திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 401 இருவினை அஞ்ச (திருவருணை) Thiruppugazh 401 iruvinaianja (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான ......... பாடல் ......... இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த ...... அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ ...... டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் ...... தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருவினை யஞ்ச ... நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலவகை மங்க ... மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, இருள்பிணி மங்க ... அஞ்ஞானமும், நோய்களும் அகல, மயிலேறி ... நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, இனவருள் அன்பு மொழிய ... அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, க டம்புவின் அதகமும் கொடு ... உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி அளிபாட ... வண்டுகள் ரீங்காரம் செய்து முரல, கரிமுகன் எம்பி முருகனென ... யானைமுகன் கணபதி 'என் தம்பியே, முருகா' என்றழைக்க, அண்டர் களிமலர் சிந்த ... தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, அடியேன்முன் கருணைபொழிந்து ... என் முன்னே கருணை மிகக் காட்டி முகமும் மலர்ந்து கடுகி ... மலர்ந்த முகத்தோடு வேகமாக நடங்கொடு அருள்வாயே ... நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுர மங்க மதனுடல் மங்க ... திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், திகழ்நகை கொண்ட ... விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த விடையேறிச் சிவம் ... ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் வெளி யங்கண்அருள் குடிகொண்டு ... பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, திகழந டஞ்செய்து ... விளங்க நடனம் செய்து, எமையீண் அரசியிடங்கொள ... எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழுவுடை யெந்தை அமலன் ... மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ந்த குருநாதா ... மகிழ்ச்சியடைந்த குருநாதனே, அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை ... திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் அமளிந லங்கொள் பெருமாளே. ... மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.241 pg 2.242 pg 2.243 pg 2.244 WIKI_urai Song number: 543 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 401 - iruvinai anja (thiruvaNNAmalai) iruvinai anja malavagai manga iruL piNi manga ...... mayilERi inavaruL anbu mozhiya kadambu vinathagamum kod ...... aLipAda karimukan embi muruganen aNdar kaLimalar sindha ...... adiyEnmun karuNai pozhindhu mukamum malarndhu kadugi natangkod ...... aruLvAyE thiripura manga madhanudal manga thigazh nagai koNda ...... vidaiyERi sivan veLi angaN aruLkudi koNdu thigazha natam seydhu ...... emaiyeeNa arasi idam koL mazhuvudai endhai amalan magizhndha ...... gurunAthA aruNai vilangal magizh kuRa mangai amaLina lamkoL ...... perumALE. ......... Meaning ......... iruvinai anja: Scaring away both my karmas (good deeds and bad deeds), malavagai manga: driving all my faults and defects out of sight, and iruL piNi manga: making my ignorance and diseases disappear, mayilERi: You must come riding on Your peacock, inavaruL anbu mozhiya: speaking all graceful and kind words to me; kadambu vinathagamum kod aLipAda: beetles will hum around Your kadappa flowers seeking the life-sustaining nectar; karimukan embi muruganena: Elephant-faced Ganapathi will call You fondly "Oh my younger brother, Muruga"; aNdar kaLimalar sindha: DEvAs in heaven will happily shower flowers happily; adiyEnmun karuNai pozhindhu mukamum malarndhu: and You must appear before me pouring Your Grace over me and with a bright smile, kadugi natangkod aruLvAyE: as fast as You can in Your dancing pose! thiripura manga madhanudal manga: Thiripuram (Asuras' abode) was burnt down and so also was Manmathan's (Love God) body thigazh nagai koNda vidaiyERi sivan: by a smile from Sivan, the One who mounts the Bull, veLi angaN aruLkudi koNdu: and who appears as a Cosmic Light, thigazha natam seydhu: dancing gracefully; emaiyeeNa arasi idam koL: He also takes Mother Goddess on the left side of His body; mazhuvudai endhai amalan magizhndha gurunAthA: in one arm, He carries mazhu (pick-axe); and Our Father Sivan, the spotless one, is thrilled about You, His Master! aruNai vilangal magizh kuRa mangai: At the mount of ThiruvaNNAmalai, VaLLi, the damsel of KuRavAs, is happy because amaLina lamkoL perumALE.: she shares her flowery bed with You, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |