திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 39 கண்டுமொழி (திருச்செந்தூர்) Thiruppugazh 39 kaNdumozhi (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய் வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கண்டுமொழி கொம்பு கொங்கை ... கற்கண்டுச் சொல், யானைத் தந்தம் போன்ற மார்பு, வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள் ... வஞ்சிக் கொடி போன்ற இடை, அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள், குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டு ... கூந்தல் மேகம் போன்றது என பலமுறையும் உவமை கண்டு, உளம்வ ருந்தி நொந்து ... உள்ளம் வருந்தி, நொந்து போய், மங்கையர்வசம்புரிந்து ... மாதர்களின் வசப்பட்டு, கங்குல்பகல் என்று நின்று ... இரவும் பகலுமாக நின்று, விதியாலே பண்டைவினை கொண்டு உழன்று ... விதியின் பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து, வெந்துவிழுகின்றல் கண்டு ... என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு, பங்கயப தங்கள் தந்து ... உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து, புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன் கலந்து ... உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன் கலந்து பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய் ... நான் நற்குணம் பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக. வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு ... வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையைப் பூண்டு, அறநெருங்கியிண்டு வம்பினைய டைந்து ... மிக நெருக்கமாக நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து, சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை ... சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை வருத்துகின்ற மார்பினள், மென்குறம டந்தை செங்கை ... மென்மையான குறப்பெண் வள்ளியின் சிவந்த கைகளை வந்தழகுடன்கலந்த மணிமார்பா ... அவளது இடத்துக்கு (வள்ளிமலைக்கு)ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே. திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு ... திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய வேண்டுவதைக் கண்டு, செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே சென்று ... செவ்விய போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று, அசுரர் அஞ்ச வென்று ... போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி வெற்றி கொண்டு, குன்றிடை மணம்புணர்ந்து ... (திருப்பரங்) குன்றத்தில் தேவயானையை மணம்புரிந்து, செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே. ... திருச்செந்தூர்ப்பதியில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.160 pg 1.161 pg 1.162 pg 1.163 WIKI_urai Song number: 59 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 39 - kaNdumozhi (thiruchchendhUr) kaNdumozhi kombu kongai vanjiyidai yambu nanju kaNkaLkuzhal koNdal enRu ...... palakAlum kaNduLamva runthi nonthu mangaiyrva sampu rinthu kangulpakal enRu ninRu ...... vithiyAlE paNdaivinai koNdu zhanRu venthuvizhu kinRal kaNdu pangayapa thangkaL thanthu ...... pukazhOthum paNpudaiya sinthai yanpar thangaLinu danka lanthu paNpupeRa anja lanja ...... lenavArAy vaNdupadu kinRa thongal koNdaRane rungi yiNdu vampinaiya dainthu canthin ...... mikamUzhki vanjiyaimu nintha kongai menkuRama danthai sengai vanthazhaku danka lantha ...... maNimArbA thiNdiRalpu naintha aNdar thangaLapa yangaL kaNdu senjamarpu nainthu thunga ...... mayilmeethE senRasurar anja venRu kunRidaima Nampu Narnthu senthilnakar vantha marntha ...... perumALE. ......... Meaning ......... kaNdumozhi: Their speech is sweet like sugar candy; kombu kongai: their bosoms are like the ivory tusks of the elephant; vanjiyidai: their waist is slender like the creeper vanji (rattan reed); yambu nanju kaNkaL: their eyes are comparable to arrow and poison; and kuzhal koNdal enRu palakAlum: their hair is like the dark cloud. - so on and so forth, for a long time, kaNduLam varunthi nonthu: I was seeking similarities and so raking my brains to find them. mangaiyr vasam purinthu kangul pagal enRu ninRu: I hankered after the harlots, day and night; vithiyAlE paNdaivinai koNduzhanRu: Due to my fate, my past bad deeds pushed me into aimless roaming. venthu vizhukinRal kaNdu: Now that You are witnessing my mind boiling and spilling over, pangayapa thangkaL thanthu: kindly grant me Your lotus feet so that pukazhOthum paNpudaiya sinthai yanpar thangaLinudanka lanthu: I could join the august company of Your devotees whose virtuous thoughts praise Your glory, paNpupeRa anjal anjalenavArAy: and in order that I attain the same virtue, You must come to me saying "Fear not, Fear not!" vaNdu padukinRa thongal koNdu: Her garland of flowers is swarmed by beetles; aRa nerungi yiNdu vampinai yadainthu: she wears a tight and closely knit blouse; canthin mikamUzhki vanjiyai munintha kongai: her breasts, immersed in sandalwood paste, heavily weigh down upon and oppress her slender vanji (rattan reed) creeper-like waist; menkuRama danthai: she is VaLLi, the petite damsel of the KuRavAs; sengai vanthazhakudan kalantha maNimArbA: and You came to see her at her home (VaLLimalai) and joined hands elegantly with her rosy hands, Oh handsome one with a broad chest! thiNdiRalpu naintha aNdar thangaL apayangaL kaNdu: You heeded to the prayers beseeching You for refuge from the strong and valorous celestials; senjamarpunainthu thunga mayilmeethE: You donned the bright battle-attire, mounting the immaculate peacock, senRasurar anjavenRu: and rushed to the battlefield to conquer the terrified demons. kunRidai maNam puNarnthu: Then You married DEvayAnai at the holy mount (ThirupparangkundRam) and senthilnakar vantha marntha perumALE.: chose ThiruchchendhUr as Your abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |