பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 361 பவளப் பொன்மலை போலத் தேமலுடன் அழகிய கொங்கைகளையும், கொச்சை மொழியையும் (திருந்தாப் பேச்சையும் உடைய கிளி ப்ோன்ற வள்ளியின் சொற்களில் ஆசை வைத்துப் பற்றி, அன்பு பூண்டு, அவளது தாமரைப் பூப்போன்ற இதழமுதைப் பற்றி உண்டு சேர்ந்து, களித்த (பெருமாள்ே) (அல்லது களித்த அழகனே!) (அழகிய) பொன்னும், பளிங்கும், பவளமும், மரகதமும், இன்பமுத்தும் (போல மனதுக்கு இனிய) பழநிச் சொக்கப் பெருமாளே! (இச் சடம் ஆமோ!) 155 முத்துக் குச்சு அணிந்து, அதில் குப்பி என்ற ஆபரணத்தைத் (திருகு பில்லை போன்ற) சடை யணியை முடித்துப், மாலையைப் பின்னர்ச் சுற்றி, முன்புறத்தில் அழகு . நெற்றியின் மேல் - சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டு அணிகலமாம் ரத்னச் சுட்டி, அழகிய பட்டுச் ய இவைகளை ந் ஒழுங்காகவும், விசித்திரமாகவும் அ து நல்ல பேரழகு ப்ொலிய - இனிமை தரும்படி சொல்லும் சொல், பவளம் போன்ற இதழ், ஷத்தைக் கக்கும் கண், கற்பனை உரைகள் இவை தம்ைக்கொண்டு மயக்குவிப்போரது சிமிழை ஒத்ததும், ரவிக்கை அணிந்ததுமான கொங்கையாகிய மேரு மலையைத் - திடமாக (செவ்வையாக)ப் பற்றிப் பல விதமான நாணம் கொள்ளத்தக்க (வெட்கப் படும்படியான) செயல்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு, உயிர் சிக்கி (மாட்டிக் கொண்டு) மயங்கிக் கேடுற்று இவ்வண்ணம் திரிவேனோ! (இங்ங்னம்) அதிகமான துக்கத்தை அநுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் (நன் "2) உன்னை மெச்சிப் புகழ்ந்து சொர்க்கத்திலும் (தேவ ருலகினும்) மேம்பட்ட ஞான வீட்டைப் (பெறுமாறு) அருள்வாயாக.