திருப்புகழ் 332 சுத்தச் சித்த  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 332 suththachchiththa  (kAnjeepuram)
Thiruppugazh - 332 suththachchiththa - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
     சுத்தப் பட்டிட் ...... டமுறாதே

தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
     சொற்குற் றத்துத் ...... துறைநாடி

பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
     றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்

பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
     பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ

அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
     தத்திக் கத்துப் ...... பலமீவாய்

அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
     தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய்

கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
     கைத்தச் சத்திப் ...... படையேவுங்

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுத்தச் சித்தத்து தொல் பத்தர்க்குச் சுத்தப் பட்டு இட்டம்
உறாதே
... தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு
சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல்,

தொக்கப் பொக்கம் சில் கட்சிக்குள் சொல் குற்றத்துத் துறை
நாடி
... மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற்
குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும்,

பித்தத்தைப் பற்றித் தைத் தற்று உற்று ஒத்துக் கித்திப் பிணி
மாதர்
... மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு
ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது
மாதர்களுடைய

பெட்டில் கட்டுத் தட்டுப்பட்டு பிற்பட்டு இட்டுத்
தளர்வேனோ
... பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து,
வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி
உறுவேனோ?

அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்துப்
பலம் ஈவாய்
... அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற
யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப்
போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம்
அளித்தவனே,

அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை தத்திக்குச் செச்சைத்
தொடை சூழ்வாய்
... வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த
திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி
மாலையைச் சூட்டியவனே,

கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக் கைத்தச் சத்திப்
படை ஏவும்
... ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த
மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும்,

கற்பச் சத்திப் பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே. ...
கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை
ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.


* நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள்
ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் - திருமுருகாற்றுப்படை.


** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு
இருந்த பெருங் காதலை விளக்கும் - கந்த புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.77  pg 2.78  pg 2.79  pg 2.80 
 WIKI_urai Song number: 474 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 332 - suththach chiththa (kAnjeepuram)

suththac ciththath thoRpath tharkku
     suththap pattit ...... tamuRAthE

thokkap pokkac ciRkat cikkut
     coRkut Raththuth ...... thuRainAdi

piththath thaippat Riththaith thatRut
     Roththuk kiththip ...... piNimAthar

pettiR kattuth thattup pattup
     piRpat tittuth ...... thaLarvEnO

aththath thaththik kaththaR keyththath
     thaththik kaththup ...... palameevAy

archchith thuppoR cekkoc chaiththath
     thaikkuc cecchaith ...... thodaisUzhvAy

kaththath thiththath thaththiR kokkaik
     kaiththac caththip ...... padaiyEvum

kaRpuc caththip poRpuc caththik
     kacchic chokkap ...... perumALE.

......... Meaning .........

suththac ciththath thoR paththarkku suththap pattittam uRAthE: Not seeking, with an untainted mind, friendship with the old devotees known for their pure heart,

thokkap pokkac ciR katcikkut coRkut Raththuth thuRainAdi: I sought association with some groups full of myths, thereby making blunders in speech in many ways;

piththaththaip patRith thaith thatR utRoththuk kiththip piNimAthar: in a delusory fantasy, I was charmed by the whores who enticed me with their dance (kiththi) conforming to the beat of "thaith thai";

pettiR kattuth thattup pattup piRpat tittuth thaLarvEnO: am I to fall victim to their tantalising speech, lose my balance, deteriorate without any uplift in my life and grow weaker?

aththath thaththik kaththaR keyththath thaththik kaththup palameevAy: You gave strength to that frustrated IndrA, who mounted the elephant AirAvadham, and to the elephant (VishNu*) who had become feeble (through long penance), Oh Lord!

archchith thuppoR cekkoc chaiththath thaikkuc cecchaith thodaisUzhvAy: You offered flowers, in worship**, to the parrot-like, prattling, damsel, VaLLi, and offered her Your garland of Vetchi!

kaththath thiththath thaththiR kokkaik kaiththac caththip padaiyEvum: When the demon SUran assumed the disguise of a mango tree and stood in the roaring sea in a dangerous spot, You wielded on him Your SakthivEl (Powerful Spear);

kaRpuc caththip poRpuc caththik kacchic chokkap perumALE.: You hold in Your hand that Powerful Spear granted to You by Mother PArvathi, the symbol of chastity, and have chosen KAnchipuram as Your abode, Oh Handsome and Great One!


* After a long penance by VishNu, Lord Murugan transformed him into an elephant and mounted it as His vehicle; Hence Murugan got the title KayArUda MUrthi - ThirumurugAtRuppadai.


** The very fact that Murugan worshipped VaLLi with flowers and offered His garland of Vetchi to her stands testimony to His ardent love for VaLLi - Kandha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 332 suththach chiththa - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]