பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 12 திருமுறை பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழுகின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து புகழோதும். பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்கலந்து பண்புபெற அஞ்ச லஞ்ச லெனவாராய் வண்டுபடு கின் ற தொங்கல் கொண்டறநெ ருங்கி 'யிண்டு வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி 'வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகு டன்க லந்த மணிமார்பா: திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு செஞ்சமர்பு னைந்து துங்க மயில் மீதே. சென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்து செந்தில் நகர் வந்த மர்ந்த பெருமாளே. (44) * 60. பொது மகளிர் உறவு அற களபம் ஒழுகிய புளகித முலையினர் 9.கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் எவரோடுங். கலகம் இடுகயல் எறிகுழை விரகியர் பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்; 1. இண்டு - ஈண்டு என்பதன் விகாரம் ஈண்டு - நெருங்கிய. 2. சந்து - சந்தனம். 3. வஞ்சியை முனிந்த கொடிபோலும் இடையை வருத்துகின்ற 4. சமர் புனைந்து - போர்க்கோலங் கொண்டு. 5. இருநோக் கிவளுண்கண் உள்ள தொரு நோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து- திருக்குறள் 1091.