பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 249 548. கடலிற் பரந்துவரும் அலைகளின்மீதே தோன்றி எழும் நிலவாலும் நினைத்து நினைத்து (மிக நினைத்து)ப் பெண்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் (வதந்தி) ஊர்ப்பேச்சாலும்; வடவாக்கினியைக் கோபித்து வீசுகின்ற தென்றற் காற்றாலும். வயல்சூழ்ந்த திரு அண்ணாமலையில் (இந்தப்) பெண்ணினுடைய அறிவு கலங்கலாமா (வருந்தலாமா) இடதுபாகத்தில் உமையைச் சேர்த்துக்கொண்ட சிவபெருமான் வணங்குகின்ற வீரனே! எழுமலைகளும் பிளந்து வீழும்படி எறிந்த வேலாயுதனே! வலிமை வாய்ந்த அசுரர்களைக் கலங்கி ஒடக் கோபித்த தலைவனே! திருமால், பிரமா, தேவேந்திரனாதியர் - இவர்தம் தம்பிரானே! (போதம் நலங்கலாமோ) 549. தாமரை முகம்; பிறையும் அழகிய வில்லும் (நுதல்) நெற்றியும் புருவமும்; மிகவும் உறுதியான அம்பும் நல்ல மீனும் போல்வன அழகாய்ச் சுழலும் கண்கள், கூந்தல் மேகத்தை ஒக்கும்; ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் (தசனம்) பல்; கமுகை (ஒக்கும்) கழுத்து புயம் மூங்கிலை (ஒக்கும்); (கமலப் பொற்கரத்துத் தாமரையை (நிகர்க்கும்) அழகிய கையின் விரலின் நகம் கிளியின் (மூக்கை) ஒக்கும், அச்ச நீக்கிய வரதமொன் றபயமொன் றங்கை; இச்சையாமிவர் உறுதல்கண் டிறைஞ்சினார் இமையோர்' (அருணாசல புராணம் இடப்பாகம்பொற்ற சருக்கம்). t எழுகிரிகளைப் பிளந்தது - பாட்டு 43. பக்கம் 17, 1 பாட்டு 257 பக்கம் 140. பார்க்க.