திருப்புகழ் 154 சகடத்திற் குழை  (பழநி)
Thiruppugazh 154 sagadaththiRkuzhai  (pazhani)
Thiruppugazh - 154 sagadaththiRkuzhai - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

சகடத்திற் குழையிட் டெற்றிக்
     குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
     கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
     களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான

தனதுத்திப் படிகப் பொற்பிட்
     டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
     தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
     சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்

சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
     பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
     பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
     தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற்

சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
     டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
     கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
     கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ

திகுடத்திக் குகுடட் டுட்டுட்
     டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
     தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
     தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி

திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
     பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
     தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
     சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா

பகலைப்பற் சொரியத் தக்கற்
     பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
     சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
     குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே

பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
     றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
     திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
     பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சகடத்தில் குழை இட்டு எற்றிக் குழலுக்குச் சரம் வைத்து
எற்றி
... சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர்
மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும்,

புளகித்துக் குவளைக் கண் பொன் கணை ஒத்திட்டு உழலச்
சுத்தித் தரளப் பல் பவளத்து ஒட்ட
... புளகாங்கிதம் கொண்டு
குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய
முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க,

களப அப்(பி) ஒட்டுதல் இட்ட அத்திக் குவடு ஆன தன
துத்திப் படிகம் பொற்பு இட்டு அசைய
... சந்தனக் கலவை
அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி
மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய,

பெள் பசளைத் துப்புக் கொடி ஒத்திட்டு இடையில் பட்டைத்
தகையில் தொட்டு உகளப் பச்சைச் சரணத்துக்கு இயலச்
சுற்றிச் சுழல் இட்டு
... விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக்
கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி
இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி
வளைய உடுத்தி,

கடனைப் பற்றிக் கொளு மாதர் சுகம் உற்றுக் கவலைப் பட்டுப்
பொருள் கெட்டுக் கடை கெட்டுச் சொல் குளறிட்டுத் தடி
தொட்டு எற்றி
... (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக்
கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப்
பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி,
ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து,

பிணி உற்றுக் கசதிப் பட்டுச் சுக துக்கத்து இடர் கெட்டு
உற்றுத் தளர் பட்டுக் கிடை பட்டு உப்பிக் கிடை நாளில்
...
நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை
அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல்
வீங்கிக் கிடக்கும் நாட்களில்,

சுழலர்ச் சக்கிரியைச் சுற்றிட்டு இறுகக் கட்டி உயிரைப் பற்றிக்
கொள் உகப் பற்பலரைக் கட்டிக் கரம் வைத்துத் தலையில்
குத்திச் சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரை இட்டுப்
பொடி பட்டு உட்கிச் சடம் ஆமோ
... சுழன்று வரும் யம தூதர்கள்
பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக்
கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி,
கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய
கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி
பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது
ஆகுமோ?

திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத்
தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத்
தட்டுட்டு இடிபேரி
... திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட்
டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத்
தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு
என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை,

திமிலைக் கைத்துடி தட்டு எக்கைப் பகடு இட்டுப் பறை
ஒத்த கண் திகை எட்டுக் கடல் வற்றித் தித்தர உக்கக் கிரி
எட்டுத் தைத்தியருக்குச் சிரம் இற்று உட்கச் சுரர் பொன் பூச்
சொரியக் கைத் தொட்டிடும் வேலா
... திமிலை என்னும் ஒரு
வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை
கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க,
இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக்
கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை
முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக்
கரத்தில் எடுத்த வேலாயுதனே,

பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்
இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு
அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு
ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே
... சூரியனின்
பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன்
தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை
அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச்
சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம்
புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப்
பொருளை உபதேசித்து அருளியவனே,

பவளப் பொன் கிரி துத்திப் பொன் தன கொச்சைக் கிளி
சொல் பற்றிப் பரிவு உற்றுக் கமலப் புட்பத்து இதழ் பற்றிப்
புணர்ச் சித்ரப் பொன் படிகத்துப் பவளப் பச்சைப் பத முத்துப்
பழநிச் சொக்கப் பெருமாளே.
... பவளப் பொன் மலை போல,
தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான
கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில்
ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி
சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும்
மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில்
வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.372  pg 1.373  pg 1.374  pg 1.375  pg 1.376  pg 1.377 
 WIKI_urai Song number: 154 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 154 - sagadaththiR kuzhai (pazhani)

chakadaththiR kuzhaiyit tetRik
     kuzhalukkuc charamvaith thetRip
puLakiththuk kuvaLaik katpoR
     kaNaiyoththit tuzhalac chuththith
tharaLappaR pavaLath thottak
     kaLapappot tuthalit taththik ...... kuvadAna

thanathuththip padikap poRpit
     tasaiyappet pasaLaith thuppuk
kodiyoththit tidaiyiR pattaith
     thakaiyitRot tukaLap pacchaic
charaNaththuk kiyalac chutRic
     chuzhalittuk kadanaip patRik ...... koLumAthar

sukamutRuk kavalaip pattup
     poruLkettuk kadaiket tucchoR
kuLaRittuth thadithot tetRip
     piNiyutRuk kasathip pattuc
cukathukkath thidarket tutRuth
     thaLarpattuk kidaipat tuppik ...... kidainALiR

suzhalarcchak kiriyaic chutRit
     tiRukakkat tuyiraip patRik
koLukappaR palaraik kattik
     karamvaiththuth thalaiyiR kuththic
chudukattaic chudalaik kattaik
     kiraiyittup podipat tutkic ...... chadamAmO

thikudaththik kukudat tuttut
     damadattat damadat tikkut
dimidittit timidit tikkuth
     thokuthokkuth thokuthath thokkuc
chekaNakkac chekaNac chekkuth
     thakudaththath thakudath thattut ...... tidipEri

thimilaikkaith thudithat tekkaip
     pakadittup paRaiyoth thakkat
tikaiyettuk kadalvat Riththith
     tharavukkak kiriyet tuththaith
thiyarukkuc chiramit Rutkac
     curarpoRpuc choriyak kaiththot ...... tidumvElA

pakalaippaR choriyath thakkaR
     pathipukkat tazhalit tuththit
puramatkik kazhaiviR putpac
     charanaic chut tayanaik koththip
pavurikkot paramark kucchaR
     guruvoththup poruLaik kaRpith ...... tharuLvOnE

pavaLappoR kirithuth thippot
     Ranakocchaik kiLichoR patRip
parivutRuk kamalap putpath
     thithazhpatRip puNarcchith rappoR
padikaththup pavaLap pacchaip
     pathamuththup pazhanic chokkap ...... perumALE.

......... Meaning .........

chakadaththil kuzhai ittu etRik kuzhalukkuc charam vaiththu etRi: Their ear-studs, round like the wheel, strike the heart of the on-lookers; the garlands worn on their hair-do also attack;

puLakiththuk kuvaLaik kaN pon kaNai oththittu uzhalac chuththith tharaLap pal pavaLaththu otta: their exhilarated eyes, looking like lilies, roll like arrow; their teeth, that are like pure pearl, shine, staying close to their coral-like lips;

kaLapa ap(pi) ottuthal itta aththik kuvadu Ana thana thuththip padikam poRpu ittu asaiya: their swaying breasts, stained by discoloured skin and looking like an elephant smeared with sandalwood paste and like the mountain, are adorned with beautiful crystal jewels;

peL pasaLaith thuppuk kodi oththittu idaiyil pattaith thakaiyil thottu ukaLap pacchaic charaNaththukku iyalac chutRic chuzhal ittu: around their waist that looks like pasaLai (pot-herb) and coral creepers, silk cloth is wrapped that hangs elegantly right down to their two greenish feet;

kadanaip patRik koLu mAthar sukam utRuk kavalaip pattup poruL kettuk kadai kettuc chol kuLaRittuth thadi thottu etRi: enjoying the coital pleasure offered by these whores who grab the money (due to them), brooding later over all the wealth lost, deteriorating in health totally, with speech impaired, walking with the help of a cane,

piNi utRuk kasathip pattuc cuka thukkaththu idar kettu utRuth thaLar pattuk kidai pattu uppik kidai nALil: falling sick, feeling miserable, going through the gyration of happiness and sadness that causes suffering and depression, and finally on those days when I lie down on the bed with a swollen body,

chuzhalarc chakkiriyaic chutRittu iRukak katti uyiraip patRik koL ukap paRpalaraik kattik karam vaiththuth thalaiyil kuththic chudu kattaic chudalaik kattaikku irai ittup podi pattu utkic chadam AmO: the messengers of Yaman (God of Death) come whirling and tie my life to the tight rope of bondage to take it away; many friends and relatives hug my body and beat their heads with their hands; then the combustible log that is my body is fed to the pieces of firewood in the cremation ground and is pulverised into ashes; how could such a mortal body be something that one cherishes?

thikudaththik kukudat tuttut tamadattat tamadat tikkut timidittit timidit tikkuth thokuthokkuth thokuthath thokkuc chekaNakkac chekaNac chekkuth thakudaththath thakudath thattuttu idipEri: The big drum, pErikai, was making thunderous sound in the meter "thikudaththik kukudat tuttut tamadattat tamadat tikkut timidittit timidit tikkuth thokuthokkuth thokuthath thokkuc chekaNakkac chekaNac chekkuth thakudaththath thakudath thattuttu";

thimilaik kaiththudi thattu ekkaip pakadu ittup paRai oththa kaN thikai ettuk kadal vatRith thiththara ukkak kiri ettuth thaiththiyarukkuc chiram itRu utkac churar pon pUc choriyak kaith thottidum vElA: a different kind of drum, thimilai, the small hand-drum (udukkai) and another drum, paRai, that makes a loud noise, were all beaten making a big din; all the wide seas, in the eight directions, dried up and spewed out fire; the eight mountains were weakened and shaken from their base; the heads of the demons were severed and destroyed; and the celestials showered golden flowers as You wielded the spear from Your hallowed hand, Oh Lord!

pakalaip pal coriyath thakkan pathi pukku attu azhal ittuth thiN puram matkik kazhai vil putpac charanaic chuttu ayanaik koththip pavurik koL paramarkkuc chaRguru oththup poruLaik kaRpiththu aruLvOnE: He knocked down the teeth of the Sun; He went into the capital city of Dhakshan and killed him by setting fire on his head; He burnt down the strong Thiripuram and Manmathan (God of Love) holding a bow of sugarcane and arrows of flowers; He severed the head of Brahma; and He dances the cosmic dance; to that Lord SivA, You graciously preached, as a great Master, the meaning of PraNava ManthrA, Oh Lord!

pavaLap pon kiri thuththip pon thana kocchaik kiLi chol patRip parivu utRuk kamalap putpaththu ithazh patRip puNarc chithrap pon padikaththup pavaLap pacchaip patha muththup pazhanic chokkap perumALE.: She is bestowed with discoloured breasts that are like coral and golden mountains; her speech is like that of the prattling parrot; being attracted by her sweet words, You kissed her lotus-like lips and enjoyed Your union with her, Oh Lord! This town Pazhani elates one's mind like the beautiful gold, the marble, the coral, the emerald and the pleasing pearl, and You are seated here, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 154 sagadaththiR kuzhai - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]