பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 147 பழவினை தாக்கத் திரிந்து (நான்) (மனம்) வெந்து விழுவதைக் கண்டு (உனது) தாமரை யன்ன திருவடிகளைத் தந்து (உனது) புகழை ஒதும் - பண்பு கொண்ட மனத்தினராம் அன்பர்களுடன் கலந்து (நான்) குணம் அடைய வேண்டி (நீ) அஞ்சல் அஞ்சல் எனக் கூறி வந்தருளுவாயாக வண்டு ஒலிக்கின்ற மாலையைப் பூண்டு, மிக நெருங்கிய, (அழுத்தமான) கச்சு (ரவிக்கையைப்) பூண்டதாய், சந்தனக் குழம்பில்) மிக முழுகிவஞ்சிக்கொடி போலும் இடையை வருத்துகின்ற கொங்கைகளை உடைய மெல்லிய குறப்பெண்ணின் (வள்ளியின்) செங்கைகளை (அவளிக்கும் வள்ளிமலைருக்கு) வந்து அழகுடன் (தொட்டுக்) கலந்த மணி மார்பனே! திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் தம்மாட்டு அபயம் புகுவதைக் கண்டு செவ்விய போர்க் கோலம் பூண்டு தூய மயிலின் மீதே சென்று அசுரர்களை அஞ்சும்படி வென்று (திருப்பரங்குன்றில் வள்ளிமலையில்) மணம் செய்து, திருச்செந். துார்ப் பதியில் வந்து அமர்ந்த பெருமாளே. (அஞ்சல் அஞ்சல் என வாராய்.) (சந்தனம் - கஸ்துாரி இவைகளின் கலவை ஒழுகுகின்ற, புளகங்கொண்ட கொங்கையை உடையவர், நஞ்சும் அமுதமும் கலந்த கண்ணினர், கழுவியெடுத்த பொருத்தமான வாசனை எண்ணெய், ஒழுகும் கூந்தலை உடையவர், எல்லாரோடும் கலகம் செய்கின்ற கயல்மீன் போன்ற கண்கள் பரந்து எட்டும் குழைகளை அணிந்துள்ள தந்திர வாதிகள், பொருள் இல்லாத இளைஞோரைத் (தமது) நடவடிக்கையாலும், பேச்சுக்களாலும் தளர்ச்சி ಆಕೆ செய்பவர், தெருவில் யாரோடும் சிரித்துப் பேசி -