திருப்புகழ் 390 இடம் அடு சுறவை  (திருவருணை)
Thiruppugazh 390 idamadusuRavai  (thiruvaruNai)
Thiruppugazh - 390 idamadusuRavai - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தனதன தனதன ...... தந்ததான

......... பாடல் .........

இடமடு சுறவை முடுகிய மகர
     மெறிகட லிடையெழு ...... திங்களாலே

இருவினை மகளிர் மருவிய தெருவி
     லெரியென வருசிறு ...... தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய
     சரம்விடு தறுகண ...... நங்கனாலே

சரிவளை கழல மயல்கொளு மரிவை
     தனிமல ரணையின ...... லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்
     மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா

மறமக ளமுத புளகித களப
     வளரிள முலையைம ...... ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி
     லழகுட னருணையி ...... னின்றகோவே

அருமறை விததி முறைமுறை பகரு
     மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு
திங்களாலே
... இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை
விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான
கடலில் எழுகின்ற சந்திரனாலும்,

இரு வினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு
தென்றலாலே
... நல் வினை தீ வினை இரண்டுக்கும் காரணமான
மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வீசுகின்ற சிறிய தென்றல்
காற்றினாலும்,

தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறு கண்
அநங்கனாலே
... தடாகத்தின் நடுவே உள்ள நறு மணம் வீசுகின்ற
கொடியதான தாமரை, நீலோத்பலம் ஆகிய மலர்ப் பாணங்களைச்
செலுத்தும் இரக்கமற்ற மன்மதனாலும்,

சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர்
அணையில் நலங்கலாமோ
... சரிகின்ற வளையல்கள் கழன்று
விழுமாறு காம மோகம் கொள்ளும் இந்தப் பெண் தனியாக மலர்ப்
படுக்கையில் நொந்து போவது தகுமோ?

வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த
வேலா
... வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்ற பெரிய உடலைக்
கொண்ட அசுரர்களின் மணி முடிகள் சிதறிப் போகும்படி செலுத்திய
வேலனே,

மற மகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த
மார்பா
... வேடர் மகளான வள்ளியை, அமுதமும் புளகிதம் கொண்ட
சந்தனக் கலவை பூசப்பட்ட வளர்ந்த இளமை வாய்ந்த மார்பினளான
வள்ளியை, மணம் கொண்ட திருமார்பனே,

அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில்
நின்ற கோவே
... வலிமையும், அலங்காரமும், வசீகரமும், பச்சை
நிறமும் உள்ள மயிலில் அழகுடன் திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் அரசே,

அரு மறை விததி முறை முறை பகரும் அரி அர பிரமர்கள்
தம்பிரானே.
... அரிய வேதங்களின் கூட்டம் முறைப்படி ஓதும்
திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், தென்றல், மன்மதன், மலர்க் கணைகள்,
இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg missing.  pg missing.  pg 2.223  pg 2.224 
 WIKI_urai Song number: 532 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 390 - idam adu suRavai (thiruvaNNAmalai)

idamadu suRavai mudukiya makara
     meRikada lidaiyezhu ...... thingaLAlE

iruvinai makaLir maruviya theruvi
     leriyena varusiRu ...... thenRalAlE

thadanadu vudaiya kadipadu kodiya
     saramvidu thaRukaNa ...... nanganAlE

sarivaLai kazhala mayalkoLu marivai
     thanimala raNaiyina ...... langalAmO

vadakula sayila neduvuda lasurar
     maNimudi sithaRae ...... RinthavElA

maRamaka Lamutha puLakitha kaLapa
     vaLariLa mulaiyaima ...... NanthamArpA

adalaNi vikada marakatha mayili
     lazhakuda naruNaiyi ...... ninRakOvE

arumaRai vithathi muRaimuRai pakaru
     mariyara piramarkaL ...... thambirAnE.

......... Meaning .........

idam adu suRavai mudukiya makaram eRi kadal idai ezhu thingaLAlE: These makara fish stay put in one place and forcefully repel the aggressive sharks in the wavy sea; because of the moon rising from the sea,

iru vinai makaLir maruviya theruvil eri ena varu siRu thenRalAlE: because of the so-called gentle, but fiery, southerly breeze that gushes through the street inhabited by women who are responsible for both good and bad deeds,

thada nadu udaiya kadi padu kodiya saram vidu thaRu kaN ananganAlE: and because of the merciless Manmathan (God of Love) shooting arrows of the fragrant, but cruel, lotus and blue lily, picked from the centre of the pond,

sari vaLai kazhala mayal koLum arivai thani malar aNaiyil nalangalAmO: is it fair that this belle, who is swept by passion, to the extent of her bangle slipping off her hand involuntarily, should toss about all alone on her flowery bed?

vada kula sayila nedu udal asurar maNi mudi sithaRa eRintha vElA: Those demons possessed a huge body comparable to the great mount Meru in the north; You wielded the spear, knocking down their jeweled crowns, Oh Lord!

maRa makaL amutha puLakitha kaLapa vaLar iLa mulaiyai maNantha mArpA: She is the damsel of the hunters; she possesses youthful bosom smeared with sandal paste mixed with nectar and thrills; You hugged that VaLLi with Your chest, Oh Lord!

adal aNi vikadam marakatha mayilil azhakudan aruNaiyil ninRa kOvE: This peacock is strong, highly decorated, enchanting and of a pleasant green hue; You mounted the peacock and took Your seat in ThiruvaNNAmalai, Oh Lord!

aru maRai vithathi muRai muRai pakarum ari ara piramarkaL thambirAnE.: The Trinity, VishNu, SivA and BrahmA, whom the host of VEdAs praise in an orderly way, themselves worship You, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The sea and the waves, the moon, the southerly breeze, the God of Love Manmathan and His flowery arrows are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 390 idam adu suRavai - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]