திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 298 வட்ட வாள் தன (திருத்தணிகை) Thiruppugazh 298 vattavALthana (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன ...... தனதான ......... பாடல் ......... வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட் டமறி ...... வயலாக முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன் முத்திவீட் டணுக முத்தராக் கசுரு திக்குராக் கொளிரு ...... கழல்தாராய் பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி யெட்டுமாக் குலைய ...... எறிவேலா எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் ... வட்ட வடிவும் ஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும், தாய்க் கிழவி பதி நாடு வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் ... வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு, எனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள், மற்ற கூட்டம் அறிவு அயலாக ... மற்ற உறவினர் கூட்டம், என் அறிவு - இவை எல்லாம் என்னை விட்டு நீங்க, முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் ... நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும் பெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள் (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன், முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க ... (நான்) முக்தி வீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும், சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் ... வேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன் இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக. பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர ... நெற்றிப் பட்டமும், நான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய, இபத்தின் வாள் பிடியின் மணவாளா ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற நடையை உடைய (தேவயானையின்) மணவாளனே, பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி ... பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக் காப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய ஊரிலிருந்த, வள்ளியின் தோள் புணர் தணியில் வேளே ... தோளை அணைந்த திருத்தணிகைத் தலைவனே, எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும் ... தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு மலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்), மாக் குலைய எறி வேலா ... நடுங்கும்படி செலுத்திய வேலனே, எத்திடார்க்கு அரிய முத்த ... உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று இயல்பாகவே நீங்கியவனே), பாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே. ... தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே. |
* இந்திரனுடைய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.635 pg 1.636 WIKI_urai Song number: 265 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 298 - vatta vAL thana (thiruththaNigai) vattavAt tanama naiccipAR kuthalai makkaLthAyk kizhavi ...... pathinAdu vaiththathOt tamanai yaththameet tuporuL matRakUt tamaRi ...... vayalAka muttavOt timika vettumOt terumai muttarpUt tiyenai ...... yazhaiyAmun muththiveet taNuka muththarAk kasuru thikkurAk koLiru ...... kazhalthArAy pattanAR peruma ruppinAR kara ipaththinvAt pidiyin ...... maNavALA paccaivEyp paNavai koccaivEt tuvarpa thiccithOt puNartha ...... NiyilvELE ettunAR karavo ruththalmAth thikiri yettumAk kulaiya ...... eRivElA eththidArk kariya muththapAth thamizhko deththinArk keLiya ...... perumALE. ......... Meaning ......... vattavAt tanama naiccipAR kuthalai: My wife who is gifted with round and bright bosoms, the prattling kids I sired through her, makkaLthAyk kizhavi pathinAdu vaiththa thOtta manai yaththam eettuporuL: my elderly mother, my town, my house, the garden I set up therein, my wealth, all the assets that I have earned, matRakUt tamaRi vayalAka: a host of my relatives and my knowledge - are all about to leave me; muttavOtti mika vettu mOtterumai muttar pUttiyenai yazhaiyAmun: briskly driving their vehicle, a large buffalo that is fast approaching me, these foolish messengers of Yaman (God of Death) are about to throttle my neck with the rope (of attachment) to take my life; before that moment, muththiveet taNuka muththarAkka: enabling me to get liberated and making me one of the emancipated souls, suruthik kurAkkoLiru kazhalthArAy: kindly bless me with Your two hallowed feet which permeate the sacred VEdAs and the bunch of kurA flowers! pattanAR peruma ruppinAR kara: It has a decorated veil over its forehead, four* large tusks of ivory and a hanging trunk; ipaththinvAt pidiyin maNavALA: it is the celestial elephant (AirAvadham), under whose care grew this bright and beautiful belle, DEvayAnai, with the gait of a female elephant; You are her consort! paccaivEyp paNavai koccaivEt tuvar pathicci: She stands (to guard the millet field) on a raised platform made of raw bamboo; she comes from a town of hunters of a simple unpretentious lineage; thOt puNar thaNiyilvELE: You embraced the shoulders of that VaLLi, Oh Lord of ThiruththaNigai! ettunAR karavo ruththalmAth thikiri yettumAk kulaiya eRivElA: The elephants with hanging trunks and the eight large mountains (Mount Krouncha and the seven protective mountains of the demons' clan) shuddered when You wielded the spear, Oh Lord! eththidArk kariya muththa: You are beyond the reach of those who do not worship. You naturally disengage from any kind of attachment! pAththamizhko deththinArk keLiya perumALE.: You are easily accessible to those who sing Your glory in Tamil songs, Oh Great One! |
* IndrA's elephant 'AirAvadham' is known to have four tusks. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |