திருப்புகழ் 34 உததியறல் மொண்டு  (திருச்செந்தூர்)
Thiruppugazh 34 udhadhiyaRalmoNdu  (thiruchchendhUr)
Thiruppugazh - 34 udhadhiyaRalmoNdu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தானதன
     தனதனன தந்த தானதன
          தனதனன தந்த தானதன ...... தந்ததான

......... பாடல் .........

உததியறல் மொண்டு சூல்கொள்கரு
     முகிலெனஇ ருண்ட நீலமிக
          வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்

உதிரமெழு துங்க வேலவிழி
     மிடைகடையொ துங்கு பீளைகளு
          முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
     சொருகுபிறை தந்த சூதுகளின்
          வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய்

வனமழியு மங்கை மாதர்களின்
     நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
          வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
     மணவறைபு குந்த நான்முகனும்
          எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல்

இருவிழிது யின்ற நாரணனும்
     உமைமருவு சந்த்ர சேகரனும்
          இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையில்
     அகிலசக அண்ட நாயகிதன்
          மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே

முளைமுருகு சங்கு வீசியலை
     முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
          முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

உததி அறல் மொண்டு சூல் கொள் ... கடலின் நீரை மொண்டு
குடித்துக் கருக் கொண்ட

கரு முகில் என இருண்ட நீல மிக ஒளி திகழு மன்றல் ஓதி ...
கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனை
நிறைந்த கூந்தல்

நரை பஞ்சு போல் ஆய் ... நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய்,

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ... இரத்த ஓட்டம்
நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி,

ஒதுங்கு(ம்) பீளைகளும் முடை தயிர் பிதிர்ந்ததோ இது என ...
துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி

வெம் புலால் ஆய் ... கொடிய மாமிச நாற்றம் உடையதாய்,

மத கரட தந்தி வாயின் இடை சொருகு ... மதநீர் பாயும் சுவடு
கொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள

பிறை தந்த சூதுகளின் வடிவு தரு ... பிறைச் சந்திரனைப் போன்ற
வடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின்
வடிவு கொண்டனவாய்

கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் ... குடங்களைத் தகர்த்து
வளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய்,

வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலை தனை உணர்ந்து ...
அழகு குலைந்து போன மங்கையர்களான (விலை) மாதர்களுடைய
அழகின் (நிலையாமை) நிலையை உணர்ந்து,

தாளில் உறு வழி அடிமை அன்பு கூரும் அது சிந்தியேனோ ...
(உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழி அடிமையாகிய நான்
அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ?

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் ... இதழ்களின் கட்டுகள்
விரிந்த தாமரை மலரின்

மண அறை புகுந்த நான் முகனும் ... நறு மணம் உள்ள வீட்டில்
புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும்,

எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் ... வீசுகின்ற
அலைகள் மோதும் பாற்கடலில் விஷம் மிகுந்த பாம்பாம் ஆதிசேஷன் மேல்

இரு விழி துயின்ற நாரணனும் ... இரு கண்களும் துயில்
கொள்ளும் திருமாலும்,

உமை மருவு சந்த்ர சேகரனும் ... உமையம்மையை இடப்பாகத்தில்
சேர்ந்துள்ள சந்திரசேகர

மூர்த்தியும், இமையவர் வணங்கு(ம்) வாசவனும் நின்று தாழும்
முதல்வ
... தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும் சந்நிதியின் முன்பு
நின்று வணங்கும் முழுமுதற் கடவுளே,

சுக மைந்த ... சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே,

பீடிகையில் அகில சக அண்ட நாயகி தன் ... சிறந்த இருக்கையில்
(அமர்ந்திருந்த உன் தாயின் மடியில் கிடந்து), எல்லா உலகங்களுக்கும்
தலைவியாகிய பார்வதிநாயகியின்

முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே ... குவிந்த
திருமார்பில் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய தலைவனே,

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி ... மிக்க இளமையான
சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி,

மைதவழ்ந்த வாய்பெருகி ... மேகநிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி,

முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே. ... ஞானம்
முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற
தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.154  pg 1.155  pg 1.156  pg 1.157 
 WIKI_urai Song number: 55 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 34 - udhadhiyaRal moNdu (thiruchchendhUr)

uthathiyaRal moNdu cUlkoLkaru
     mukilenai ruNda neelamika
          voLithikazhu manRal Othinarai ...... panjupOlAy

uthiramezhu thunga vElavizhi
     midaikadaiyo thungu peeLaikaLu
          mudaithayirpi thirntha thOithena ...... vempulAlAy

mathakarada thanthi vAyinidai
     sorukupiRai thantha cUthukaLin
          vadivutharu kumpa mOthivaLar ...... kongaithOlAy

vanamazhiyu mangai mAtharkaLin
     nilaithanaiyu Narnthu thALiluRu
          vazhiyadimai yanpu kUrumathu ...... sinthiyEnO

ithazhpothiya vizhntha thAmaraiyin
     maNavaRaipu kuntha nAnmukanum
          eRithiraiya lampu pAluthathi ...... nanjarAmEl

iruvizhithu yinRa nAraNanum
     umaimaruvu canthra sEkaranum
          imaiyavarva Nangu vAsavanum ...... ninRuthAzhum

muthalvasuka maintha peedikaiyil
     akilasaka aNda nAyakithan
          makizhmulaisu rantha pAlamutha ...... muNdavELE

muLaimuruku sangu veesiyalai
     mudukimaitha vazhntha vAyperuki
          muthalivaru senthil vAzhvutharu ...... thambirAnE.

......... Meaning .........

uthathi aRal moNdu cUl koL karu mukil ena: Like the black cloud that became pregnant after guzzling the water of the seas,

iruNda neela mika oLi thikazhu manRal Othi narai panju pOl Ay: their bright and fragrant hair, which used to be dark bluish, turned white like cotton;

uthiram ezhu thunga vEla vizhi midai kadai: at the corners of the spotless spearlike eyes that used to be nice with healthy blood-flow,

othungu(m) peeLaikaLum mudai thayir pithirnthathO ithu ena vem pulAl Ay: mucus has built up as if stinking droplets of curd are sprayed over there, reeking with the smell of rotten meat;

matha karada thanthi vAyin idai soruku piRai thantha cUthukaLin vadivu tharu: formed like the crescent moon and the gambling dice of ivory made from the tusks protruding from the elephant's jaws, which have the mark of the oozing juice of fierceness,

kumpa mOthi vaLar kongai thOlAy: their bosoms, outclassing the shape of the pot, used to be robust but are now reduced to mere crumpled skin;

vanam azhiyum mangai mAtharkaLin nilai thanai uNarnthu: having reconciled to the fact that the beauty these whores got is shortlived,

thALil uRu vazhi adimai anpu kUrum athu sinthiyEnO: and being a slave in the lineage of Your devotees meditating on Your hallowed feet, shall I not also follow the same course that promotes love?

ithazh pothi avizhntha thAmaraiyin maNa aRai pukuntha nAn mukanum: BrahmA, the four-faced Lord, ensconced in the chamber of lotus, with the blossoming petals exuding fragrance,

eRi thirai alampum pAl uthathi nanju arA mEl iru vizhi thuyinRa nAraNanum: Lord VishNu, slumbering with His two eyes closed, on the poisonous Serpent-bed of AdhisEshan upon the wavy milky ocean,

umai maruvu canthra sEkaranum: Lord SivA, concorporate in His body with UmAdEvi, and wearing the crescent moon on His matted hair,

imaiyavar vaNangu(m) vAsavanum, ninRu thAzhum muthalva: and IndrA, the Lord whom all the Celestials worship, are all in front of Your shrine to pay their obeisance, Oh Primordial Lord!

suka maintha: You are the One to grant us the bliss, Oh Lord KumArA,

peedikaiyil akila saka aNda nAyaki than mukizh mulai surantha pAl amutham uNda vELE: Seated on (the lap of Your mother in) a lofty throne, You imbibed the nectar-like milk offered from the budding bosom of Goddess PArvathi, the Mother of the entire universe, Oh Lord!

muLai muruku sangu veesi alai muduki: Baby conch shells are strewn about rapidly by the waves on the shore;

maithavazhntha vAyperuki: the dark seas of the hue of black cloud make this town prosperous;

muthal ivaru senthil vAzhvu tharu thambirAnE.: and this place ThiruchchendhUr, famous for its exalted level of knowledge, is where You protect everyone, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 34 udhadhiyaRal moNdu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]