திருப்புகழ் 186 முதிரவுழையை  (பழநி)
Thiruppugazh 186 mudhiravuzhaiyai  (pazhani)
Thiruppugazh - 186 mudhiravuzhaiyai - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனத்த தனன தனன தனத்த
     தனன தனன தனத்த ...... தனதான

......... பாடல் .........

முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
     முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
     முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
     வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
     மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
     சகடு மருத முதைத்த ...... தகவோடே

தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
     தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
     அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே

அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
     ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய
கயல்கள் கயத்தின் இடை ஓடி முரண வளரும் விழிக்குள்
மதன விரகு பயிற்றி
... நன்றாக மானை காட்டுக்குள் துரத்தி,
மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய கயல் மீன்களை
குளத்தினிடையே (புகும்படி) ஓட்டி* (இவ்வாறு இவைகளுடன்)
மாறுபட்டு வளர்கின்ற கண்களால் காம லீலைத் தந்திரங்களைச் செய்து,

முறைமை கெடவு(ம்) மயக்கி வரு(ம்) மாதர் மதுர அமுத
மொழிக்கு(ம்) மகுட களப முலைக்கு(ம்) வலிய அடிமை
புகுத்தி விடு
... எனது ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது
மகளிருடைய இனிமையான அமுதம் போன்ற சொற்களுக்கும், அணி
முடி போன்றதும் கலவைச் சந்தனம் அணிந்ததுமான மார்பகத்துக்கும்
வலிய இழுத்து என்னை அடிமைப் படுத்தி

மாய மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ உனது பதத்தை அருள்வாயே
... விடுகின்ற மாயம் நிறைந்த
மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழு பொய்யன். களிக்கும்படி
உன் திருவடியைத் தந்து எனக்கு அருள்வாயாக.

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து
சகடு மருதம் உதைத்த தகவோடே தழையு(ம்) மரமு(ம்)
நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய
சமர்த்தன் மருகோனே
... திறமை வாய்ந்தவனும், (கயிலை) மலையை
அசைத்து எடுத்தவனுமான அரக்கனாகிய ராவணனின் உடலை
அழித்தும், (சகடாசுரனாக வந்த) வண்டிச் சக்கரத்தை உதைத்தும்,
மருத மரத்தையும் வீழ்த்தித் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும்,
மரமும் பூமியில் பட்டு அழியவும் கடும்போர் புரிந்த வில் ஏந்திய
சமர்த்தனுமாகிய திருமாலின் மருகனே,

அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர்
சிறையை விடுத்து வருவோனே
... பூமி அதிரும்படியாக விரைந்து
நெருங்கி வந்து எதிர்த்த அசுரர்களின் உடலை வதைத்து, தேவர்களைச்
சிறையினின்றும் மீள வைத்து எழுந்தருளியவனே.

அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு
மயிலை நடத்தும் பெருமாளே.
... அருமையான புகழைக் கொண்ட
பெருமை வாய்ந்த பழனி மலையில் அழகான மயிலை நடத்தும்
பெருமாளே.


* மாதர் கண்களுக்கு மான், மாவடு, கயல் மீன்கள் ஒப்பாகா
என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.456  pg 1.457  pg 1.458  pg 1.459 
 WIKI_urai Song number: 188 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 186 - mudhiravuzhaiyai (pazhani)

muthira vuzhaiyai vanaththil muduki vaduvai yazhiththu
     muthiya kayalkaL kayaththi ...... nidaiyOdi

muraNa vaLarum vizhikkuL mathana viraku payitRi
     muRaimai kedavu mayakki ...... varumAthar

mathura amutha mozhikku makuda kaLapa mulaikku
     valiya adimai pukuththi ...... vidumAya

manathai yudaiya asattu manithan muzhuthu purattan
     makizha vunathu pathaththai ...... yaruLvAyE

sathuran varaiyai yeduththa nirutha nudalai vathaiththu
     sakadu marutha muthaiththa ...... thakavOdE

thazhaiyu maramu nilaththil madiya amarai viLaiththa
     thanuvai yudaiya samarththan ...... marukOnE

athira muduki yethirththa asura rudalai vathaiththu
     amarar siRaiyai viduththu ...... varuvOnE

ariya pukazhai yamaiththa periya pazhani malaikku
     Lazhaku mayilai nadaththu ...... perumALE.

......... Meaning .........

muthira uzhaiyai vanaththil muduki vaduvai azhiththu muthiya kayalkaL kayaththin idai Odi muraNa vaLarum vizhikkuL mathana viraku payitRi: Driving away the deer deep into the forest, making pickle out of the baby mango (in the brine) and catching hold of the big kayal fish and forcibly throwing them back in the pond*, the eyes (of the whores) thrive in contrast with them all and carry on erotic tricks;

muRaimai kedavu(m) mayakki varu(m) mAthar mathura amutha mozhikku(m) makuda kaLapa mulaikku(m) valiya adimai pukuththi vidu: these whores entice me with their nectar-like sweet speech making me stray from the righteous path; they forcibly pull me to their crown-like bosom, smeared with a paste of sandalwood powder, and literally enslave me;

mAya manathai udaiya asattu manithan muzhuthu purattan makizha unathu pathaththai aruLvAyE: I have the delusory mind that succumbs to their overtures; I am not only foolish but also the biggest liar; kindly elate me by granting Your hallowed feet, Oh Lord!

sathuran varaiyai eduththa niruthan udalai vaLaiththu sakadu marutham uthaiththa thakavOdE thazhaiyu(m) maramu(m) nilaththil madiya amarai viLaiththa thanuvai udaiya samarththan marukOnE: He is an accomplished warrior; He destroyed the body of the demon RAvaNan who lifted the Mount Kayilai; He kicked the carriage-wheel (in whose disguise came the demon Sakatan); He felled down the marutha trees; with that kind of valour, He waged an intense war holding the bow in His hand, annihilating the leaves and trees by smashing them down to the earth; and You are the nephew of that clever and great Lord VishNu!

athira muduki ethirththa asurar udalai vathaiththu amarar siRaiyai viduththu varuvOnE: When the demons came confronting menacingly sending a wave of shudder throughout the earth, You killed them all and liberated the celestials from their prison, and stood prominently, Oh Lord!

ariya pukazhai amaiththa periya pazhani malaikkuL azhaku mayilai nadaththum perumALE.: This Mount Pazhani has a unique fame and distinction as You reside here and drive the beautiful peacock as Your vehicle, Oh Great One!


* The poet stresses that neither the deer, nor the baby mango nor the kayal fish is comparable to the beauty of the eyes of the women.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 186 mudhiravuzhaiyai - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]