பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 359 கழன்று திரிந்து வரும் (கால தூதர்கள்) சக்கிரியால் (பாம்பு போன்ற பாசக் கயிற்றால்) சுற்றிட்டு, அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும்போது, பற்பலர் (உற்றார் - உறவினர்) (உயிர் பிரிந்த ) என் உடலைக் கட்டி அணைத் தும், கைகளால் தலையில் அடித்துக் கொண்டும் (துன்பத்தைக் காட்டிச்) சுடவேண்டிய என் உடற் கட்டையைச் சுடலையில் (அடுக்கி வைத் துள்ள) விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி (ஈற்றில்)" பொடிபட்டுச் சாம்பலாய் ஒழிந்து போகும் என அஞ்சத்தக்க இந்த உடல் விரும்பத் தக்கது ஆமா? (விருப்பத் தகாது என்றபடி). திகுடத்திக் குகுடட் டுட்டுட் தகுடத் தட்டுட் என இடி போல முழங்கும் பேரி வாத்தியம் திமிலை என்னும் பறை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை - இவையெலாம் முழங்க, இடம் அகன்ற திசைகள் எட்டிலும் உள்ள ட்டல் வற்றித் தீயைத் தர (தியைக் கக்க) தளர்ந்து அஷட பர்வதங்களும் (எண் கிரிகளும் நிலைகுலைய), அசுரர்கள் தலை முறிந்து அஞ்சத், தேவர்கள் கற்பகப் பூமாரி சொரியத் திருக்கரத்தில் எடுத்த வேலாயுதனே, சூரியனுடைய பற்களைத் தகர்த்தும், தக்கனது தலைநகரில் (வேள்விச் சாலையிற்) புகுந்து, அங்கே அவனைக் கொன்று, (அவன் தலையை) நெருப்பில் இட்டும், திண் னிய திரிபுரத்தை அழித்தும், கரும்பு வில்லையும் மலர்ப் பாணத்தையும் கொண்ட மன்மதனைச் சுட்டெரித்தும், பிரமனது தலையைக் கொத்தி (அரிந்தும்), நடனம் கொண்ட பரமேசனுக்குச் சற்குருவாய் அமைந்து (பிரணவப்) பொருளை அவருக்கு உபதேசித் -“/, ருளிய பவனே!