பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி! திருப்புகழ் உரை 441 சொல்: அரியர் எனச் சொல்லத்தக்க உமை கணவராம் வபிரான் தமது உள்ளத்தில் வீற்றிருக்கும் பரமகுரு நீ என்று (உன்னை) விரும்பும் இளையவனே! சங்கு மணிகள் ஒளிவீசும் (பழநிமலையில்),அழகிய ᏞᏝ☾ᏈYGua உச்சி (அல்லது ஒளிவீசும் மலை உச்சி) திங்களைத் தீண்டும் பழநி மல்ையில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஞானம் அருளாயோ) 188 நன்றாக மானைக் காட்டுக்குள் துரத்தி, ஒட்டி, மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய க்யல் மீன்களைக் குளத்திடையே புகும்படி ஒட்டி, (இவ்வாறு இவைகளுடன்) மாறுபட்டு வளர்கின்ற கண் களால் காமலீலைத் தந்திரங்களைச் செய்து (எனது) ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது மகளிருடைய இனிமை நிறைந்த அமுதச் சொற்களுக்கும், அணிமுடி (கிரீடம்) போன்றதும், வாசனைக் கலவைச் சாந்து அணிந்ததுமான முலைக்கும், வலிய த்து (என்னை) அடிமைப் புகுத்தி விடுகின்ற மாயம் நிற்ைந்த் மனதை உடைய அசட்டு மனிதனாகிய நான், முழுப் புரட்டனாகிய நான், மகிழும்படி உனது திருவடியை அருள்வாயே. திறமை வாய்ந்தவனும், (கயிலை)மலையை அசைத்து எடுத்த அரக்கனுமாகிய ராவணனுடைய உடலை அழித்தும், சகடு (வண்டியை) உதைத்தும், மருதமரத்தைத் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும் மரம் மியிற் பட்டு அழியவும் போர்புரிந்த் - வில்ஏந்திய சமர்த்தனுமான திருமாலின் மருகனே! (பூமி) அதிரும்படியாக விரைந்து நெருங்கிவந்து எதிர்த்த அசுரர்களுடைய உடலை வதைத்துத் தேவர்களைச் சிறையினின்றும் மீளவைத்து எழுந்தருளியவனே!