பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 193 பிரிந்து போகின்ற - பாபத்துக்கு இடந்தருகின்ற பிறவியை அடைந்தே மிக்க நோய்களால் இளைத்துத் திரிகின்ற அடியேனுடைய பிழை பொறுத்தவனே என்றும், என் குற்றங்களைக் களைந்து ஆண்டருள் என்றும், அன்புகொண்டு நான் உன்னை ஒதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ! (கரிய மெய்க்கோலம் உற்ற அரியின்) கரிய உடல் நிறம்கொண்ட திருமாலின், (நல் தாமரைக்கு அமைவ) நல்ல தாமரைக்கு ஒப்பான கண்ணையே, (பற்று ஆசை) மலராகக் கொள்வதற்கு சைகொண்ட அந்தத் திருவடியை உடையோராம் சிவப்பிரான்முன் (சிவபிரானது சந்நிதானத்தில்) கலைநூற் கருத்தை எடுத்து ஒதினவன் (தேவாரப் பாக்களாக ஒதினவன்) (அல்லது கலைகளின் சாரமாம் மூலப்பொருளை உபதேசித்தவன்), கிரவுஞ்ச மலையைத் தொளை செய்தவன், தகுதிவாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிற் கொண்டவன் என்று. அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்துகூறி அடைவோர் கூட்டத்துக்கு (அருள்பாலிக்க) அண்ணா. மலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே! காட்டில் (வாசம்செய்த) தோகை - மயிலன்ன வள்ளியின் அழகிய பெரிய கொங்கைமீது ஆசைகொண்டு தளர்ச்சி பூண்ட அந்த பராக்ரமப் பெருமாளே! (பிரியமுற்று ஒதிடப் பெறுவேனோ) 521. (தருணம்) சமயம் பார்த்து (மணி) ஒளிகொண்ட (வான் நிலத்தில்) ஆகாயத்தில் நின்று (அருணமணி) செம்மணி - மாணிக்கம்போலச் செந்நிறத்ததாய் - ஒலித்து அசைந்துவரும் நெருப்பைப் படுக்கையின்மேல் வீசுகின்ற நிலவாலும் . தலைவனிடத்தினின்றும் நீங்காத என் மனத்தின் நிலைமையை அறியாது (என்னை) எதிர்த்த கொடியவனான செருக்குள்ளவனான மன்மதன் செலுத்தின பாணங்களாலும் .