திருப்புகழ் 396 இடருக்கு இடர்  (திருவருணை)
Thiruppugazh 396 idarukkuidar  (thiruvaruNai)
Thiruppugazh - 396 idarukkuidar - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ...... தனதான

......... பாடல் .........

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
     மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
     லெரியைத் தருமாமதி ...... நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ...... கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ...... வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ...... மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
     லருணைத் திருவீதியி ...... லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும்
இறுதிச் சிறு கால் வரும் அதனாலே
... துன்பத்துக்கு மேல்
துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின் மேலே வந்து,
அழிவைத் தரக்கூடிய சிறு தென்றல் காற்று வீசி வருகின்ற அந்தக்
காரணத்தாலும்,

இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில் எரியைத்
தரு மா மதி நிலவாலே
... தகுதியைக் கொண்டதும், காட்டு முயல்
போன்ற களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில்
இருந்துகொண்டு நெருப்பை வீசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும்,

தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை
தொலையத் தனி வீசிய கடலாலே
... மேல் மேல் தொடர்ந்து
வந்து கொடிய வேதனையை நான் அடையும்படி, கரையின் மீது
அலைகள் பட்டு அழிய அந்த அலைகளை ஒப்பற்ற விதத்தில்
வீசுகின்ற கடலாலும்,

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர்
துவளத் தகுமோ துயர் தொலையாதோ
... ஒரு துணையும்
இல்லாமல் அலங்கரித்த மலர்ப் படுக்கையில் தனிமையில் எனது உயிர்
வாடுதல் தகுமோ? என் விரக வேதனை ஒழியாதோ?

வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை மடியச்
சுட ஏவிய வடிவேலா
... பொன் நிறைந்த வடமேரு மலை போல்
விரைந்து சென்று சண்டை செய்த சூரனை இறந்து போகுமாறு
சுட்டெரிக்கச் செலுத்திய கூரிய வேலனே,

மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள் மகிழப்
புன மேவிய மயில் வீரா
... வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற
குறத்தியும், மெய்ம்மை திகழும் லக்ஷ்மியின் சிறந்த மகளுமான வள்ளி
மகிழும்படி தினைப் புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே,

அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணைத்
திரு வீதியில் உறைவோனே
... நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை
மடலின் தழைகள் சேர்ந்த வயல்களை உடைய திருவண்ணாமலையின்
தெருக்களில் வாழ்பவனே,

அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு
அரசாகிய பெருமாளே.
... உலகுக்கும், சிவனுக்கும், உமா தேவிக்கும்,
இமையாத விழிகளை உடைய தேவர்களுக்கும் அரசனாகிய பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.
மன்மதனுடைய பாணங்கள், தென்றல் காற்று, நெருப்பை வீசும் நிலா, அலைகள்
வீசும் கடல், மலர்ப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும்
அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.233  pg 2.234 
 WIKI_urai Song number: 538 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 396 - idarukku idar (thiruvaNNAmalai)

idaruk kidarAkiya kodumaik kaNaimElvarum
     iRuthic ciRukAlvaru ...... mathanAlE

iyalaith tharukAnaka muyalaith tharumEniyil
     eriyaith tharumAmathi ...... nilavAlE

thodarak koduvAthaiyi ladaiyak karaimElalai
     tholaiyath thaniveesiya ...... kadalAlE

thuNaiyat RaNipUmala raNaiyit RaniyEnuyir
     thuvaLath thakumOthuyar ...... tholaiyAthO

vadapoR kulamEruvin mudukip porucUranai
     madiyac cudaEviya ...... vadivElA

maRavak kulamAmoru kuRameyth thirumAmakaL
     makizhap punamEviya ...... mayilveerA

adarap padarkEthakai madalit RazhaisErvayal
     aruNaith thiruveethiyi ...... luRaivOnE

avanith thirumAthodu sivanuk kimaiyAvizhi
     amarark karasAkiya ...... perumALE.

......... Meaning .........

idarukku idar Akiya kodumaik kaNai mEl varum iRuthic ciRu kAl varum athanAlE: Because of the deadly and gentle southerly breeze that drifts along with the evil and flowery arrows wielded by Manmathan (the God of Love), adding more and more misery,

iyalaith tharu kAnakam muyalaith tharu mEniyil eriyaith tharu mA mathi nilavAlE: because of the fire thrown on the body by the bright rays of the beautiful moon which has a distinct scar in the shape of a jungle-rabbit,

thodarak kodu vAthaiyil adaiyak karai mEl alai tholaiyath thani veesiya kadalAlE: and because of the unique way in which the sea throws off the waves that wither away at the shore adding to my suffering,

thuNai atRa pU malar aNaiyil thaniyEn uyir thuvaLath thakumO thuyar tholaiyAthO: is it fair that my life fades out in solitude upon a decorated floral bed with no one next to me? Will there be no end to my agony of separation?

vada poR kula mEruvin mudukin poru cUranai madiyac cuda Eviya vadivElA: Oh Lord, You wielded Your fiery spear and killed the demon SUran who fought ferociously like the golden mount MEru in the north!

maRavak kulamAm oru kuRa meyth thiru mA makaL makizhap puna mEviya mayil veerA: You are the valorous one, mounted on the peacock, who went to the millet-field to the delight of VaLLi, the unique damsel of the hunters and who is the renowned daughter of the truthful Goddess Lakshmi!

adarap padar kEthakam madalin thazhai sEr vayal aruNaith thiru veethiyil uRaivOnE: You reside in the streets of ThiruvaNNAmalai surrounded by paddy fields where leafy flowers of thAzhai grow bunched together!

avanith thiru mAthodu sivanukku imaiyA vizhi amararkku arasAkiya perumALE.: The entire world, Lord SivA, UmAdEvi and the celestials, known for their unflickering eyelashes, revere You as the King, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The God of Love Manmathan, His arrows, the southerly breeze, the moon radiating fire, the sea flinging the waves and the flowery single bed are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 396 idarukku idar - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]