திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 379 தருண மணி (திருவருணை) Thiruppugazh 379 tharuNamaNi (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று மருவுமென தாவி சற்று ...... மழியாதே மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த கடியமல ராத ரித்த ...... கழல்வீரா அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தருண மணி வான் நிலத்தில் அருண மணி ... தக்க சமயம் பார்த்து ஒளிகொண்ட ஆகாயத்தில் நின்று, செம்மணி நிறத்தினதாய், ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே ... விஷத்தைக் கலந்த நெருப்பை எனது படுக்கையின் மேல் வீசுகின்ற சந்திரனாலும், தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த ... தலைவன் இடத்தினின்றும் நீங்காத என் மனதின் நிலைமையை அறியாது என்னை எதிர்த்த தறு கண் மத வேள் தொடுத்த கணையாலே ... கொடியவனான மன்மதன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும், வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச ... பல இனங்களைச் சேர்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்து பேசும் வசை மொழிகளின் மிகுதியான வம்புப் பேச்சாலும், முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே ... உன்னிடம் முழுமையும் ஈடுபட்டிருந்த என்னுடைய ஆவி கொஞ்சமும் அழியாமல், மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் ... உச்சிக் கொண்டையும், நேர்த்தியான கடிவாள வாரும் கட்டியுள்ள, ஒய்யாரமாய் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் நீ வர வேண்டுகின்றேன். கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா ... கருணை நீங்காத கண்களை உடையவள், சந்தனக் கலவை அழியாத மார்பகத்தை உடையவள், சேர்க்கை இன்பம் நீங்காத மறக்குலத்தவளாகிய வள்ளியின் கணவனே, கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த ... விஷம் உடைய பாம்புகளின் வரிசையை ஜடா மகுடத்தின் மேல் வைத்த, கடி அமலர் ஆதரித்த கழல் வீரா ... சிறிது மாசும் இல்லாத குணத்தவரான, சிவபெருமான் போற்றி வணங்கிய திருப்பாதங்களை உடைய வீரனே, அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் ... சிவந்த ரத்தினங்களில் அமைக்கப்பட்டது போன்ற ஒளி பொருந்திய சூரியன் வலம் வரும் வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே ... வெற்றி விளங்குவதான திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி ... அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து, (யுகமுடிவில் வட துருவத்தினின்று வரும் பெரும் நெருப்பாகிய) வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. ... தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. நிலவு, மன்மதன், மலர்க்கணை, ஊர்ப் பெண்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.199 pg 2.200 pg 2.201 pg 2.202 WIKI_urai Song number: 521 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 379 - tharuNamaNi (thiruvaNNAmalai) tharuNamaNi vAni laththi laruNamaNi yAla vitta thazhalamaLi meethe Rikku ...... nilavAlE thalaimaithavi rAma naththi nilaimaiyaRi yAthe thirththa thaRukaNmatha vELtho duththa ...... kaNaiyAlE varuNamada mAthar katRa vasaiyinmikai pEsa mutRu maruvumena thAvi satRu ...... mazhiyAthE makudamaNi vAri saikkum vikadamathu lAvu cithra mayilinmisai yERi niththam ...... varavENum karuNaiyaka lAvi zhicci kaLapamazhi yAmu laicci kalavitholai yAma Raththi ...... maNavALA kaduvudaiya rAni raiththa sadilamudi meethu vaiththa kadiyamala rAtha riththa ...... kazhalveerA aruNamaNi yAla maiththa kiraNamaNi sUzhum vetRi aruNainakar kOpu raththi ...... luRaivOnE asurarkulam vEra Ruththu vadavanalai meethe zhuppi amararsiRai meeLa vitta ...... perumALE. ......... Meaning ......... tharuNa maNi vAn nilaththil aruNa maNi: It appears at the opportune time like a redstone in the sky Ala vitta thazhal amaLi meethu eRikku(m) nilavAlE: and sends poisonous and fiery rays over my bed; it is that moon; thalaimai thavirA manaththin nilai aRiyAthu ethirththa: without understanding the state of my mind totally dedicated to my Lord, he confronts me thaRu kaN matha vEL thoduththa kaNaiyAlE: and keeps on shooting the flowery arrows at me; it is that merciless Manmathan (God of Love); varuNa mada mAthar katRa vasaiyin mikai pEsa: the stupid women of many a lineage wantonly slander me a lot; it is that gossip; mutRum maruvum enathu Avi satRum azhiyAthE: because of all these, my life, implicitly devoted to You, should not be affected in the least; makuda maNi vAr isaikkum vikadam athu ulAvu(m) sithra mayilin misai ERi niththam varavENum: for that, You must come to me everyday, mounted on Your beautiful peacock, with its crowning little tuft, elegant saddles and a stylish gait! karuNai akalA vizhicci kaLapam azhiyA mulaicci kalavi tholaiyA maRaththi maNavALA: You are the consort of VaLLi, the damsel of the hunters, whose eyes never part with compassion, whose bosom is never without the sandalwood paste and whose pleasure of union with You never leaves her! kadu udaiya arA niraiththa sadila mudi meethu vaiththa: He has placed on His tresses a row of highly poisonous serpents; kadi amalar Athariththa kazhal veerA: He is of unblemished character; that Lord SivA paid obeisance to Your hallowed feet, Oh valorous One! aruNa maNiyAl amaiththa kiraNa maNi sUzhum: The Sun, whose rays appear to have been studded with reddish gems, circumambulates vetRi aruNai nakar kOpuraththil uRaivOnE: the triumphant town of ThiruvaNNAmalai in whose tower You are seated, Oh Lord! asurar kulam vEr aRuththu vada analai meethu ezhuppi: You annihilated the entire clan of the demons and inflamed them with a powerful fire like vadavAgni (the inferno from the North Pole at the end of the aeons); amarar siRai meeLa vitta perumALE.: and unshackled the celestials from their prison, Oh Great One! |
This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan. The moonlight, the God of Love Manmathan, His bow and arrows and the slander-mongering women are a few of the things that aggravate the agony of separation. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |