திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 395 ஆனை வரிக் கோடு (திருவருணை) Thiruppugazh 395 AnaivarikkOdu (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதானா ......... பாடல் ......... ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட் டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட் டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச் சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த் தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள் ... யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் ... முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத் தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று ... பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே ... ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய கடல் சூரை வதைத்திடுவோனே ... தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து) தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே ... தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா ... தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய் தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே. ... அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே. |
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்). |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.229 pg 2.230 pg 2.231 pg 2.232 WIKI_urai Song number: 537 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 395 - Anai varik kOdu (thiruvaNNAmalai) Anaivarik kOdiLanirp pAramulaic chArasaipat tAdaimaRaith thAdumalark ...... kuzhalArkaL Aravadath thOdalaiyap pEsinakaith thAsaiporut tAraiyumeth thAkamayak ...... kidumOkar sOnaimazhaip pAravizhith thOkaimayiR chAthiyarkaith thUthuviduth thEporuLaip ...... paRimAthar thOthakamut REzhnarakiR chErumazhaR kAyanaiyut chOthiyoLip pAthamaLith ...... tharuLvAyE thAnathanath theethimilaip pErikaikot tAsamalaic chAyakadaR cUraivathaith ...... thiduvOnE thALaviyaR chOthiniRak kAlinezhak kOliyeduth thAparamvaith thAdupavark ...... korusEyE thEnirasak kOvaiyithazhp pUvaikuRap pAvaithanath thEyurukic chErumaNik ...... kathirvElA seeraruNaik kOpuramut RAnapunath thOkaiyumeyth thEvamakat kOrkaruNaip ...... perumALE. ......... Meaning ......... Anai varik kOdu iLa neerap pAra mulaic chAr asai pattu Adai maRaiththu Adum malark kuzhalArkaL: The striped ivory tusks of the elephant and the baby coconuts are comparable to their plump breasts which shake under the cover of silk cloth; the hair of these women is bedecked with flowers; Ara vadath thOdu alaiyap pEsi nakaiththu Asai poruttu yAraiyum meththAka mayakkidum mOkar: when they speak, their pearl necklaces and dangling earstuds sway a lot; these passionate women with their sweet smile enchant anyone deceitfully and extract gold; sOnai mazhaip pAra vizhith thOkai mayil sAthiyar kaith thUthu viduththE poruLaip paRi mAthar thOthakam utRu: they have thick and dark hair like rain-bearing cloud; they resemble peacocks with beautiful eyes; they send their hand-picked messengers (to their suitors) and drain out their wealth; having fallen victim to the treachery of these whores, Ezh narakil sErum azhaR kAyanai ut chOthi oLip pAtham aLiththu aruLvAyE: I am destined to suffer in seven* hells; I have taken birth in this body that is doomed to be burnt down; kindly grant me the inner light of the effulgence that is Your hallowed feet! thAnathanaththee thimilai pErikai kotta sam malaic chAya kadal cUrai vathaiththiduvOnE: Against the background sound to the meter of "thAnathanaththee" emanating from the drums, You completely destroyed the mount Krouncha and the demon SUran who was hiding in the sea! thALa iyal chOthi niRak kAlin ezhak kOli eduth(thu) thAparam vaiththu Adupavarkku oru sEyE: You are the unique child of the dancing Lord SivA who determines the characterisation of beats with His hallowed feet, lifting one foot up in a bent posture, the other foot being firmly fixed on the ground! thEnin irasak kOvai ithazhp pUvai kuRap pAvai thanaththE urukic chErum aNik kathir vElA: Her reddish lips are like kovvai fruit, tasting like sweet honey; She is the damsel of the KuRavAs, petite like the bird, nAgaNavAy; Your heart melted for that VaLLi's bosom and You became one with her, Oh holder of the bright spear! seer aruNaik kOpuram utRu Ana punath thOkaiyum mey thEva makatku Or karuNaip perumALE.: Taking Your seat on top of the beautiful temple tower in ThiruvaNNAmalai, You shower matchless grace on Your favourite consort VaLLi, the peacock in the millet field, and on DEvayAnai, who has true love for You, Oh Great One! |
* The seven hells are: kUdAsalam, kumbipAkam, aLLal, athOkathi, Arvam, pUthi and chenthu (pingalam). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |