திருப்புகழ் 398 இரத சுரதமுலை  (திருவருணை)
Thiruppugazh 398 iradhasuradhamulai  (thiruvaruNai)
Thiruppugazh - 398 iradhasuradhamulai - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
     தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
          தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான

......... பாடல் .........

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
     அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
          இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே

இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த
     அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த
          லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே

புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச
     அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த
          புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே

புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
     மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து
          பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே

பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
     தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட
          படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே

பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு
     டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர்
          பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே

அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப
     ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற
          அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே

அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
     இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த
          அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரத சுரத முலைகளு(ம்) மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல்
விளங்க இசலி இசலி உபரித லீலை உற்று இடை நூல்
நுடங்க
... சுவை கொண்டதும் இன்பம் தருவதுமான தனங்களும் மார்பில்
அழுத்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க, காமம் பெருகும் நிலையிலே
விரல்களின் நகக்குறி தைக்க, (அக்குறிகளில் கசியும் ரத்தம்) ரத்தினம்
போல் ஒளி பெருக, அடிக்கடி பிணக்கு ஊடல் கொண்டு பிறகு மேல்
விழும் கலவி லீலைகளை விளையாடி, நூல் போன்ற மெல்லிய
இடை துவள,

உ(ள்)ள மகிழ்ச்சியினோடே இருவர் உடலும் ஒரு உருவாய்
நயக்க முக(ம்) மேல் அழுந்த அளகம் அவிழ வளைகளுமே
கலிக்க நயன அரவிந்த லகரி பெருக
... உள்ளத்தில் களிப்புடன்
இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருவராகி இன்பம் தர முகத்தின் மேல்
முகம் அழுந்த, கூந்தல் அவிழ்ந்து விழ, வளைகள் ஒலிக்க, கண்
என்னும் தாமரையில் மயக்கம் பெருக,

அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே
புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்)
மிஞ்ச அவசம் கவசம் அளவு இயலே தரிக்க
... வாய் இதழ்
ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு
காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும்
ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம்
அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக,

அதிலே அநந்த புதுமை விளைய அது பரமாபரிக்க இணை
தோளும் ஒன்றி அதி சுகக் கலையாலே புளக(ம்) முதிர இத
கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
... அப்போது கணக்கற்ற
புதிய உணர்ச்சிகள் தோன்ற, அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க
இரண்டு தோள்களும் ஒன்றிக் கலந்து, அதிக சுகமாகிய பகுதியால்
புளகாங்கிதம் நிறைய, காமம் என்கின்ற கடல் ததும்பிப் பரவ, இடுப்பில்
கட்டியுள்ள கயிறும் அரைஞாணும் ஒளி குறைந்து அறுபட,

மனமும் மனமும் உருகியெ ஆதரிக்க உயிர் போல் உகந்து
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலை மாதர்
சிங்கி விட அருள் புரிவாயே
... மனத்தோடு மனம் உருகி அன்பு
மேற்கொள்ள உயிர் போல மகிழ்ந்து பாவித்து, பொருள் கிட்டும்
வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொது மகளிரின் விஷச்
சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக.

பரவு மகர முகரமு(ம்) மேவல் உற்ற சக(ர)ரால் விளைந்த
தமர(ம்) திமிர(ம்) பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து
சிவனிடத்து அமர் சேயே
... போற்றப்படும் மகர மீனும் சங்கும்
கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர்
கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி
பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய்
உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு
வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே,

பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்
குடியினில் பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும்
அண்டர் பதிய
... பழநி மலை மீதும், புகழோடு கூடிய சுவாமி
மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், நீ என்றும்
மங்கலமாய் வாழ்கின்ற திருத்தணிகையிலும் உறைவிடம்
கொண்டவனே, தேவர்கள் உன்னைத் தரிசிக்க வருகின்ற
அத்தலங்களில் எல்லாம் உறைபவனே,

முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையைப்
புனைவோனே
... பழம் பொருளாகிய வீட்டின்பமானது இந்த
அடிமைக்கும் கிட்டும்படியாக நின்று என் பாமாலையை அணிந்து
கொள்பவனே,

அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
அடையும் இடரை முடுகியெ நூற துட்ட கொலைகாரர்
என்ற அசுரர் படையை அடையவும் வேர் அறுத்த அபிராம
...
திருமாலும் பிரமனும் தேவர்களும் ஆகிய மேலோர்களைக் காத்து
அருள்பவனே, உன் அடியார்கள் அடையும் துயரத்தை ஓட்டித்
தூளாக்க, துஷ்டர்களான கொலைகாரர்கள் எனப்படும் அசுரர்களின்
சேனையை முழுமையும் வேரறுத்த அழகனே,

செந்தில் உரக வெற்பு உடையோனே அருண கிரண
கருணைய பூரணச் சரணம் மேல் எழுந்த இரண கரணம்
முரண் உறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
... திருச்செந்தூர்,
நாகமலை என்ற திருச்செங்கோடு என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே,
செவ்விய ஒளி வீசுவதும் உனது கருணை பூரணமாக நிறைந்ததுமான
திருவடியைப் பகைத்து மேலெழுந்த போர்க்குணம் கொண்டவனாய்
மாறுபட்டு எழுந்த சூரன் அஞ்சும்படி மயிலின் மேல் ஏறிவரும் கந்தனே,

அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால்
அமர்ந்த அறுமுகப் பெருமாளே.
... திருவண்ணாமலையில்
வாழும் சிவபெருமானுடைய திருக்கோயிலின் பெரிய கோபுரத்திற்கு
வடதிசையில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப்
பெருமாளே.


இந்தப் பாட்டின் முதல் 12 வரிகள் புணர்ச்சியை விவரிக்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.235  pg 2.236  pg 2.237  pg 2.238  pg 2.239  pg 2.240 
 WIKI_urai Song number: 540 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 398 - iradha suradhamulai (thiruvaNNAmalai)

iratha surathamulai kaLumArpu kuththa nuthalvEr varumpa
     amutha nilaiyilvira lukirEkai thaikka maNipOl viLanga
          isali yisaliyupa rithaleelai yutRu idainUl nudanga ...... vuLamakizhc chiyinOdE

iruva rudalumoru vuruvAyna yakka mukamE lazhuntha
     aLaka mavizhavaLai kaLumEka likka nayanA ravintha
          lakari perukaatha ramumEya ruththi muRaiyE yaruntha ...... uraiyezhap parivAlE

puruva nimirairu kaNavALni maikka vupachA raminja
     avasa kavasamaLa viyalEtha rikka athilE yanantha
          puthumai viLaiyaathu paramApa rikka iNaithO LumonRi ...... athisukak kalaiyAlE

puLaka muthiravira kamenvAri thaththa varainAN mazhunga
     manamu manamumuru kiyeyAtha rikka vuyirpO lukanthu
          poruLa thaLavumaru vuRumAya viththai vilaimA tharsingi ...... vidaarut purivAyE

paravu makaramuka ramumEva lutRa sakarAl viLaintha
     thamara thimirapira palamOka rathna salarA sikoNda
          padiyai muzhuthumoru nodiyEma thiththu valamA kavanthu ...... sivanidath thamarsEyE

pazhani misaiyilisai yisaiyEra kaththil thiruvA vinanku
     diyinil piramapura mathilvAzhthi ruththa NikaiyU dumaNdar
          pathiya muthiyakathi yathunAye nukku muRavA kininRu ...... kavithaiyaip punaivOnE

ariyu mayanumama rarumAya sitta paripA lananpa
     radaiyu midaraimudu kiyenURa thutta kolaikA rarenRa
          asurar padaiyaiyadai yavumvEra Ruththa apirA masenthi ...... lurakaveR pudaiyOnE

aruNa kiraNakaru NaiyapUra Naccha raNamE lezhuntha
     iraNa karaNamura NuRusUra nutka mayilE Rukantha
          aruNai yiRaiyavarpe riyakOpu raththil vadapA lamarntha ...... aRumukap perumALE.

......... Meaning .........

iratha suratha mulaikaLu(m) mArpu kuththa nuthal vErvu arumpa amutha nilaiyil viral uki rEkai thaikka maNi pOl viLanga isali isali uparitha leelai utRu idai nUl nudanga: Their succulent and enjoyable breasts keep on pressing my chest; beads of sweat appear on their forehead; in the rapture of passion, their nails pierce my body making marks; (the blood oozing from those marks) shines like ruby; with frequent squabbles of lovers, they later fall all over the body and play games of carnal pleasure; their slender thread-like waist goes limp;

u(L)La makizhcchiyinOdE iruvar udalum oru uruvAy nayakka muka(m) mEl azhuntha aLakam avizha vaLaikaLumE kalikka nayana aravintha lakari peruka: with both our hearts brimming with delight, our bodies too unite pleasurably; with each face pressing the other, their tufted hair loosens and spreads out, their bangles jingling, and their lotus eyes filling with faint;

atharamumE aruththi muRaiyE aruntha urai ezhap parivAlE puruvam nimira iru kaN a(v)vAL nimaikka upachAra(m) minja avasam kavasam aLavu iyalE tharikka: while imbibing the saliva oozing in their mouth in the proper manner, a few words emanate out of love causing their eye-brows to lock and ascend; their two eyes stare brightly and their adulatory speech intensifies; the gay abandon of self-control covers the bodies like a blanket;

athilE anantha puthumai viLaiya athu paramAparikka iNai thOLum onRi athi sukak kalaiyAlE puLaka(m) muthira itha kam en vAri thaththa varai nAN mazhunga: at that very moment, innumerable new sensations pulsate, and to deeply experience that bliss, the two pairs of shoulders mingle together; from that ecstatic pleasure, all parts of contact are filled with spell-binding enjoyment; the sea of passion overflows from its brim and spreads everywhere; the cord and the golden string-like ornament worn around the waist lose their lustre and snap suddenly;

manamum manamum urukiye Atharikka uyir pOl ukanthu poruLathu aLavu maruvu uRu mAya viththai vilai mAthar singi vida aruL purivAyE: making believe that our two minds have melted and fused together and feigning love like a soul-mate, these women provide carnal pleasure as long as the supply of money lasts; kindly bless me to get rid of the poisonous spell cast by these treacherous and tricky whores, Oh Lord!

paravum akara mukaramu(m) mEval utRa saka(ra)rAl viLaintha thamara(m) thimira(m) pirapala mOka rathna sala rAsi koNda padiyai muzhuthum oru nodiyE mathiththu valamAka vanthu sivanidaththu amar sEyE: The ocean was created by sakarAs, thereby obtaining the name SAkaram, that contains famous makara fish and conches; it makes a roaring noise, remaining dark; it is famous and attractive; embedded in it are precious gems and pearls; that ocean surrounds the world which was measured by You while flying around it in a fraction of a second, and then You came and sat on the lap of Your father, Lord SivA, Oh Child!

pazhani misaiyil isai isai Erakaththil thiruvAvinankudiyinil piramapuram athil vAzh thiruththaNigai Udum aNdar pathiya: You have Your abode on top of Mount Pazhani, in the famous town SwAmimalai, in ThiruvAvinankudi, in SeekAzhi, in ThiruththaNigai where You prosper for ever, and in all such places where the celestials gather to worship You, Oh Lord!

muthiya kathiyathu nAyEnukkum uRavAki ninRu kavithaiyaip punaivOnE: You wear with relish the garland of poems that I compose so that this slave could also attain the bliss of liberation which is the oldest principle, Oh Lord!

ariyum ayanum amararum Aya sitta paripAlan anpar adaiyum idarai mudukiye nURa thutta kolaikArar enRa asurar padaiyai adaiyavum vEr aRuththa apirAma: You are the gracious protector of the distinguished celestials including Lord VishNu and Brahma! In order to shatter the distress of Your devotees to pieces, You annihilated the entire armies of the demons who were evil murderers, Oh Handsome One!

senthil uraka veRpu udaiyOnE aruNa kiraNa karuNaiya pUraNac charaNam mEl ezhuntha iraNa karaNam muraN uRu cUran udka mayil ERu kantha: You are seated in places like ThiruchchendhUr and nAgamalai known as ThiruchchengkOdu! When the rebellious demon SUran waged a war against You harboring utter enmity against Your hallowed feet filled with compassion, You mounted the peacock petrifying him, Oh KanthA!

aruNai iRaiyavar periya kOpuraththil vadapAl amarntha aRumukap perumALE.: You are seated in the northern side of the large temple tower of Lord SivA in ThiruvaNNAmalai, Oh Great One with six hallowed faces!


The first 12 lines of this song describe the carnal act of making love.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 398 iradha suradhamulai - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]