats of various drums like 'thimilai' and hand-drums sounding "thimithith thimithim ena dtimi dimi dit tikur thimithith",

sekakaNa sek kaNa kathaRath thiduthidu enak kodu mudi eN thikai silai pattu uvari pada: and the din of "sekakaNa sek kaNa", the peaks of several mountains in all the eight directions collapsed with a thundering noise; the seas were stirred up;

silai kOdith thumilam udatRu asurar mudi podi pada raththam uL peruka: the roaring demons, who fought fiercely with their bows bent, were killed and their heads smashed; their blood gushed and spread throughout the battlefield;

thoku thasai thottu alakai u(N)Nath thodum vElA: and the heaps of flesh were preyed upon by the devils when You wielded Your spear, Oh valorous One!

thuvani thinaip punam maruvi kuRa makaLaik kaLavu mayal sukamodu aNaiththa aruNa kirip perumALE.: You went to the millet-field filled with the sound of chirping birds and stealthily enticed VaLLi, the damsel of the KuRavAs; and You hugged her pleasurably with profound passion! You are seated in the mountain in ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 407 kamalamugap piRai - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]