திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 394 அழுதும் ஆவா (திருவருணை) Thiruppugazh 394 azhudhumAvA (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனா தானனத் தனதனா தானனத் தனதனா தானனத் ...... தனதான ......... பாடல் ......... அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக் கவசமா யாதரக் ...... கடலூடுற் றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரியஆ தேசபுற் ...... புதமாய பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப் படியுமா றாயினத் ...... தனசாரம் பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப் பரமமா யூரவித் ...... தகவேளே பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் பொருதவே லாயுதப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு ... அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும், அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று ... தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும், அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா மோன முத்திரை நாடி ... அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும், பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே ... தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல், வினைப் பெரிய ஆதேச புற்பதம் ஆய பிறவி வாராகரம் சுழியிலே ... வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே, போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே ... நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக. பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும் ... பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி, ஆறு ஆயினத் தன சாரம் பருகுமாறு ஆனனச் சிறுவ ... கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே, சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே ... திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே, பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட ... பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க, முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ என ... முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற பொருத வேலாயுதப் பெருமாளே. ... போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.227 pg 2.228 pg 2.229 pg 2.230 WIKI_urai Song number: 536 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 394 - azhudhum AvA (thiruvaNNAmalai) azhuthumA vAvenath thozhuthamU dUdunek kavasamA yAtharak ...... kadalUdut RamaivilkO lAkalac camayamA pAthakrk kaRiyoNA mOnamuth ...... thirainAdip pizhaipadA njAnameyp poruLpeRA thEvinaip periyaA thEsapuR ...... puthamAya piRavivA rAkarac cuzhiyilE pOyvizhap peRuvathO nAninip ...... pukalvAyE pazhaiyapA keerathip padukaimEl vAzhvenap padiyumA RAyinath ...... thanasAram parukumA RAnanac ciRuvasO NAsalap paramamA yUravith ...... thakavELE pozhuthusUzh pOthuveR pidipadA pArmuthaR podipadA vOdamuth ...... theRimeenap puNarikO kOvenac curuthikO kOvenap poruthavE lAyuthap ...... perumALE. ......... Meaning ......... azhuthum AvA enath thozhuthum UdUdu nekku: I cried a lot; I offered worship amidst intense sobbing; from time to time, I melted and choked from devotion; avasamAy Atharak kadal UduRRu: I lost control and drowned in the sea of love which was my supportive foundation; amaivil kOlAkalac camaya mA pAthakarkku aRi oNA mOna muththirai nAdi: I went in pursuit of the symbol of silence which could never be discerned by restless and vain religious fanatics; pizhai padA njAna meyp poruL peRAthE: still, I could not attain the flawless True Knowledge; vinaip periya AthEsa puRpatham Aya piRavi vArAkaram suzhiyilE: like a large bubble capable of assuming various sizes, depending on the extent of past deeds, birth is like a whirlwind in the sea; pOy vizhap peRuvathO nAn inip pukalvAyE: am I now destined to fall into that? Kindly tell me. pazhaiya pAkeerathip padukai mEl vAzhvu enap padiyum: Materialising as prosperous sons on the banks of the old Ganga river in the SaravaNa Pond, ARu Ayinath thana sAram parukumARu Ananac ciRuva: You imbibed the nectar-like milk from the bosoms of six KArthigai girls with Your six holy faces, Oh Little One! sONAsalap parama mAyUra viththaka vELE: You are the Supreme Deity of ThiruvaNNAmalai, Oh Lord, mounting the Peacock; You are the Embodiment of Knowledge! pozhuthu sUzh pOthu veRpu idipadA pAr muthal podi padA Oda: At dusk, mount Krouncha was crushed to pieces and all the planets, including Earth, were smashed to smithereens; muththu eRi meenap puNari kO kO ena suruthi kO kO ena: the seas, throwing pearls on the shores and protecting the fish, wailed and howled uncontrollably; and the vedic scriptures began to moan loudly; porutha vElAyuthap perumALE.: when You fought the war with Your Spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |