திருப்புகழ் 389 விரகொடு வளை  (திருவருணை)
Thiruppugazh 389 viragoduvaLai  (thiruvaruNai)
Thiruppugazh - 389 viragoduvaLai - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

......... பாடல் .........

விரகொடு வளைசங் கடமது தருவெம்
     பிணிகொடு விழிவெங் ...... கனல்போல

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் ...... திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் ...... புனல்பாயுங்

கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண் ...... டுயில்மாலம்

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் ...... டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங் ...... கையில்மேவ

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு ...
சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய
பாசக் கயிற்றைக் கொண்டு,

விழி வெம் கனல் போல வெறி கொடு சமன் நின்று ... கண்கள்
தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று,

உயிர் கொள்ளும் நெறி இன்று என ... உயிரைக் கொள்ள
வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து,

விதி வழி வந்திடு போதில் ... விதியின் ஏற்பாட்டின்படி
நெருங்குகின்ற அச்சமயத்தில்,

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர்
கண் புனல் பாயும் கலகமும் வரு முன்
... வஞ்சகம் மிகுந்த
மனத்துடன் மாதர்கள்,சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர்
பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக,

குலவினை களையும் கழல் தொழும் இயல் தந்து
அருள்வாயே
... முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும்
திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

பரவிடும் அவர் சிந்தையர் ... தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்தில் உறைபவரும்,

விடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் ...
நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற
படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால்,

அம் பழ மறை மொழி பங்கயன் ... அழகிய பழைய வேதத்தை
ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன்,

இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி ...
அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை
உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி,

அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற ...
பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும்
பொருத்தி,

அனல் அம் கையில் மேவ ... நெருப்பு அழகிய கையில் விளங்க,

அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு ... பார்வதி
தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய
சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும்

அருணையில் மருவும் பெருமாளே. ... திருவண்ணாமலையில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.221  pg 2.222  pg missing.  pg missing. 
 WIKI_urai Song number: 531 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 389 - viragodu vaLai (thiruvaNNAmalai)

virakodu vaLaisang kadamathu tharuvem
     piNikodu vizhiveng ...... kanalpOla

veRikodu samanin RuyirkoLu neRiyin
     Renavithi vazhivan ...... thidupOthiR

karavada mathupon gidumana moduman
     gaiyaruRa vinarkaN ...... punalpAyum

kalakamum varumun kulavinai kaLaiyung
     kazhalthozhu miyalthan ...... tharuLvAyE

paravidu mavarsin thaiyarvida mumizhum
     padavara vaNaikaN ...... thuyilmAlam

pazhamaRai mozhipan gayanimai yavartham
     payamaRa vidamuN ...... deruthERi

aravodu mathiyam pothisadai misaigan
     gaiyumuRa analang ...... kaiyilmEva

Aivaiyu morupan gidamudai yavarthang
     karuNaiyil maruvum ...... perumALE.

......... Meaning .........

virakodu vaLai sangkadam athu tharu vem piNi kodu: He cleverly wields the evil and troublesome rope (of attachment) around my neck

vizhi vem kanal pOla veRi kodu saman ninRu: and stands at my door angrily with fiery sparks in his eyes; He is Yaman (God of Death);

uyir koLLum neRi inRu ena vithi vazhi vanthidu pOthil: he has arrived to take my life at the appointed hour as destined by my fate; at this time,

karavadam athu pongidu manamodu mangaiyar uRavinar kaN punal pAyum kalakamum varu mun: women and relatives, with a treacherous mind, are about to shed tears; before this confusion arises,

kulavinai kaLaiyum kazhal thozhum iyal thanthu aruLvAyE: kindly bless me with the discipline of prostrating at Your hallowed feet that are capable of destroying all my past deeds!

paravidum avar sinthaiyar: He always resides in the hearts of His devotees;

vidam umizhum pada aravu aNai kaN thuyil mAl: He is VishNu, slumbering on a serpent-bed (AdhisEshan), which has several hoods that spew poison;

am pazha maRai mozhi pangayan: He chants the wonderul and old vEdAs; He is BrahmA, seated on the lotus;

imaiyavar tham payam aRa vidam uNdu eruthu ERi: He swallowed the evil AlakAla poison to allay the fears of all the celestials assembled; He mounts His vehicle, Bull (Nandi);

aravodu mathiyam pothi sadai misai gangaiyum uRa anal am kaiyil mEva: He wears the serpent and the crescent moon on His matted hair on which He has also placed River Ganga; He holds fire in one hand;

arivaiyum oru pangu idam udaiyAr thangu: He is concorporate with His Consort, PArvathi Devi, in the left half of His body; He is Lord SivA; thus the entire Trinity reside in

aruNaiyil maruvum perumALE.: ThiruvaNNAmalai which is also Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 389 viragodu vaLai - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]