(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 402 இருவினை ஊண்  (திருவருணை)
Thiruppugazh 402 iruvinaiUN  (thiruvaruNai)
Thiruppugazh - 402 iruvinaiUN - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருவினை ஊண் பசும் பை ... இரண்டு வினைகளுக்கும்
உணவிடமான புத்தம் புது தோல் பை,

கரு விளை கூன் குடம்பை ... கரு வளருவதற்கு இடமான பாத்திரம்
ஆகிய உடம்பு,

இடர் அடை பாழ் பொதும்பு ... துன்பங்களையே அடைத்து
வைத்துள்ள, பாழடையப் போவதான குகை,

அகித வாரி இடை திரி சோங்கு ... துன்பமும் தீமையும் கொண்ட
கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம்,

கந்தம் மது அது தேங்கு கும்பம் ... மலச்சேறும் மூத்திர நீரும்
நிரம்பிய இடம்,

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல்
பாண்டம்
... இரவிலே தூங்குகின்ற பிணம் போன்ற, நோயினுக்கு
உருவாய் அமைந்த பாத்திரம்,

அஞ்சும் மருவிய கூண்டு ... ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு,

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை ... என் மனத்துடன்
உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய
இந்த உடம்பு

அழியாது என்று ... அழியாமல் நிலைத்து நிற்கும் என்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து ...
உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும், மயக்கம்
நீங்கப் பெற்று,

உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ ... உனது இரண்டு
தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அருணையில் ஓங்கு துங்க சிகரம் ... திரு அண்ணாமலையில்
உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில்,

கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்
அடியவர் பாங்க
... தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள்
தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே,

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட ... முன் ஒரு காலத்தில்
சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட,

அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே ... புதுமை வாய்ந்த
சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே,

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் ... கருணை நிறைந்த
புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன்,

உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த ... சர்ப்ப
சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே,

வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச ... மலைகளைத்
தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய
நூல்களில் வல்லவனே, அரசனே,

நிசேந்த்ர கந்த ... சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே,

குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே. ... வஜ்ராயுதத்தைக்
கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே.


* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற
இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.243  pg 2.244  pg 2.245  pg 2.246 
 WIKI_urai Song number: 544 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 402 - iruvinai UN (thiruvaNNAmalai)

iruvinai yUNpa sumpai karuviLai kUnku dampai
     yidaradai pAzhmpo thumpa ...... kithavAri

idaithiri sOngu kantha mathuvathu thEngu kumpa
     miravidai thUngu kinRa ...... piNanOvuk

kuruviyal pANda manju maruviya kUNdu nenjo
     duyirkudi pOnku rampai ...... yazhiyAthen

Rulakuda nEnRu koNda karumapi rAntho zhinthu
     nupayapa thAmpu yanga ...... LadaivEnO

aruNaiyi lOngu thunga sikaraka rAmpu yanga
     Lamarar kuzhAnku vinthu ...... thozhavAzhum

adiyavar pAnga paNdu pukalaki lANda muNda
     abinava sArnga kaNdan ...... marukOnE

karuNaimru kEnthra anpa rudanura kEnthrar kaNda
     kadavuLna tEnthrar maintha ...... varaisAdum

kalapaka kEnthra thanthra arasani sEnthra kantha
     karakuli sEnthrar thangaL ...... perumALE.

......... Meaning .........

iruvinai UN pasum pai: It is just a green bag of skin in which the good and bad deeds are ingested;

karu viLai kUn kudampai: It is but a vessel in which birth takes place;

idar adai pAzh pothumpu: It is a cavern, to be doomed soon, filled up with miseries;

akitha vAri idai thiri sOngu: It is a rudderless ship tottering in the mid-sea of distress and evil;

kantham mathu athu thEngu kumpam: It is a septic tank filled with faeces and urine;

iravu idai thUngukinRa piNa nOvukku uruvu iyal pANdam: It is but a sleeping corpse in the night and a receptacle for all diseases;

anjum maruviya kUNdu: It is a cage in which all the five elements are filled;

nenjodu uyir kudi pOm kurampai: It is this body, a small cottage, from which my mind and life will depart simultaneously.

azhiyAthu enRu: Thinking that this body is indestructible,

ulakudan EnRu koNda karuma pirAnthi ozhinthu: I develop attachment with people of this world, due to delusion, being the result of my past deeds; getting rid of that delusion,

un upaya pathAm puyangaL adaivEnO: will I ever be able to attain Your two hallowed lotus feet?

aruNaiyil Ongu thunga sikaram: In front of the imposing and impeccable Temple Tower of ThiruvaNNAmalai,

karAm puyangaL amarar kuzhAm kuvinthu thozha vAzhum adiyavar pAnga: Your devotees are being paid obeisance to by the celestials with their lotus hands folded; You are the friend of those devotees!

paNdu pukal akilANdam uNda: Once, the entire world was swallowed by

abinava sArnga kaNdan marukOnE: Lord Vishnu, who holds in His hand the unique bow, SArangam; You are His nephew!

karuNai mrukEnthra anparudan: Along with the compassionate sage, VyAkrapAdhar, the tiger-footed one,

urakEnthrar kaNda kadavuL natEnthrar maintha: the Great Serpent King, Sage Pathanjali, witnessed the Cosmic Dance of Lord NadarAjar*; You are the son of that NadarAjar.

varai sAdum kalapaka: The thick feathers of Your Peacock are capable of smashing the mountains to pieces!

kEnthra thanthra arasa: You are well-versed in literature, Oh King!

nisEnthra kantha: You are the greatest preserver of Truth, Oh Kantha!

kulisa kara inthrar thangaL perumALE.: You are the Lord worshipped by all IndrAs who wield the weapon Vajra, Oh Great One!


* In Chidhambaram, Lord NadarAjar danced the Cosmic Dance at the request of VyakrapAdhar and Sage Pathanjali.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 402 iruvinai UN - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top