பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 141 முதல்வனே! சுகமும் அழகும் கொண்ட இருக்கையில் அமர்ந்துள்ள எல்லா உலகங்களுக்கும், அண்டங்களுக்கும் தலைவியாம் நாயகிதன் அரும்பு போன்ற முலைசுரந்த பால் அமுதத்தை உண்ட வேள்ே!. வெளித்தோன்றி முதிர்ந்துள்ள சங்குகளை வீசி அலைகள் விரைந்து நெருங்கி மேகம் தவழ்ந்தது போலப் பெருகி முற்பட்டு உயர்ந்து (கரை) ஏறும் திருச்செந்துாரில் (வீற்றிருந்து) (அடியார்களுக்கு) வாழ்வைத் தருகின்ற தம்பிரான்ே (வழியடிமை அன்பு கூருமது சிந்தியேனோ) 56 அம்பை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடனை, மூடனை, நல்லொழுக்கத்தை விரும்பாதஇழிந்தோனை, விணனை, படிப்பு இல்லாத முழு ஏழையை மடையனை, விட்டு நீங்காத நீண்ட பெருவினை மூடியுள்ள, நோயும் பிணியுங் கொண்டவனை, உண்மை இல்லாதவனை இகழ்ந்து (ஒதுக்காமல்) - சிறந்த மணிகளாலாய சிலம்பணிந்துள்ள (பாதகின்கிணி அணிந்துள்ள) குளிர்ந்த (உன் திருவடிகளை ஒப்பற்ற (பெரு) வாழ்வை (முத்தி யின்பத்த்ை) நான் பெற (எனக்குத்) தந்துதவும் ஒரு நாளும் உண்டோ! புலவர்கள் பாடியுள்ள நூல்களிற் புகழப்பட்டுள்ள நாரத முநிவர் எடுத்துரைத்த குறமகளை (iள்ளியை) - நாடிச் சென்று காட்டிடையே (அவளைக்) கூடிய வீரனே! தலைவனே! சிறந்த மயில் வாகனனே! தேவி, மனோமணி, ஆயி, LIFTTLJoss, தேன்போலும் மொழியாள் (ஆகிய ப்ார்வதி) பெற்ற சிறியவனே! விண்ணளவும் உயர்கின்ற சோலைகளின் நீழலிலே விளங். கும் (சிறந்த கடற்கரைத்தலமாம்) திருச்செந்துாரிலே எழுந்தருளியுள்ள பெருமாளே! (தாள் வாழ்வுற ஈவதும் ஒருநாளே.)