பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 163 265 வட்டவடிவும், ஒளியும் உள்ள கொங்கையைக் கொண்ட மனைவி, (அவள் பாற் பெற்ற) அவளிடத்திற் பெற்ற மழலைச் சொல். பேசும் குழந்தைகள் (அல்லது, பாலுண்ணும் மழலை மொழி பேசும் குழந்தைகள்), தாய் என்னும் கிழ்வி, (எனது) ஊர், (எனது) நாடு, (எனக்குள்ள) தோட்டம், (எனக்குள்ள) வீடு, (எனக்குள்ள) அத்தம் (செல்வம்), நான் ஈட்டிய (சம்பாதித்த) பொருள், மற்று (என்னைச் சார்ந்த) உற்றார் உறவினர் (தம்) கூட்டம், என் (அறிவு) இவை யெலாம் அயலாக (என்னை விட்டு நீங்க) நன்றாக ஒட்டி மிகவும் கிட்டி வரும் பெரிய எருமை மேல் 驚 (கால துாதராம்) மூடர்கள் (ஆள்கள்), (பாசக் கயிற்றினைப்) பூட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக (நீ) (அடியேன்) ந்தி வீட்டை அணுகிச் சேரவும், (எல்லாம் விட்ட) ஞானியர் போல (என்னை), ஆக்கவும், வேதத்தினுள்ளும், குராமலர்களினுள்ளும் ஒளிர்கின்ற் (விளங்குகின்ற) (உனது) கழலணிந்த சேவடியைத் தந்தருளுக. நெற்றிப் பட்டமும், நான்கு பெரிய தந்தங்களும், தொங்கு கின்ற துதிக்கையையும் உடைய யானை ஐராவதம் (வளர்த்த) ஒளி பொருந்திய பெண் யானை அனைய நடையை உடைய தேவசேனையின் மணவாளனே! பசிய மூங்கிலாலாய பரண் மீதிருந்த இழிகுல வேடரின் ஊரிலிருந்தவள்ளியின் தோளை அணைந்த தண்ரிகை வேளே! எட்டு - தொங்கும் துதிக்கையை உடைய - யானைகளும் (அஷ்டகஜங்களும்), பெரிய மலைகள் எட்டுடனே (அஷ்ட பர்வதங்களுடனே) நடுங்கும்படிச் செலுத்திய வேலனே! ஏத்தித் துதிக்காதவர்க்கு அரிய முத்தனே (பாசங்களில் நீங்கியவனே), பாடல்களைத் தமிழிற் பாடி (தமிழ் பாக்களால்) உன்னைப் போற்றுபவர்க்கு எளிய பெருமாளே! (கழல் தாராய்)