பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத் தைக்குச் செச்சைத் தொடைசூழ்வாய், கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக் கைத்தச் சத்திப் படையேவுங். கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் பெருமாளே (24) 475. தமிழ் பாட தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் தனதான கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக் கொத்துற் றுக்குப் பிணியுற் றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக் கொத்தைச் சொற்கற் றுலகிற் பலபாஷை, (71 - ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) தவத்துக்கு இரங்கி முருகவேள் எதிர்தோன்றத் திருமால் எனக்கு முன் அவமானம் புரிந்த தாரகன் சாத்தனாருக்கு யானை வாகனமாக விளங்குகின்றான். அவன் அஞ்சும்படி என்னை நீ யானை வாகனமாக்கி ஊருதல் வேண்டும் என வேண்டினர். அங்ங்ணமே அவரை யானையாக்கி முருகவேள் ஊர்ந்தனர். இதனால் முருகவேள் "கயாரூட மூர்த்தி" ஆனார். " மதவெங் களிற் றுணர்திப் பெருமான்" தணிகைப் புராணம் (அகத்தியர் 68) "ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி". திருமுருகாற்றுப்படை (பிணிமுகம் - யானை) சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கி பரிபாடல் (5) சுப்ரமணிய பராக்ரமம் - பக்கம் -1.19

    • இளைத்த அத்தி - பானுகோபனுடன் செய்த போரில் இளைத்த அத்தி ஐரர்வதம் எனவும் கொள்ளலாம். இது தணிகையில் முருகவேளைப் பூசித்த இந்திரனால் அவருக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. தணிகைக் கோயிலில் இந்திர திசை (கிழக்கு) நோக்கி இது நிற்கின்றது.

பெண்களி யுடன்நிலை பெறுகென் றிந்திரன் வெண்களி தன்னையும் விசாகற் கிந்து" - தணிகாசல புராணம் 342, (தொடர்ச்சி 73-ஆம் பக்கம் பார்க்க)